மின்னலே படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்து இந்த நடிகர் தான்.. மாதவன் கிடையாது! கவுதம் மேனன் பேட்டி

130

 

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் கவுதம் மேனன். இவர் இயக்கிய முதல் திரைப்படம் மின்னலே. மேலும் ரீமா சென், அப்பாஸ், விவேக் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். முதல் படத்திலேயே கவுதம் மேனன் முத்திரை பதித்தார்.

இதன்பின் காக்க, வேட்டையாடு விளையாடு என கலக்கினார். இந்த நிலையில், கவுதம் மேனனின் முதல் படமான மின்னலே திரைப்படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது மாதவன் கிடையாதாம்.

முதல் ஹீரோ
இந்த கதையை சூர்யாவிற்காக பண்ணலாம் என முடிவு செய்து, சூர்யாவின் தந்தையும் மூத்த நடிகருமான சிவகுமாரிடம் மின்னலே படத்தின் கதையை கூறியுள்ளார் கவுதம் மேனன். ஆனால், அந்த கதையை சிவகுமார் நிராகரித்துவிட்டாராம்.

அதன்பின் தான் மின்னலே கதை மாதவனிடம் கூறினாராம் கவுதம். முதல் படத்தில் சூர்யாவுடன் இணைய முடியவில்லை என்றாலும், காக்க காக்க,வாரணம் ஆயிரம் என தொடர்ந்து அவருடன் பணியாற்றினார் கவுதம் மேனன் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE