மின்சார மறுசீரமைப்பு திருத்த சட்டமூலம் : வெளியானது வர்த்தமானி

158

 

மின்சாரத்துறை மறுசீரமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர (Kanchana Wijesekera) தெரிவித்துள்ளார்.

அடுத்த வாரத்தில் இந்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, தமது எக்ஸ் கணக்கில் குறிப்பொன்றையிட்டு இதனைத் தெரிவித்துள்ளார்.

சட்டமூல வரைவு
ஜனவரி மாதம் பங்குதாரர்களால் பரிந்துரைக்கப்பட்ட திருத்தங்கள், திருத்தப்பட்ட சட்டமூல வரைவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அதன்படி, இந்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நாளிலிருந்து இரண்டு வாரங்களுக்கு உச்ச நீதிமன்றத்தில் அதன் சட்டபூர்வமான தன்மை பொதுமக்களுக்கு வழங்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

SHARE