விஜய் தொலைக்காட்சியில் நிறைய ஹிட்டான தொடர்கள் ஒளிபரப்பாகி வந்தது, அதில் ஒன்று தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
5 வருடமாக மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த இந்த தொடர் கடந்த வருடம் முடிவுக்கு வந்தது. அண்ணன்-தம்பிகள் அவர்களது வாழ்க்கையை சுற்றியே ஒளிபரப்பான இந்த தொடரில் ஜீவா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் வெங்கட்.
இவர் தற்போது விஜய் டிவியிலேயே கிழக்கு வாசல் என்ற தொடரில் முக்கிய நாயகனாக நடிக்கிறார்.
சோகமான வீடியோ
இன்ஸ்டாவில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் வெங்கட் இப்போது ஒரு சோகமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், எல்லோரின் வாழ்க்கையிலும் ஒரு கனவு இருக்கும், அதற்கான முயற்சிகளை செய்து வருவோம், எனக்கும் அப்படி ஒரு கனவு இருந்தது.
அப்படி ஒரு கனவு தான் விஜய் அண்ணாவுடன் ஒரு படத்தில் ஒரு காட்சியிலாவது நடித்துவிட வேண்டும் என்பது தான்.
கடவுளிடம் தினமும் வேண்டுவேன், ஒரு காட்சயில் கூட நிற்பது போலாவது நடித்துவிட வேண்டும் என வேண்டுவேன். நேற்றும் வேண்டினேன், அதற்கு முந்தைய நாளும் வேண்டினேன் என எமோஷ்னலாக கூறியுள்ளார்.