மீண்டும் தயாராகி வருகிறாராம் நம்ம ஜோ.

753

வாலி படத்தில் அறிமுகமாகி அடுத்தடுத்து படங்கள் நடித்து முன்னணி வரிசையில் இடம்பிடித்த ஜோதிகா, மொழி, சந்திரமுகி ஆகிய படங்களில் சிறந்த நடிகை விருதையும் பெற்றிருந்தார்.
ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து வைத்திருந்த இவர் திடீரென திருமணத்தில் குதித்து பின் நடிப்புக்கு முழுக்கு போட்டது அனைவரின் மனதிலும் புயலடிக்க செய்தது.தற்போது மீண்டும் ஜோதிகா ரீ என்ட்ரி கொடுக்க இருக்கிறார் என்ற தகவல் பரவி வருகிறது

பசங்க திரைப்படத்தை இயக்கிய பாண்டிய ராஜ் அப்படத்திற்கு பிறகு மீண்டும் குழந்தைகளை வைத்து படம் எடுக்க இருக்கிறாராம்.

இதில் ஜோதிகாவை நடிக்க வைக்க சூர்யாவிடம் மட்டும் அணுகாமல் மொத்த குடும்பத்திற்குமே பாண்டியராஜ் கதையை சொல்ல பின் அனைவருக்கும் இக்கதை பிடித்துப்போக தற்போது இப்படத்திற்காக தயாராகி வருகிறாராம் நம்ம ஜோ.

ஆனால் இந்த ஒரு படத்திற்கு மட்டுமே ஜோ க்கு நடிக்க அனுமதி கிடைத்துள்ளதாக நம்ம சினிமா வட்டாரம் தெரிவிக்கிறது.

எப்படியோ தற்போது ஜோதிகாவை ரா ரா என அழைக்கி்றது நம் சினிமா

SHARE