இலங்கை போக்குவரத்து சபைக்கு சித்திரை புத்தாண்டின் போது சுமார் 1500 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் ஐந்தாம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை இந்த வருமானம் கிடைத்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் ஒரு வாரத்தில் அதிவேக வீதியின் வருமானம் 130 மில்லியன் ரூபா என அவர் குறிப்பிட்டுள்ளார்.
போக்குவரத்திற்கு இடையூறு
அத்தோடு கடந்த 12 நாட்களில் அதிக எண்ணிக்கையிலான பேருந்துகள் இயக்கப்பட்டதாகவும் மற்றும் புத்தாண்டு தினத்தில் நாடு முழுவதும் 1200 பேருந்துகள் இயக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பயணிகள் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாத வகையில் புத்தாண்டு காலத்தில் தேவையான பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்துமாறு போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardane) பணிப்புரை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.