தற்போது அனைத்துவகையான மொபைல் சாதனங்களிலும் Wi-Fi தொழில்நுட்பம் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஏனைய வயர்லெஸ் தொழில்நுட்பங்களை விடவும் நீண்ட தூரத்திற்கு வலையமைப்பு ஏற்படுத்த முடியுவதுடன், வேகமாகவும் தரவுகளைப் பரிமாற்றம் செய்ய முடியும். இதன் காரணமாக வயர்லெஸ் இணைய தொழில்நுட்பங்களிலேயே இந்த Wi-Fi தொழில்நுட்பம் மிகவும் பிரபல்யம் வாய்ந்ததாக காணப்படுகின்றது. எனினும் இத் தொழில்நுட்பத்திற்கு மின்குமிழ்களின் வெளிச்சம் பாதகமாக அமைவதாக தற்போது அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. கிஸ்துமஸ் காலத்தில் அதிகளவில் மேற்கொள்ளப்படும் மின்குமிழ் அலங்காரங்களைக் கருத்தில் கொண்டே இத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதனை பிரித்தானியாவின் திறந்த பல்கலைக்கழகம் ஒன்றில் பணியாற்றுபவரானஅன்றூ ஸ்மித்த என்பவர் எழுதியுள்ள கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். இதற்கு காரணம் ஒளி அலைகளின் குறுக்கீடு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. |