மிகவும் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் வெற்றிமாறனின் ஆடுகளம் பல நடிகர்.. அதிர்ச்சியளிக்கும் புகைப்படம்

70

 

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளிவந்த திரைப்படம் ஆடுகளம். இப்படத்தில் பேட்டைக்காரன் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகர் வி.ஐ.எஸ். ஜெயபாலன். இவர் நடிகர் மட்டுமின்றி எழுத்தாளரும் ஆவார்.

இலங்கையில் பிறந்தவர் இவர் தனது இளம் வயதில் இருந்தே எழுத துவங்கியுள்ளார். ஆடுகளம் படத்தின் மூலம் நடிகராக மாறிய இவர், பின் பாண்டியநாடு, மெட்ராஸ், இன்று நேற்று நாளை போன்ற படங்களில் நடித்து வந்தார்.

ஆபத்தான நிலையில் ஜெயபாலன்
இந்நிலையில், தற்போது உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் ஜெயபாலன் அவர்கள், ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

கல்லீரலில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக உடல்நலம் சரியில்லாமல் போய்விட்டது என கூறப்படுகிறது. மேலும் இவருடைய குடும்பம் பிரான்ஸ் நாட்டில் இருப்பதினால், இவரை வந்து சந்திக்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.

SHARE