மின்சார கண்ணா பட புகழ் நடிகை மோனிகாவை நியாபகம் இருக்கா?- இப்போது எப்படி உள்ளார் பாருங்க

62

 

நடிகர் விஜய் திரைப்பயணத்தில் வெளிவந்து ஹிட்டடித்த படங்களில் ஒன்று மின்சார கண்ணா.

1999ம் ஆண்டு வெளியான இப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியுள்ளார், ஒரு சிறப்பு தோற்றத்திலும் நடித்திருப்பார். இப்படத்தில் தேவா இசையமைப்பில் வெளியான அனைத்து பாடல்களும் நல்ல ஹிட் தான்.

விஜய்யை தாண்டி குஷ்பு, ரம்பா, மோனிகா, மணிவண்ணன், மன்சூர் அலிகான், அனு மோகன், சுந்தரராஜன் என பலர் நடித்துள்ளனர்.

மோனிகா நடிகை
இந்த படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தான் நடிகை மோனிகா காஸ்டலினோ.

90களில் கனவு கன்னியாக வலம் வந்த இவர் தற்போது எங்கு இருக்கிறார் என்றே தெரியாமல் போனது. இப்படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து படங்கள் நடிப்பார் என்று பார்த்தால் சரியான படம் அமையவில்லை.

இவர் 2009ம் ஆண்டில் இருந்தே ஹிந்தி சீரியல்களில் நடித்து வந்தார். இடையில் சத்யபிரகாஷ் சிங் என்ற துணை இயக்குனரை திருமணம் செய்தார், ஆனால் ஒரே வருடத்தில் பிரிந்துவிட்டனர்.

தற்போது சமூக வலைதளங்களில் இவரது லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாக அட மின்சார கண்ணா பட நடிகையா இது என ரசிகர்கள் வியந்து பார்க்கிறார்கள்.

SHARE