மிதவாத முஸ்லீம்கள் எங்கே? ஒரு ஆண் 4 பெண்களை திருமணம் செய்து கொள்ளலாம்.

499

george_w_bush2001ல் அமேரிக்க இரட்டை கோபுர தாக்குதலுக்கு பின் அன்றைய அதிபர் புஷ் அவர்கள் சில முஸ்லீம் தலைவர்களுடன் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நிகழ்த்தினார். அதில் அமேரிக்காவின் எதிரிகள் இஸ்லாமிய தீவிரவாதிகள்தான் எனவும் எல்லா முஸ்லீம்களும் இல்லை என்றும் தெளிவு படுத்தினார். “Islam is a religion of Peace” என்றும் கூறினார். அங்கிருந்த முஸ்லீம் தலைவர் ஒருவர் தீவிரவாதிகள் இஸ்லாத்தை தவறாக புரிந்து கொண்டதால்தான் அப்பாவிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்றும் அத்தாக்குதலை அல்லாஹ் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார் என்றும் கூறினார்.

A Muslim schoolgirl from St. Maaz high school practises Chinese wushu martial arts inside the school compound in the southern Indian city of Hyderabad July 8, 2008. Girls from ages 10 to 16 participate in weekly sessions during school term. REUTERS/Krishnendu Halder (INDIA)

images

2008 நவம்பரில் இந்தியாவில் மும்பாய் நகரில் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு பிறகும் இந்திய முஸ்லீம் தலைவர்கள் கிட்டத்தட்ட இதே தொனியில் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

உலகில் நடக்கும் ஒவ்வொரு தீவிரவாத தாக்குதலுக்கு பிறகும் முஸ்லீம் தலைவர்கள் மற்றும் பெரும்பாலான முஸ்லீம் மதகுருமார்கள் அதை எதிர்ப்பது வாடிக்கையாகி விட்டது.

120 கோடி மக்கள் அனுசரிக்கும் ஒரு மதம் மிகவும் பழமையான கொள்கைகளுடனும், சீர்திருத்தங்களை அனுமதிக்காமலும் அனுசரிக்கப் படுவதால் உலகெங்கிலும் மத சச்சரவுகள் கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு சென்றிருக்கிறது.

இதை ஆராயும், முஸ்லீம்கள் அல்லாத பலரும் சீர்திருத்தங்களை அறிவித்த வண்ணம் உள்ளனர்.

நான் இதிலிருந்து வேறுபட்டு முஸ்லீம்கள் மட்டுமே தங்களுக்குள்ளேயே இந்த சீர்திருத்தங்களை மேற்கொள்ள முடியும் என்று நம்புகிறேன். மேலும் மிதவாத முஸ்லீம்களால் மட்டுமே இதை மேற்கொள்ள முடியும் என்றும் இச்சீர்திருத்தங்களை இப்பொழுதே அவர்கள் ஆரம்பிக்கா விட்டால் சமூகங்கள் உச்சகட்ட அழிவுக்கு செல்லும் என்றும் நம்புகிறேன்.

அமேரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல் நடந்த பகுதிக்கு வெகு அருகாமையில் மசூதி ஒன்றை கட்டும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளனர். இதற்கு அமேரிக்கர்களின் மத்தியில் பெரிய அளவில் எதிர்ப்பு எழுந்துள்ளது.

 

முஸ்லீம்களின் பல பழமைவாத கொள்கைகளாலும், குறிப்பாக இந்த புதிய மசூதியின் கட்டமைப்பினாலும் ஏற்படும் பாதகங்கள் மற்றும் இக்கொள்கைகளை இன்றைய யதார்த்தத்தில் சீரமைக்க வேண்டிய அவசியத்தை பற்றியும் அலசுவது இக்கட்டுரையின் நோக்கம்.

முக்கிய குறிப்பு:

நான் முஸ்லீம்கள் அனைவரையும் எதிரிகள் என்றோ, தீவிரவாதிகள் என்றோ நினைக்கவில்லை. சமீபத்தில் பாகிஸ்தானில் ஏற்பட்டிருக்கும் மழையினால் பல கோடி பேர் பாதிக்கப்பட்டிருப்பது நமக்கு தெரியும். பாதிக்கப்பட்ட ஒருவரையும் இந்தியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒரு ஹிந்துவையும் பேட்டி எடுத்தால் இருவரும் ஒரே தொனியில் பேசுவார்கள். மொத்தத்தில் மக்களின் தேவை மிக எளிமையானது. நாகரீகமாக வாழ உரிமை, திறமைக்கும் உழைப்புக்கும் அங்கீகாரம், மனைவி மக்களுடன் வாழ சமூக அங்கீகாரம், தன்னை விட தன் குழந்தைகளை நல்ல நிலையில் வாழ வைக்க நினைக்கும் பெற்றோர், குற்ற செயல்களை செய்வோரின் மீது சட்டப்படி நடவடிக்கை, மனம் தொய்ந்து போகும்போது தேவைப்படும் இசை மற்றும் பிற கேளிக்கைகள், மன அமைதி பெற மதம் இவையெல்லாம் உலகில் உள்ள பெரும்பான்மையான மக்களின் தேவைகள். முஸ்லீம்களாக இருந்தாலும் சரி, ஹிந்துக்களாக இருந்தாலும் சரி, தேவைகள் ஒன்றுதான்.

முஸ்லீம்களுக்கு உருவாகும் பிரச்சினைகள் இந்த தேவைகளை கருத்தில் கொள்ளாது வாழ்வதால் உருவாகுபவை. அவர்களின் சமூக பிரச்சினைகள் மற்ற மதத்தினரையும் பாதிப்பதால் என்னைப் போன்றவர்களும் பேச வேண்டிய நிலை.

பகுதி-I

இரட்டை கோபுர தாக்குதல் பகுதிக்கு அருகில் மசூதி-சர்ச்சை:ayaan-hirsi-ali

அமேரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல் நடந்த இடத்திற்கு அருகில்  13 மாடி இஸ்லாமிய கலாச்சார நிலையம் மற்றும் மசூதி கட்டப்படப்போவது குறித்த சர்ச்சைகள் அமேரிக்காவில் சூடு பிடித்துள்ளது. இவற்றை ஆதரிப்பவர்கள் மற்றும் எதிர்ப்பவர்கள் பற்றிய வேறுபாடுகளை கொஞ்சம் பார்க்கலாம்.

புதிய மசூதியை எதிர்ப்பவர்கள்:

(1) அலி சீனா, வாஃபா சுல்தான், அயான் ஹிர்ஸி அலி போன்றவர்கள்:

இவர்கள் முஸ்லீம்களாக பிறந்து அவர்களின் நாடுகளில் (ஈரான், சோமாலியா போன்றவை) கொடுமை படுத்தப் பட்டவர்கள். மேற்கத்திய நாடுகளுக்கு வந்து குடியேறிய பின் தங்கள் நாட்டை மட்டுமல்லாது தங்களின் தாய் மதமாகிய இஸ்லாத்தின் மீதும் மிகப்பெரிய அளவில் குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்கள். இணைய தளம் மூலமாகவும் மற்ற தகவல் தொடர்பு சாதனங்கள் மூலமாகவும் முஸ்லீம்களை இஸ்லாத்தின் பிடியிலிருந்து காப்பாற்றுகிறோம் என்று கூறுபவர்கள். இவர்களுக்கு ஆயிரக்கணக்கில் ஆதரவாளர்கள் உள்ளார்கள். இஸ்லாத்தை முழுவதுமாக எதிர்ப்பதால் இவர்களுக்கு சாதாரண முஸ்லீம்களிடையே ஆதரவில்லை. இவர்கள் இந்த புதிய மசூதியை மட்டுமல்லாது அனைத்து இஸ்லாமிய விளக்கங்கள் மற்றும் குறியீடுகளை எதிர்ப்பவர்கள்.
zuhdi-jasser
(2) டாக்டர் ஜேஸ்ஸர் (Dr. Zuhdi Jasser) போன்றவர்கள்:

முஸ்லீம்களாகவே இருந்து கொண்டு தங்கள் மதப்புத்தகங்களின் விளக்கங்களை காலத்திற்கு ஏற்றாற்போல மாற்றிக்கொண்டு முஸ்லீம்கள் வாழ வேண்டும், வாழ முடியும் என்று வாதாடுபவர்கள். இவர்களை போன்றவர்களுக்கும் ஆயிரக்கணக்கில் ஆதரவாளர்கள் முஸ்லீம் சமூகத்தில் உண்டு. ஆனாலும் மதகுருமார்களின் கருத்திலிருந்து வேறுபடுவதால் இவர்களுக்கும் சாதாரண முஸ்லீம்களிடம் பெரிய ஆதரவு இல்லை. 9/11 தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் அனுதாபத்திற்காகவும், மனிதர்களின் அடிப்படை உணர்திறனை முன்வைத்தும் (Sensitivity) இந்த புதிய மசூதி கட்டப்படக்கூடாது என்று கூறுபவர்கள்.

(3) கிறிஸ்தவ, யூத கடும்போக்காளர்கள்:

நாம் ஊகிக்கிறபடியே இந்த புதிய மசூதி முஸ்லீம்களின் ஜிஹாத்தின் ஒருவகை என்று கூறுபவர்கள். பிரச்சினை மசூதி கட்டப்படுவதை குறித்து அல்ல. எந்த இடத்தில் கட்டப்படுகிறது என்பதுதான்-என்பது இவர்கள் வாதம். இதற்கு இவர்கள் வரலாற்றிலிருந்து சில ஆதாரங்களை முன் வைக்கிறார்கள். முஸ்லீம்கள் எந்த நாட்டை போரில் வென்றாலும் அந்த நாட்டின் முக்கிய கலாச்சார குறியீட்டை அழித்து அதன் மேல் மசூதி ஒன்றை கட்டியிருக்கிறார்கள். உதாரணமாக ஜெருசெலத்தில் அல்-அக்ஸா மசூதி, இந்தியாவில் முக்கிய கோயில்களை அழித்து அதன்மேல் மசூதிகள் கட்டியது போன்றவை. ஆகவே, இது வெறும் மசூதி அல்ல. இது ஒரு வெற்றி அறைகூவல் என்பது இவர்கள் வாதம்.
pameela-geller
இந்த மசூதிக்கான எதிர்ப்பு முதன்முதலில் ஒரு இணைய தள  Blogல் உருவானது. பமீளா கெல்லர் (Pameela Geller) என்பவர்தான் மே மாதத்தில் இந்த மசூதி கட்டப்பட்டால் அது மேற்கத்திய கலாச்சாரத்தின் அழிவுக்கு ஆரம்ப புள்ளியாக இருக்கும் என்று எழுதியவர். இந்த பெண்மணி ஆரம்பித்து வைத்த இந்த போராட்டம் அமேரிக்காவின் பல மட்டங்களில் வெடித்திருக்கிறது.

(4)அரசியல்வாதிகள்:

பெரும்பான்மையான குடியரசு கட்சி அரசியல்வாதிகளும், ஜனநாயக கட்சியிலேயே சிலரும் இந்த புதிய மசூதி கட்டப்படுவதை எதிர்க்கிறார்கள்.

புதிய மசூதியை ஆதரிப்பவர்கள்:

(1) பெரும்பாலான முஸ்லீம்கள்:

நாம் ஊகிக்கிறபடியே பெரும்பாலான முஸ்லீம்கள் இந்த புதிய மசூதி கட்டப்படுவதை ஆதரிக்கிறார்கள். இந்த கட்டிடத்தில் மசூதி மட்டுமல்லாது “மதங்களுக்கிடையேயான ஒற்றுமை” வளர முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று கூறுகிறார்கள்.

(2) அரசியல்வாதிகள்:

ஜனநாயக கட்சியை சேர்ந்த சில அரசியல்வாதிகள் இந்த புதிய மசூதி கட்டப்படுவதை ஆதரிக்கிறார்கள். குறிப்பாக அமேரிக்க அதிபர் ஒபாமா இதை ஆதரிக்கிறார். அவரின் ஆதரவு பேச்சு மேலும் பல ஆட்சேபனைகளை எழுப்பியது. அடுத்த நாளே தான் அந்த மசூதி கட்டப்பட முடியுமா/முடியாதா என்பதை பற்றித்தான் பேசியதாகவும் அந்த இடத்தில் கட்டப்படுவது சரியா/தவறா என்பதை பற்றி இல்லை என்றும் மறு விளக்கம் அளித்தார்.

(3) பொது ஜனத்திலேயே சிலர்:

முஸ்லீம் தீவிரவாதிகள் சிலரால் தாக்கப்பட்டதற்காக எல்லா முஸ்லீம்களின் மேலும் பழி போடுவது சரியல்ல என்றும் அமேரிக்க அரசியல் சட்டத்தின் அடிப்படையில் “ஒவ்வொரு மனிதனின் மத உரிமை”யின் அடிப்படையிலும் எந்த இடத்திலும் எந்த மதத்தினரும் தங்கள் வழிபாட்டு கட்டிடத்தை கட்டிக்கொள்ள உரிமை உண்டு என்றும் கூறுகிறார்கள்.

இந்த புதிய மசூதிக்கு ஆதரவான மற்றும் எதிரான கருத்துக்களை பார்த்தோம். இங்கு இன்னுமொரு முக்கிய பிரச்சினையையும் கவனிக்க வேண்டும்.

பெயர் சர்ச்சை: (Cordoba Mosque)

cordoba-mosqueஇந்த புதிய மசூதிக்கு “கார்டோபா மசூதி” என்று நாமகரணம் செய்யப் பட்டுள்ளது. “கார்டோபா” என்பதன் பெயரின் வரலாற்றை பார்த்தாக வேண்டும். கார்டோபா என்னும் பழமையான நகரம் ஸ்பெயின் நாட்டில் உள்ளது. இங்கு கி.பி.600களில் ஒரு கிறிஸ்தவ சர்ச் கட்டப்பட்டது. ஆனால் கி.பி.700களில் முஸ்லீம் மன்னர்களால் ஸ்பெயினின் இந்த பகுதி பிடிக்கப் பட்டவுடன் இந்த சர்ச், மசூதியாக மாற்றப்பட்டது. மீண்டும் 1200களில் கிறிஸ்தவ அரசரால் இந்த பிராந்தியம் பிடிக்கப்பட்டவுடன் மீண்டும் சர்ச்சாக மாற்றப்பட்டது. இந்த பெயரின் முக்கியத்துவத்தை வாத பிரதிவாதங்களுடன் நோக்கலாம்.

புதிய மசூதியை ஆதரிப்பவர்களின் வாதம்:

ஸ்பெயினின் இந்த கார்டோபா பகுதி கி.பி. 700களில் முஸ்லீம் அரசர்களின் கைக்கு வந்தும் கூட, கிறிஸ்தவ மற்றும் யூதர்கள் தங்கள் மத நம்பிக்கைகளுடன் வாழ அனுமதி அளிக்க பட்டது. இன்றைய மதச்சார்பற்ற கொள்கைகளை அன்றே முஸ்லீம் மன்னர்கள் அந்த பிராந்தியத்தில் நடத்தி காட்டினார்கள். இங்கு இன்னொரு விஷயத்தையும் கூறியாக வேண்டும். அமேரிக்க அதிபர் ஒபாமா எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் ஒரு சொற்பொழிவு ஆற்றினார். அதில் முஸ்லீம்கள் மதச்சார்பற்றவர்களாக இருந்திருக்கிறார்கள் என்று புகழும்போது குறிப்பாக இந்த கார்டோபா பிராந்திய அரசாங்கத்தை சிலாகித்து பேசினார்.

கிறிஸ்தவ, யூத கடும்போக்காளர்களின் பிரதிவாதம்:

– மதச்சார்பற்ற அரசாங்கம் என்றால் ஏன் அங்கிருந்த சர்ச் அகற்றப்பட்டது?

ஒரு வெற்றி அறைகூவலுக்காகவும், மற்ற மதத்தினர் முஸ்லீம்களுக்கு அடங்கியவர்கள் என்று வெளிபடுத்துவதற்காகவும்தானே சர்ச்சின் இடத்தில் மசூதி கட்டப்பட்டது.

islamic_jihad1– மேலும் கி.பி.1200களில் முஸ்லீம் மன்னர்கள் தோற்கும் நிலை ஏற்பட்டவுடன் அந்த பிராந்தியத்திலிருந்த அத்தனை கிறிஸ்தவ மற்றும் யூதர்களை கொன்று குவித்து விட்டுத்தான் தோற்று ஓடினார்கள். தங்களுடைய அரசாங்கம் இருக்கும்வரை மதச்சார்பற்றவர்கள் போல் நடித்தவர்கள் தாங்கள் தோற்கும் நிலையில் மற்ற மதத்தினரை, அப்பாவிகளை கொன்று போட்டது எப்படி மதச்சார்பற்ற அரசாக வரலாற்றில் பார்க்கப்பட முடியும்?

மேற்கூறிய அனைத்தும் சரித்திரபூர்வமாக ஆவணப்படுத்த பட்டவை. மேலும் அதிபர் ஒபாமா பேசிய பேச்சை பற்றி பி.பி.சி வானொலியில் ஒரு ஆவணத்தொகுப்பை (Documentary) ஒலிபரப்பினார்கள். அதில் பேசிய வரலாற்று அறிஞர்கள் ஒபாமா ஸ்பெயினின் கார்டோபா இஸ்லாமிய அரசாங்கத்தை “மதச்சார்பற்ற அரசாங்கம்” என்று கூறியது தவறுதான் என்றார்கள்.

சரி, இந்த இடத்தில் முக்கியமான ஒரு விஷயத்தை நாம் கவனிக்க வேண்டும். அமேரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் 70%க்கும் அதிகமானோர் இந்த புதிய மசூதி கட்டப்பட அனுமதிக்கக் கூடாது என்று கருதுகிறார்கள்.

இவ்வளவு பெரிய அளவில் கிறிஸ்தவர்களும் யூதர்களும் வெளிப்படுத்தும் இந்த புதிய மசூதிக்கான எதிர்ப்பை சாதாரணமாக எடுத்து கொள்ள முடியாது. இந்நிலை தீடிரென்று ஏற்பட்டதில்லை. பல வருடங்களாக அமேரிக்காவில் தொடரும் உள்நாட்டு தீவிரவாதம் போன்ற காரணங்களால்தான் அமேரிக்கர்களின் இந்த மனநிலை மாற்றம். அமேரிக்காவில் மட்டுமல்லாது பல ஐரோப்பிய நாடுகளிலும் முஸ்லீம்களுக்கு எதிரான மனநிலையை அந்நாட்டு மக்களில் பலர் அடைந்திருப்பது தெளிவாகவே தெரிகிறது. குறிப்பாக முஸ்லீம்களை எதிர்க்கும் அரசியல்வாதிகளுக்கு அந்நாடுகளில் மக்கள் ஆதரவு அதிகரித்து இருப்பதையும் இங்கு நோக்கலாம்.

155889448மேலும் மேற்குலகில் குறிப்பாக அமேரிக்காவில் இஸ்லாத்தின் மீதான விமர்சனம் வரம்பை மீறி சென்றிருக்கிறது. பேச்சு சுதந்திரமும், எழுத்து சுதந்திரமும் பரிபூர்ணமாக அமேரிக்கர்களுக்கு இருப்பதால் அதை தடுக்க வழியில்லை. ஏதோ ஒரிருவர் இணைய தளங்களில் எழுதுகிறார்கள் என்றால் அதை உதாசீனம் செய்து விடலாம். முஸ்லீம் அல்லாத அமேரிக்கர்களில் 18% பேர் அதிபர் ஒபாமா ஒரு முஸ்லீம் என்று நம்புகிறார்கள். அவர் அமேரிக்காவில் பிறக்கவில்லை என்றும் நம்புகிறார்கள்.

அதிபர் ஒபாமாவின் கொள்கைகளைப்பற்றி எனக்கு நல்ல அபிப்பிராயம் கிடையாது என்றாலும், பொய்களை பெரும்பான்மையான அமேரிக்கர்கள் நம்புவது விவரம் அறிந்தவர்களிடம் பயத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இங்கு இன்னொரு விஷயத்தை கூறியாக வேண்டும். கிறிஸ்தவ மற்றும் யூத கடும்போக்காளர்கள் எவ்வாறு வரம்பு மீறி இஸ்லாத்தை விமர்சனம் செய்கிறார்களோ அதைப்போன்றே முஸ்லீம் கடும்போக்காளர்களும் அமேரிக்கர்களுக்கு எதிராகவும், ஜிஹாத்திற்கு ஆதரவாகவும் வரம்பு மீறி எழுதுகிறார்கள்.

உணர்ச்சி கொந்தளிப்புடன் இருக்கும் அமேரிக்க சமூகத்தின் இன்றைய நிலையில் அறிவுபூர்வமாக பிரச்சினையை கையாள்வது கடினம்தான்.

எனினும், இந்த மசூதி சர்ச்சையை விடுத்து, இஸ்லாம் மற்றும் முஸ்லீம்களினால் மற்ற மதத்தினருக்கு ஏற்பட்டிருக்கும் சங்கடங்களை விரிவாக பார்க்கலாம்.

(இஸ்லாமின் மத புத்தகங்களின் மீதும் முஸ்லீம்களின் மீதும் கூறப்படும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முற்பகுதியில் பார்த்தோம். இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு மிதவாத முஸ்லீம்களிடமிருந்து நமக்கு கிடைக்கும் பதில்களை இப்பகுதியில் பார்ப்போம். இவற்றிற்கான என் மறுப்புகளையும் தருகிறேன்.

 

மிதவாத முஸ்லீம்கள் எங்கே?

இந்தப் பகுதியில் சிலர் ஆட்சேபிக்கிற இஸ்லாமிய மத புத்தக விளக்கங்கள் அளிக்கப்படுகின்றன. “To solve a problem, You should first accept there is a problem” என்னும் வாக்கியத்தின் படி இன்று நடைபெறும் பெரும்பாலான தீவிரவாத தாக்குதல்கள் மற்றும் இஸ்லாமிய நாடுகளில் அனுசரிக்கப்படும் சட்டங்கள் போன்றவற்றின் வேர்களைப்பற்றி அறிந்து கொள்வது அவசியம்.

பழமைவாத மத புத்தக விளக்கங்கள் 10 :

இஸ்லாத்தை எதிர்க்கும் முன்னாள்-முஸ்லீம்கள் மற்றும் கிறிஸ்தவ, யூத கடும்போக்காளர்கள் குரான், ஹடீத், ஷரியா போன்ற புத்தகங்களிலிருந்து  பல பிரச்சினைக்குரிய பகுதிகளை முன்வைக்கிறார்கள். அவற்றிலிருந்து 10 முக்கிய பகுதிகளைப் பார்க்கலாம்.

(1) முஸ்லீமாக பிறந்து பின் இஸ்லாத்தை மறுப்பவரை கொல்ல வேண்டும் (Apostates must be killed). ஓரினச் சேர்க்கை பாலுறவில் (Homo Sex) ஈடுபடுவோர் கொல்லப்பட வேண்டும்.

kill_the_apostate

(2) இஸ்லாமிய மத புத்தகங்களையோ, முகமது நபியையோ விமர்சிப்பவர்கள் கொல்லப்பட வேண்டும் (Blasphemy).

(3) திருமண பந்தத்திற்கு வெளியே உடலுறவு வைத்துக்கொண்டவர்களைக் கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும். திருட்டு, கொள்ளை போன்றவற்றை செய்பவரின் கை, கால்கள் துண்டிக்கப்பட வேண்டும்.

(4) ஒரு ஆண் 4 பெண்களை திருமணம் செய்து கொள்ளலாம்.a_time_cover_0809

(5) பெண் தன் வீட்டிற்கு வெளியே வரும்பொழுது ஒரு ஆணின் துணையுடன் மட்டுமே செல்ல வேண்டும். பெண் தன் வீட்டிற்கு வெளியே செல்லும்போது பர்தா அணிந்துதான் செல்ல வேண்டும்.

வழக்குகளில் பெண்ணின் சாட்சியம் ஒரு ஆணின் சாட்சியத்தில் பாதி அளவு மதிப்புடையதாகவே கருதப்பட வேண்டும். மத புத்தகங்களில் பல கட்டமைப்புகள் இருந்தாலும் கணவன் தன் மனைவியை விவாகரத்து செய்ய “தலாக்” என்று மூன்று முறை கூறிவிட்டாலே போதும் என்று துஷ்பிரயோகம் செய்யப்படுகிறத் தேவையான சட்டங்கள்.

(6) ஒவ்வொரு ஆணும் தாடி வைத்து கொள்ள வேண்டும். “இசை” சாத்தானின் விளையாட்டு. ஆகவே அதை அனுமதிக்க கூடாது.

(7) பணம் கொடுக்கல் வாங்கலில் வட்டி வாங்கவோ கொடுக்கவோ கூடாது.

(8) யூதர்கள் பன்றிகளின் வம்சத்தவர்கள். அவர்களுடனோ மற்ற மதத்தினருடனோ எந்த உறவும் கூடாது.

(9) உலகம் முழுவதும் இஸ்லாத்தை பரப்ப வேண்டும். அதற்காக ஜிஹாத்செய்ய வேண்டும்.

(10) முஸ்லீம் மத புத்தகங்களின்படி முஸ்லீம்கள் மற்ற மதத்தவர்கள் வாழும் நாடுகளின் மீது போர் தொடுக்கும் பொழுது 3 வழிகளை பின்பற்ற வேண்டும். போர் தொடுக்கும் நாட்டு மக்களுக்கு பின்வரும் வரிசையில் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.

dhimmitude

(a) முஸ்லீமாக மதம் மாற வாய்ப்பு.

(b) தங்கள் மதத்திலேயே வாழலாம்-ஆனால் முஸ்லீம்களின் அதிகாரத்திற்கு உட்பட்ட அளவில் (Dhimmitude).

(c) மேற்கூறிய இரண்டு வழிகளையும் ஏற்க மறுப்பவர்கள் கொல்லப்பட வேண்டும்.

இந்த பழைய போர் முறை முற்காலங்களில் மட்டுமே நடந்து இருந்தாலும் இவ்வழிகளை தீவிரவாதிகள் இன்றும் நியாயப்படுத்துகிறார்கள்.

மேற்கூறியவற்றைத் தவிர முஸ்லீம் சமூகங்களைப் பற்றின பொதுவான குற்றச்சாட்டுகள் சிலவும் வைக்கப்படுகின்றன. முக்கியமான சிலவற்றைப் பார்க்கலாம்.

– முஸ்லீம்கள் காலத்திற்கேற்றவாறு குடும்பக் கட்டுப்பாட்டை அனுசரிக்க மறுக்கிறார்கள்.

– முஸ்லீம்கள் சிறுபான்மையினராக வாழும் நாடுகளில் குறிப்பாக மேற்குலக நாடுகளில் அவர்கள் தனித்தீவுகளாகத்தான் வாழ்கிறார்கள். மைய நீரோட்டத்துடன் கலக்கவோ அல்லது அதற்கான முயற்சிகளை முன்னெடுக்கவோ மறுக்கிறார்கள். இதனால் முஸ்லீம்களின் பங்கெடுப்பு மிக மிகக் குறைவாகவே சமூகத்திற்குக் கிடைக்கிறது.

– மத ரீதியான எந்த விமர்சனத்தையும் ஏற்று கொள்ள மறுக்கிறார்கள்.

– மேலும் மேற்குலக நாடுகளில் வாழும் முஸ்லீம் மத தலைவர்கள், முதல் கட்டத்தில் மத ரீதியான விமர்சனங்கள் எந்த ஊடகங்களிலும் வெளிவரக்கூடாது என்பார்கள். அடுத்ததாக பள்ளிகளில் ஆண், பெண் குழந்தைகள் தனித்தனியாக படிக்க வேண்டும் என்பார்கள்.

beatingthewife– நீச்சல் குளங்களில் ஆண்,பெண்கள் தனித்தனியாக குளிக்க வசதி வேண்டும் என்பார்கள். இவை ஏற்றுக்கொள்ள படாவிட்டால் சில குழுக்களிடமிருந்து வன்முறை தோன்றும் என்று சூசகமாக அறிவிப்பார்கள். ஆனால் தாங்கள் வன்முறையை ஆதரிக்கவில்லை என்றும் கூறி சிறிது சிறிதாக சமூகத்தை தங்களின் தேவைக்கேற்ப மாற்ற முயல்கிறார்கள்.

கடைசியாக, இசுலாம் பற்றி விமரிசிப்பவர்கள் முகமது நபியின் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றியும் பல விமர்சனங்களை முன் வைக்கிறார்கள். அவை இந்த கட்டுரைக்கு தேவை இல்லாததாலும், கட்டுரையின் போக்கை மாற்றிவிடும் என்பதாலும் நாம் அவற்றை விட்டு விடலாம்.

மேலே எடுத்தாளப்பட்ட விஷயங்கள் தாராள மனோபாவமுள்ள முஸ்லீம்களுக்கு சங்கடமாகவே உள்ளன என்பது அசைக்கமுடியாத உண்மை.

இந்த குற்றச்சாட்டுகளையெல்லாம் ஒதுக்கி விடுவதற்கில்லை. ஏனெனில் பெண்ணுரிமை, மனித உரிமை போன்றவற்றில் நமக்கு முஸ்லீம் நாடுகளிலிருந்து கிடைக்கும் செய்திகள் மேலே கூறிய குற்றச்சாட்டுகளுக்கு வலு சேர்க்கின்றன. சில உதாரணங்களை பார்க்கலாம்.

இந்த உதாரணங்களை முடிந்தவரை சவூதி அரேபியா மற்றும் ஈரான் போன்ற நாடுகளில் இருந்து வெளிவரும் செய்திகளின் அடிப்படையில் அமைத்துள்ளேன். ஏனெனில் சவூதி அரேபியா சுன்னி முஸ்லீம்களை பெரும்பான்மையாகவும், ஈரான் ஷியா முஸ்லீம்களை பெரும்பான்மையாகவும் கொண்டுள்ளது. ஆகவே இந்த நாடுகளில்நடைபெறும் செயல்கள் முஸ்லீம்களின் அனைத்து தரப்பையும் ஆராய்வதாக அமையும்.

childmarriage– சவூதி அரேபியாவில் ஒரு அமைச்சர் தன் முதிய வயதில் 14 வயதேயுடைய ஒரு பெண் குழந்தையை மணந்தார். இதற்கு எதிர்ப்பு கிளம்பியவுடன் முஸ்லீம் மதச்சட்டங்களின் படித்தான் இதை செய்ததாக வாதாடுகிறார். அவருக்கு எதிராக எந்த வழக்கும் கிடையாது.

– சவூதி அரேபியாவில் ஒரு மதகுரு பெண்கள் வேலைக்கு செல்லும்போது பல ஆண்களுடன் பேசவும் பழகவும் நேரிடுவதால் முதலில் அவர்களுக்கு முலைப்பாலை தந்து விட வேண்டும் என்றார். முலைப்பாலை குடித்தவர்கள் அப்பெண்ணின் மகனாக மாறி விடுவதால் பிறகு ஒரே இடத்தில் வேலை பார்ப்பதில் தவறில்லை என்றார்.

– ஈரானில் ஒரு பெண் திருமண பந்தத்துக்கு வெளியே உறவு வைத்துக் கொண்டாள் என்பதற்காக அவளை கல்லால் அடித்து கொல்ல வேண்டும் என்று அந்நாட்டு நீதிமன்றம் கூறியுள்ளது.

– ஆப்கானிஸ்தானில் புதிய அரசியல் அமைப்பு சட்டம் வடிவமைக்கப்படும் போது ஒரு சட்டம் சேர்க்கப்பட்டது. அதாவது ஒரு கணவன் தன் மனைவியை உடலுறவுக்காக மூன்று நாள் அழைத்தும் அவள் உடன்பட மறுத்தால் அவளுக்கு உணவு கொடுக்காமல் அவளை வழிக்கு கொண்டு வரக் கணவனுக்கு சட்டப்படி உரிமை உண்டு என்பது சட்ட மூலம். இதற்கு பெரிய அளவில் மேற்கத்திய நாடுகளில் எதிர்ப்பு கிளம்பியவுடன் இந்த சட்டத்தின் வீரியம் சிறிது குறைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இன்னும் சில அம்சங்கள் பழைய படியேதான் உள்ளன.

– சவூதி அரேபியாவில் எந்த பெண்ணும் காரையோ மற்ற வாகனங்களையோ ஓட்ட அனுமதி கிடையாது.

evilcult– மாலத்தீவில் ஜூலை 2010ல், இஸ்மாயில் முகமது திதி என்பவர் தற்கொலை செய்து கொண்டார். அவர் தன்னை ஒரு நாத்திகர் என்று அறிவித்து கொண்டவர். தான் பழமைவாதிகளால் மிரட்டப்படுவதாக வெளிநாட்டு மனித உரிமை சங்கங்களிடம் முறைப்பாடு செய்தார். அவருக்கு எந்த உதவியும் கிடைக்காததாலும், உற்றார் உறவினர்களின் மிரட்டலாலும், அவர் தற்கொலை செய்ய வேண்டியதாயிற்று.

– இஸ்லாமிய நாடுகள் சிலவற்றில், ஒரு பெண் தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறி அதற்கு சாட்சியம் இல்லாது போனால் அந்த பெண்ணிற்கே தண்டனை வழங்க வழி செய்ய படுகிறது. எந்த பாலியல் குற்றத்தையும் ஒரு ஆண் மற்றவர்களுக்கு முன்பாக செய்வதில்லை. ஆனால் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் சாட்சியத்தை விட ஆணின் சாட்சியத்திற்கு வலு இருப்பதால் குற்றவாளியான ஆண் தண்டனையிலிருந்து தப்ப முடிகிறது.

– தாலிபான்களைப் பற்றி நிறைய கூறலாம். குறிப்பாகப் பாகிஸ்தானில் எங்கெல்லாம் அவர்களின் அதிகாரம் இருக்கிறதோ அங்குள்ள நாவிதர்களைத் துரத்தி விடுகிறார்கள். எல்லா ஆண்களும் தாடியுடன்தான் இருக்க வேண்டும் என்பதை செயல்படுத்துகிறார்கள்.

– சோமாலியாவில் அல்-ஷப்பா தீவிரவாத குழு உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை தொலைக்காட்சியில் எவரும் பார்க்கத் தடை விதித்தது. கடைசி போட்டியை பார்த்து கொண்டிருந்தவர்களின் மத்தியில் வெடிகுண்டு வைத்து கிட்டத்தட்ட 50 பேரை கொன்றது.

– அதைப்போன்றே இசையும் தாலிபான் போன்ற பல குழுக்களால் தடை செய்யப்பட்டுள்ளது.

– மேற்குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் முத்தாய்ப்பாக எந்த தீவிரவாதியும் நீதிமன்றத்திலோ அல்லது இணைய தளத்திலோ பேசும்போது தாங்கள் இஸ்லாத்தின் வழியிலேயே செல்வதாக ஆணித்தரமாக கூறுகிறார்கள்.

milestonesகுறிப்பாக பின் லேடன் போன்றோர் தங்களின் மானசீக குரு “சையத் குதுப்” என்று கூறுவார்கள். இந்த சையத் குதுப் சவூதி அரேபியாவில் வாழ்ந்தவர். “Milestones” என்ற புத்தகத்தை எழுதியவர். வஹாபி இஸ்லாம் என்னும் முறையை மத புத்தகங்களின் அடிப்படையிலேயே அமைத்துள்ளவர். நான் அந்த புத்தகத்தை படித்தேன்.

சையத் குதுப் மிகவும் தெளிவாகவும், தீர்மானமாகவும் தங்கள் மத புத்தகங்களின் படி ஜிஹாத் செய்வது சரி என்று மட்டுமல்ல, அது ஒவ்வொரு முஸ்லீமின் கடமை என்றும் எழுதியுள்ளார்.

இன்றுள்ள இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கு “ஞான குரு” இவர்தான் என்று கூறலாம். மேலும் யூதர்களையும் மற்ற மதத்தவரையும் தாங்கள் அழிப்பது இஸ்லாத்தில் சொல்லியிருப்பதால்தான் என்றும் எழுதியுள்ளார்.

அமேரிக்காவில் கடந்த ஒரு வருடத்தில் நடந்த அல்லது நடத்த முயற்சிக்கப்பட்ட தீவிரவாத தாக்குதல்களில் 3 தீவிரவாதிகளைப்பற்றி பார்க்கலாம்.

மேஜர் நிதால் ஹசன் (Maj. Nidal Hasan) – இவர் அமேரிக்க இராணுவத்தில் மருத்துவராகப் பணி செய்து வந்தார். ஒரு நாள் “Fort Hood” என்ற இராணுவ மையத்தில் இருப்பவர்களை நோக்கித் தன் துப்பாக்கியால் சரமாரியாக சுடத்தொடங்கினார். 16 அமேரிக்க சிப்பாய்கள் கொல்லப்பட்டார்கள்.  சுட ஆரம்பிக்கும் முன் “அல்லாஹ்-ஹு-அக்பர்” என்று கத்திக்கொண்டே சுட்டார் நிதால் ஹசன்.

இந்த தாக்குதலுக்கு ஒரு வாரம் முன் “நிர்வாண நடன நிகழ்ச்சிக்கு” (Strip Club) சென்று வந்தார். எப்படிப்பட்ட நீசச் செயல்களை செய்தாலும், ஜிஹாத் செய்து உயிரை மாய்த்து கொண்டால் தன் பாவங்கள் மறக்கப்பட்டு தனக்கு விடிவு கிடைக்கும் என்று தன் மத அடிப்படையில் அவர் அந்த தாக்குதலை செய்தார் என்று சிலர் விமர்சிக்கிறார்கள்.

அப்துல் முத்தாலப் (Abdul Muthalib)- இவர் நைஜீரியாவில் ஒரு பணக்கார குடும்பத்தில் பிறந்தவர்.  அமேரிக்காவிற்கு செல்லும் விமானம் ஒன்றில் தன் உள்ளாடையில் இருந்த வெடிபொருட்களை வெடிக்க வைக்க முயற்சித்து தோற்றார்.

இவரும் தான் இஸ்லாமிய அடிப்படையிலேயே இந்த தாக்குதலை செய்ய முயன்றதாக கூறுகிறார்.

ஃபைசல் ஷஹ்ஜாத் (Faisal Shahzad) – இவர் MBA படித்தவர். நியூயார்க் நகரில் டைம்ஸ் சதுக்கத்தில் ஒரு காரில் குண்டை வைத்து வெடிக்கச்செய்ய முயற்சித்தவர். நீதிமன்றத்தில் இவர் ஆற்றிய சொற்பொழிவிலும் அதே முஸ்லீம் அடிப்படை வாதம்தான்.

nidal_hasanabdul-muthalibfaisal-shahzad

மேலே கூறப்பட்ட அனைத்து சம்பவங்களையும் நாம் நிதானமாக ஆராய்ந்தால் மிகவும் தெளிவாக ஒரு விஷயம் புலப்படும். இன்று குற்றமாகக் கருதப்படும் செயல்களை செய்பவர்கள் தாங்கள் குற்றம் செய்கிறோம் என்ற உணர்ச்சி இல்லாதவர்கள். தங்கள் மத புத்தகத்தில் எழுதியுள்ளது-ஆகவே செய்கிறோம் என்று வெளிப்படையாக கூறுபவர்கள்.

மேலும், இஸ்லாத்தை எதிர்த்து முன்வைக்கும் குற்றசாட்டுகளுக்கான ஆதாரங்கள் முஸ்லீம் நாடுகளிலிருந்து இந்த 21ம் நூற்றாண்டிலும் நமக்கு கிடைக்கிறது.

இஸ்லாத்தை விமர்சிப்பவர்கள் அவர்களின் மத புத்தகங்களை விமர்சிப்பது போல் தோன்றினாலும், 1300 வருட பழைமை முறைகளை மத புத்தகங்களின் அடிப்படையில் 21ம் நூற்றாண்டிலும் அனுசரிப்பதால்தான் விமர்சிக்கிறார்கள். இன்று பழமைவாதம் என்று கூறப்படும் சட்டங்கள் கிட்டத்தட்ட அனைத்து மத புத்தகங்களிலும் உள்ளன. இதைப்பற்றி விரிவாக பிறகு பார்ப்போம்.

hamas20jewish20blood(1) இஸ்லாத்தையும் முஸ்லீம்களையும் அழிக்க வேண்டும் என்னும் நோக்கம் கொண்ட சில கிறிஸ்தவ, யூத வலதுசாரிகளின் சதிகள்தான் இவை.

இவற்றைப் போன்ற விளக்கங்கள் இஸ்லாமிய மத புத்தகங்களில் உள்ளன என்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. இந்தக் குற்றச்சாட்டுகளை கூறுபவர்கள் தெளிவாகவே இஸ்லாமிய மத புத்தகங்களிலிருந்து மேற்கோள்களை எடுத்து காட்டுகிறார்கள். மேலும், இணைய தளத்தில் உள்ள தீவிரவாதிகளின் வீடியோக்களிலும் அவர்களே இப்படிப்பட்ட மேற்கோள்களை சுட்டி காட்டுகிறார்கள். ஆகவே, சர்ச்சைகளே இல்லை என்று கூறி விட முடியாது.

(2) ஜிஹாத் என்று அழைக்கப்படும் “புனிதப் போர்” உள்முக ஆன்மீகப் போராட்டம்தானே தவிர மற்ற மதத்தினரின் மீதான படையெடுப்பு அல்ல. ஜிஹாத்திற்கு பல விளக்கங்கள் உள்ளன.

நான் ஏற்கெனவே சுட்டிகாட்டிய சையத் குதுப்பின் “Mile Stones” புத்தகத்தின்படி ஜிஹாத் முறையில் பிற மதத்தினருடன் போர் புரிய முஸ்லீம்களுக்கு கடமை உள்ளதாகவே அவர் எழுதியுள்ளார்.

பி.பி.சியின் மிதவாத விளக்கத்தின்படி கூட “உள்முக ஆன்மீகப் போராட்டம்” என்பது பல விளக்கங்களில் ஒரு விளக்கம்தான் (http://www.bbc.co.uk/religion/religions/islam/beliefs/jihad_1.shtml). மற்ற மதத்தினருடன் போர்புரிய உத்திரவு உள்ளது என்பதை மறுக்க முடியாது.

(3) முற்காலப் போர்களில் முஸ்லீம் அரசர்கள் மட்டுமல்லாது மற்ற மதத்தினரின் அரசர்கள் கூட அட்டூழியங்களை நிகழ்த்தியிருக்கிறார்கள். முஸ்லீம்களை மட்டும் குறிவைத்து கூறப்படும் குற்றச்சாட்டுகள் இவை.

ஒரு வகையில் இந்த பதில் சரி என்பது போலத்தான் தோன்றும். ஆனால், கொடூரமான சில செயல்களை பல முஸ்லீம் அரசர்கள் செய்துள்ளார்கள் என்பதுதான் வரலாற்று உண்மை.

இவை சில அரசர்களின் வழி முறையாக இல்லாமல் பெரும்பாலான முஸ்லீம் அரசர்களின் வழியாக இருந்துள்ளது என்பதும் உண்மையே. ஒரே ஒரு உதாரணத்தை தருகிறேன்.514qk5aw3plகி.பி.1336-1405 வரை வாழ்ந்த டேமர்லேன் (Tamerlane) தன்னுடைய சுயசரிதத்தில் தான் ஏன் இந்தியாவின் மீது படையெடுத்தேன் என்பதை விளக்குகிறார். இந்த படையெடுப்பிற்கு இரண்டு காரணங்களை முன்வைக்கிறார்.

ஒன்று – முஸ்லீம் அல்லாத ஹிந்துக்களை, இஸ்லாமின் எதிரிகளை ஜிஹாத் செய்து அழிப்பதன் மூலம் தனக்கு இறப்பிற்கு பின் பரிசு கிடைக்கும்.

இரண்டு – முஸ்லீம் படைகள் ஹிந்துக்களின் சொத்துகளை கொள்ளை அடிக்க முடியும். எப்படி ஒரு குழந்தைக்கு தன் தாயின் முலைப்பால் உரியதோ, அதைப்போன்றே தங்கள் மதத்திற்காக போர் புரியும் முஸ்லீம்களுக்கு மற்ற மதத்தினரின் சொத்தும் உரியதே!

பொருளாதாரக் காரணங்களுக்காகச் செய்த போரைக்கூட “மதத்தை பரப்பச் செய்த போர்” என்று விளக்குவதால் முஸ்லீம்களுக்கு உந்துதலும் உத்வேகமும் ஏற்பட்டிருக்கும் என்பதை மறுக்க முடியாது.

மேலும், இந்தக் கொடூரச் செயல்களை செய்தாலும் தன்னை கடவுள் ஏற்றுக்கொள்வார் என்பது மட்டுமல்ல-தனக்கு பரிசும் கிடைக்கும் என்று நம்பியதுதான் முக்கிய செய்தி.

(4) இசையை இஸ்லாமிய மத புத்தகங்கள் எதிர்க்க வில்லை.

இதற்கு பதில் கூற எனக்கு தகுதி இல்லை. ஆனால் எங்கெல்லாம் சுன்னி இஸ்லாமை சேர்ந்த அல்-கொய்தா, தாலிபான் போன்ற குழுக்கள் உள்ளதோ, அங்கெல்லாம் சமூகத்தில் இசை அனுமதிக்கப் படுவதில்லை.

(5) பெண்கள் பர்தா அணிய வற்புறுத்தப் படுவதில்லை.acid_terror_women_funzug-org_02

இதற்கு தீர்வான முடிவை தர இயலாது. ஏனெனில் எந்த பெண்ணும் தான் வற்புறுத்த பட்டால் கூட அதை வெளியே கூறுவாள் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால், முஸ்லீம் சமூகங்களில் இருந்து வரும் செய்திகள் திருப்திகரமாக இல்லை.

உதாரணமாக மேற்கு வங்கத்தில் ஒரு முஸ்லீம் பல்கலை கழகத்தில் பணிபுரியும் ஒரு முஸ்லீம் பெண் பேராசிரியர் தான் பர்தா அணிந்து வர வற்புறுத்த படுவதாக தெரிவித்தார். அந்த பல்கலை கழகத்தின் மாணவர் சங்கம் அவரை நிர்பந்திக்கிறது. அந்தப் பெண், பல்கலைகழக துணை வேந்தரிடமும் பின் மேற்கு வங்க கல்வி மந்திரியிடமும் புகார் அளித்திருக்கிறார். பல்கலைகழகத்திலேயே இப்படிப்பட்ட நெருக்கடிகளைக் கொடுக்கும் வாலிப மாணவர்கள், வயதான பின் தங்கள் வீட்டு பெண்களை வற்புறுத்த மாட்டார்கள் என்பதை ஏற்று கொள்ள இயலவில்லை.

என்னைப் பொறுத்த வரை, எந்த உடையை அணிய வேண்டும் என்ற உரிமை ஒரு பெண்ணிற்கு இருக்க வேண்டும். ஆனால், தீவிரவாத தாக்குதல்கள் நடந்து கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில் சில விட்டு கொடுப்புகளை முஸ்லீம் பெண்கள் செய்துதான் தீர வேண்டும். சரியான சூழ்நிலையில் முஸ்லீம் பெண்கள் அவர்களே விரும்பி பர்தா அணிந்து கொள்வது அவர்களின் அடிப்படை உரிமை என்பது என் கருத்து.shallagh-2

(6) ஆண்/பெண் சம உரிமையுடன் வாழும் மேற்குலக சமூகங்களுடன் (Gender Equal Society) இஸ்லாமிய நாடுகளின் பெண்களை ஒப்பிடுவது தவறு.

மிதவாதிகள் கூறும் இந்த பதில் பல நேரங்களில் சரிதான். ஆனால் பெண்களின் அடிப்படை உரிமைகளை மறுப்பது எந்த நாகரீக சமூகத்தாலும் ஏற்கப்பட கூடியது அல்ல.

(7) பெண்ணுரிமை, மனித உரிமை போன்ற விஷயங்களில் பெரிய முன்னெடுப்புகளை மற்ற மதத்தினரும் முற்காலங்களில் செய்ய வேண்டி இருந்தது. 2000 வருட வரலாறு கொண்ட கிறிஸ்தவர்களுடன் 1300 வருடங்கள் மட்டுமே வரலாற்றை கொண்ட முஸ்லீம்களை ஒப்பிடக் கூடாது.

இது வாதத்திற்கு சரியாகவே தோன்றும். ஆனால் 1900க்கு பிறகு உலகம் முழுவதிலும் தகவல் தொடர்பும், தொழில் வளர்ச்சியும் ஏற்பட்ட பின்னும் கடந்த 100 வருடங்களாக முஸ்லீம் சமூகங்கள் பெண்ணுரிமை, மனித உரிமை போன்றவற்றில் பின் தங்கியிருப்பதை நியாயப் படுத்த முடியாது.995-1325

(8) 1300 வருடங்களுக்கு முன் நடந்த விஷயங்களை இன்றைய நன்னெறி அளவுகோல்களுடன் (Today’s moral and ethics yardsticks) ஒப்பிடுவது தவறு.

இது கண்டிப்பாக சரியான பதில்தான். இதிலும் ஒரு பிரச்சினை உள்ளது. 1300 ஆண்டிற்கு முன்னால் ஒரு பெண்ணை கல்லால் அடித்ததை பற்றி குற்றசாட்டுகள் இல்லை. 2010ல் ஈரானில் ஒரு பெண்ணிற்கு இப்படிப்பட்ட தண்டணை கொடுப்பதை ஏற்று கொள்ளவே இயலாது.

(9) தீவிரவாதிகள் மொத்த முஸ்லீம் மக்கள் தொகையில் மிகவும் குறைந்த அளவினர்தான். பெரும்பாலான முஸ்லீம்கள் மற்ற சாதாரண முஸ்லீம் அல்லாதோரை போன்று நல்லவர்கள்தான்.the_other_islamic_bomb

இதுவும் கண்டிப்பாக சரிதான். நான் கண்டிப்பாக இதை ஏற்று கொள்கிறேன். பெரும்பாலான முஸ்லீம்கள் நல்லவர்களே! அதில் சந்தேகமே கிடையாது. குற்றச்சாட்டுகளை கூறுபவர்களும் இதை ஏற்று கொள்வார்கள்.

ஒரு உதாரணத்தை எடுத்து கொள்வோம். இந்தியாவின் முஸ்லீம் மக்கள் தொகையில் 0.1 சதவிகிதம் பேர் நேரடியாக தீவிரவாதத்திலோ அல்லது தீவிரவாதிகளுக்கு உதவி புரியும் மன நிலையிலோ இருக்கிறார்கள் என்று வைத்து கொள்வோம். 15 கோடி முஸ்லீம் மக்கள் தொகையில் 1.5 இலட்சம் பேர் இப்படிப்பட்டவர்கள் என்பது கண்டிப்பாக ஒரு சமூகத்திற்கு அச்சுறுத்தல்தான். 99.9 சதவிகிதமான 14 கோடியே 98 இலட்சத்து 50 ஆயிரம் பேர் நல்லவர்களாக இருந்தாலும் இந்த 1.5 இலட்சம் பேர் பொது அமைதியைக் குலைக்க முடியும்.

(10) தீவிரவாதிகள் மற்றும் கடும்போக்காளர்கள் மத புத்தகங்களைத் திரித்து (Wrong Interpretation) புரிந்து கொள்வதுதான் பிரச்சினை. மத புத்தகங்களின் விளக்கங்களை தீவிரவாதிகளும் கடும்போக்காளர்களும் “சந்தர்ப்பம் மற்றும் சூழ்நிலை பொருத்தம் இன்றி” (Taken out of Context) புரிந்து கொள்வதும் பிரச்சினைக்கு காரணமாகிறது.

இந்த பதிலை என்னால் எதிர் கொள்ள முடியாது. எல்லா மதங்களிலுமே இந்த திரித்து கூறப்படும் விளக்கங்கள் பற்றி ஒரு சாரார் என்றுமே கூறிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

(11) பல முஸ்லீம் நாட்டு சமூகங்களில் உள்ள வறுமையும் தீவிரவாதம் தழைக்க வழி செய்கிறது. சில மத்திய கிழக்கு நாடுகளின் எண்ணெய் வருமானம் கொடுங்கோல் ஆட்சியாளர்களால் ஏப்பம் விடப்படுகிறது. இந்த ஆட்சியாளர்களுக்கு அமேரிக்காவும் மற்ற நாடுகளும் உதவுவதும் தீவிரவாதம் வளர காரணமாகிறது.

இது சரியான புரிதல் அல்ல என்பது என் அபிப்பிராயம். கடந்த வருடம் அமேரிக்காவில் நடந்த அனைத்து தீவிரவாத தாக்குதல்களையும் செய்தது படித்த முஸ்லீம் பட்டதாரிகளே ! ஐரோப்பிய நாடுகளில் நடத்தப்பட்ட பல தாக்குதல்கள் பட்டதாரி முஸ்லீம்களாலேயே நடத்தப்பட்டன.

அடுத்து எண்ணெய் வருமானத்தைப் பொறுத்தவரை, அமேரிக்காவோ, ஏன் இந்தியாவோ கூட வர்த்தகம் மட்டுமே செய்கிறது. வாங்கும் எண்ணெய்க்குப் பணத்தை கொடுக்கிறது. அந்நாடுகளில் நடக்கும் அராஜகங்களை அங்குள்ள மக்கள்தான் தீர்த்து கொள்ள வேண்டும். போன வருடம் ஈரானில் நடைபெற்ற தேர்தல் முறைகேடுகளுக்கு எதிராக பெரிய அளவில் போராட்டங்கள் நடந்தன. அந்நாட்டு மக்கள்தான் கொடுங்கோல் ஆட்சியாளர்களுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். வெளிப்படையாகக் கூறுவதென்றால் மற்ற நாடுகளால் எதுவும் செய்ய முடியாது என்பதுதான். இப்படிக் கூறுபவர்களே, ஈராக்கிலோ, ஆப்கானிஸ்தானிலோ அமேரிக்கா நுழைந்தால் அது தவறு என்றும் கூறுகிறார்கள்.

(12) முஸ்லீம்கள் குரானை அல்லாஹ்விடமிருந்து நேரடியாக நபிகள் நாயகத்தின் வழியாகப் பெற்றுள்ளனர். ஆகவே குரானையோ அல்லது நபிகள் நாயகத்தையோ விமர்சனம் செய்வதை எங்களால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை.

எனக்குத் தெரிந்தவரை இதுபோன்ற நிலைகளை அனைத்து மத மக்களும் எடுத்திருக்கிறார்கள். நாகரீக சமூகத்தில் விமர்சனம் என்பது முக்கிய பங்காற்றுகிறது. என்றுமே சிலர் வரம்பு மீறிய விமர்சனத்தை செய்து கொண்டுதான் இருப்பார்கள். ஆனால் அவர்களைக் கொல்ல வேண்டும் என்று 21ம் நூற்றாண்டில் கூறுவதை ஏற்க முடியாது. நான் ஒரு உதாரணத்தை தருகிறேன்.

தமிழ்நாட்டில் உள்ள பொய் நாத்திகர்களில் (Psuedo-Atheist) ஒருவர்,

“இராமன் ஒரு திருடன்”
“இராமனும் சீதையும் அண்ணன்-தங்கை என்று துளசிதாஸின் இராமயணத்திலேயே எழுதப்பட்டுள்ளது” என்றெல்லாம் கூறி வருகிறார்.

ஒரு நாள் என் தாயாருடன் பேசிக் கொண்டிருக்கும்போது, இதையெல்லாம் கேட்பதற்கு ஆளில்லையே என்று அவர் ஆதங்கப்பட்டார். நான் அவரிடம் கீழ்வருமாறு பிரதிவாதம் செய்தேன்.

“ஜனநாயகத்தின் முதுகெலும்பு பேச்சு சுதந்திரம். ஒவ்வொரு மனிதனும் தன் மனதில் உள்ளதைக் கூற சமூகம் அனுமதிக்க வேண்டும். ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஒருவரின் பேச்சு சுதந்திரத்தை மட்டு படுத்தினால் நமக்கு எதிராக யார் பேசினாலும் அதை தடுக்கும் அதிகாரத்தை நாம் அடைந்து விரைவில், ஒரு ஹிந்துவும் சர்வாதிகாரியாக மாறுவார்.

இராமனிடம் உள்ள மதிப்பு நமக்கு நாத்திகர்களால் குறையும் என்பதை என்னால் ஏற்க முடிய வில்லை. எப்படி ஒரு நாத்திகருக்கு தன் கருத்தை முன்வைக்க உரிமை உள்ளதோ அதேபோல் அந்த கருத்து தவறு என்ற நம் கருத்தை முன் வைக்கவும் நமக்கு உரிமை உள்ளது. அதை விடுத்து, எதிர்ப்போரையெல்லாம் கொல்ல வேண்டும் என்று ஆரம்பித்தால் அது சட்ட திட்டம் இல்லாத சமூகமாக ஆகிவிடும்.”

(13) எல்லா மதப்புத்தகங்களிலும் இவற்றைப்போன்ற பகுதிகள் உள்ளன.

இது உண்மைதான். இதை சிறிது விளக்கமாக பார்ப்போம். இங்கு உதாரணத்திற்காக ஒரு ஹிந்து இதிஹாஸ கதையையும், ஈரானில் நடந்து கொண்டிருக்கும் ஒரு உண்மை சம்பவத்தையும் ஒப்பீடு செய்யலாம்.

மஹாபாரதத்தில் பீஷ்மர் அம்பா, அம்பிகா மற்றும் அம்பாலிகா என்ற மூன்று இளவரசிகளை கவர்ந்து கொண்டு செல்கிறார். (தனக்காக அல்ல, தன் நாட்டு இளவரசர்களுக்காக). அன்றைய சமூகத்தில் அது சரியான வழிமுறை.

ஆனால், நாகரீக முதிர்ச்சி அடைந்த பெண்களுக்கு சம உரிமை அளிக்கும் இன்றைய காலத்தில் அது ஒரு பெண்களைக் கடத்தும் குற்றம். இன்று ஒரு ஹிந்து, தான் பீஷ்மரைப் போன்றே ஒரு பெண்ணை கடத்துகிறேன் என்று கூறுகிறார் என்று வைத்து கொள்வோம். மேலும் ஸ்மிருதிகளின் படி 8 விவாஹ முறைகளில் ராக்ஷச விவாஹ முறையில் தான் அந்த பெண்ணை திருமணம் செய்யப்போவதாக சொல்கிறார் என்றும் வைத்து கொள்வோம். அவர் 3 வித எதிர்ப்புகளை சந்திப்பார்.

(1) சட்டரீதியான எதிர்ப்பு – சட்டத்தின்படி அந்த நபர் பெண்ணை கடத்திய குற்றத்திற்காக சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும்.

(2) சமூகரீதியான எதிர்ப்பு – அவரின் குடும்ப உறுப்பினர்களையும் சேர்த்து அவரை ஆதரிப்பவர் ஒருவரும் ஹிந்து சமூகத்தில் இருக்க மாட்டார்கள்.

(3) சமயரீதியான எதிர்ப்பு – எந்த ஹிந்து மத குருவும் அந்த மனிதர் செய்ததை நியாய படுத்த மாட்டார்.

இத்தனைக்கும் மஹாபாரதத்தில் இந்த நிகழ்ச்சி வருகிறது. ஹிந்துக்கள் இராமாயணத்தையும் மஹாபாரதத்தையும் இரு கண்களாக போற்றுபவர்கள். இருந்தும் எந்த ஹிந்துவும் கடத்தும் நபரை ஆதரிக்க மாட்டார்கள். எந்த ஒழுங்கீனத்தையும் ஒழுக்க நிலையாக மாற்ற ஹிந்து சமூகம் அனுமதி அளிக்காது.266242

சரி, நாம் ஈரானில் இருந்து வெளிவரும் ஒரு செய்தியை கவனிப்போம். ஒரு பெண்மணி திருமண பந்தத்திற்கு வெளியே உடலுறவு வைத்த வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தது. அதை விசாரித்த நீதிபதி அந்த பெண் கல்லால் அடித்து கொல்லப்பட வேண்டும் என்று தீர்ப்பு வழங்குகிறார்.

1300 ஆண்டுகளுக்கு முன் இந்த வழிமுறை அரேபியாவில் இருந்ததாக மத புத்தகங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அந்த வழிமுறையை மட்டும்தான் அனுசரிப்போம் என்று ஒரு நாடு தீர்மானிக்கிறது. சட்டரீதியாக நீதிபதி தீர்ப்பை வழங்குகிறார். சமூகத்தில் பலர் இந்தத் தண்டனையை நிறைவேற்ற போகிறார்கள். பலர் சேர்ந்து கல்லால் அடித்து அப்பெண்ணை கொல்லப் போகிறார்கள். இதற்கு அந்த சமூகத்தில் பெரிய ஆதரவு உள்ளது. சமயகுருமார்கள் இதை ஆதரித்து அறிக்கை வெளியிடுகிறார்கள்.

சமய புத்தகங்களில் பழைய கால வாழ்க்கை முறைகளை அனுசரித்து எழுதப்பட்ட சட்டங்களை இன்றைய நவீன உலகில் அனுசரிப்பது அசல் முட்டாள்தனமாகவே அமையும். என்னைப் பொறுத்தவரை, பழைய மத புத்தகங்களின் சில சட்டங்கள் இன்றைய நாகரீக சமூகப் புரிதலான பெண்ணுரிமை, மனித உரிமை போன்றவற்றிற்கு எதிராக இருந்தால் அவை கண்டிப்பாக ஒதுக்கப்பட வேண்டும். அவை ஹிந்து மத புத்தகமானாலும் சரி, இஸ்லாமிய மத புத்தகமானாலும் சரி, இதே முடிவுதான்.

SHARE