கொடைக்கானலில் உள்ள குணா குகையில் கடந்த 2006ம் ஆண்டு நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் மஞ்சும்மல் பாய்ஸ்.
சிதம்பரம் இயக்கியுள்ள இந்த படத்தின் கதை தமிழ்நாட்டில் நடப்பதால் இங்கும் நன்றாக படம் ஓடுகிறது.
கேரளாவில் மஞ்சும்மல் பகுதியிலிருந்து கொடைக்கானலுக்குச் சுற்றுலா வரும் நண்பர்களில் ஒருவர், குணா குகையில் சிக்கிக் கொள்கிறார், அவரை எப்படி மீட்டார்கள் என்பதுதான் கதை.
பட வசூல்
தமிழ்நாட்டில் நடந்த கதை என்பதால் இங்கேயும் வசூலை குவித்து வருகிறது. தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் பலரும் படம் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருவதாக கூறுகின்றனர்.
மஞ்சும்மல் பாய்ஸ் படம் மொத்தமாக ரூ. 60 கோடி வசூலித்துள்ளதாகவும் தமிழ்நாட்டில் மட்டுடே ரூ. 15 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.