மீண்டும் களமிறங்கும் Yamaha RX 100.., முக்கிய சிறப்பம்சங்கள் என்ன?

116

 

புதிய பொலிவுடன் Yamaha RX 100 பைக் விரைவில் அறிமுகமாக உள்ள நிலையில், அதுகுறித்த முக்கிய தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

பொதுவாக பைக் பிரியர்களுக்கு தற்போது Pulsar, Apache, Duke போன்ற பைக்கின் மீது ஆர்வம் இருந்தாலும் Yamaha RX 100 பைக்கானது தனித்து தெரியும்.

ஏனென்றால் 90 காலகட்டத்தில் சாலைகளில் Yamaha RX 100 ஆதிக்கம் செலுத்தின. இந்த பைக்கில் உள்ள சத்தம், Design, mileage ஆகியவை தான் தனித்துவமாக காட்டுவதற்கு முக்கிய காரணம் ஆகும்.

நீண்ட காலமாக தடையில் இருந்த இந்த பைக்கானது தற்போது ரீ என்ட்ரி கொடுக்க போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

Yamaha RX 100
1985 -ம் ஆண்டு Yamaha RX 100 பைக்கானது அறிமுகமானது. இந்த பைக்கின் சக்திவாய்ந்த எஞ்சினும், தோற்றமும் தான் இளைஞர்களை கவர்ந்துள்ளது.

இந்த பைக்கிற்கு கடந்த 2019 -ம் ஆண்டு தடை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

பழைய Yamaha RX100 பைக்கானது 98cc எஞ்சினை கொண்டுள்ளது. இந்த புதிய பைக்கின் engine 250cc ஆகும். இதனால் உங்களது பயணங்களை அதிவேகமாகவும், மெருகேத்தவும் முடியும்.

மேலும், இதில் உள்ள Analog அம்சங்கள் நீக்கப்பட்டு Digital speedometer, Fuel code, navigation system, Clock, Trip meter போன்ற அம்சங்கள் digital instrument cluster -ல் இடம்பெறும் என்று கூறப்படுகிறது.

அதேபோல், GPS அமைப்பு, Bluetooth இணைப்பு, இரண்டு சக்கரங்களிலும் Disc brakes, ABS அமைப்பு,Tubeless tires ஆகிய அம்சங்களுடன் வரும் என்று கூறப்படுகிறது.

குறிப்பாக இந்த புதிய Yamaha RX 100 பைக்கின் விலை ரூ.1 லட்சம் ஆக இருக்கும் என சொல்லப்படுகிறது.

SHARE