மின்சார கம்பத்துடன் மோதி பஸ் விபத்து

335

மட்டக்களப்பிலிருந்து பதுளை வழியாக பானதுறைக்கு சென்று கொண்டிருந்த இ.போ.ச. பஸ் வல்லபுதன்ன என்ற இடத்தில் மின்சார கம்பமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று பகல் குறித் சம்பவம் இடம்பெற்றுள்ளதோடு இவ்விபத்தில் ஒரு பெண் உட்பட இருவர் காயங்களுக்குள்ளாகினர்.

இவர்கள் அப்புத்தளை அரசினர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்துக்குள்ளான பஸ்சில் 48 பயணிகள் பயணித்துள்ளனர். விபத்து குறித்து ஹல்துமுள்ளை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

SHARE