மீண்டும் கத்தி படத்திற்கு மிரட்டல்….

370

விஜய், சமந்தா நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ள படம் கத்தி. இந்தப் படத்தை இலங்கை தமிழர்களான சுபாஷ்கரனும், கருணாகரனும் இணைந்து தயாரித்துள்ளனர். தீபாவளிக்கு வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கத்தி படத்தை இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் உறவினர் பினாமி பெயரில் தயாரிக்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. இதற்கு படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ்கரன், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், விஜய் ஆகியோர் தெளிவான விளக்கம் அளித்துள்ளனர். அதோடு முருகதாஸ் ஒவ்வொரு தமிழ் அமைப்பினரையும் நேரடியாக சந்தித்து விளக்கம் அளித்துள்ளார். இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் விஜய்யும், முருகதாசும் முதல் ஆளாக கலந்து கொண்டனர். “நான் தியாகி இல்லை தான் ஆனால் துரோகி இல்லை” என்று விஜய் கூறிவிட்டார். “தமிழ் துரோகிகளுக்கு படம் இயக்கினால் நான் தமிழனே இல்லை” என்ற முருகதாஸ் கூறிவிட்டார்.

அதனால் எதிர்போராட்டங்கள் முடிவுக்கு வந்து கத்தி படம் வெளிவருதற்கு எந்த தடையும் இல்லாத நிலை இருந்தது. இப்போது சில தமிழ் அமைப்புகள் தீடீரென்று கத்தி படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம் என்ற அறிவித்துள்ளது.

தமிழ் வாழ்வுரிமை கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் நேற்று (அக் 13) நடந்தது. இதில் சில தமிழ் அமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பிறகு இதன் அமைப்பாளர் தி.வேல்முருகன் நிருபர்களிடம் கூறியதாவது: கத்தி படத்தை இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் உறவினர் தயாரித்துள்ளார். படத்திலிருந்து விஜய், முருகதாஸை விலக கோரினோம். படத்தை வெளியிடக்கூடாது என்றோம். ஆனால் தற்போது தீபாவளிக்கு வெளிவருதாக அறிவித்திருக்கிறார்கள். படத்தை திரையிடக்கூடாது என்று தியேட்டர் அதிபர்கள் சங்கத்திற்கு கோரிக்கை வைப்போம். அதையும் மீறி திரையிட்டால் தியேட்டர்கள் முன்பு போராட்டம் நடத்துவோம் என்றார்.

 

SHARE