மீண்டும் திருமணம் செய்கிறாரா வனிதா? இப்படி ஒருவர் தான் வேண்டுமாம்

127

 

நடிகை வனிதா விஜயகுமார் பிக் பாஸ் ஷோவில் கலந்துகொண்டபிறகு மீண்டும் புகழ் பெற்றார். அவர் டைட்டில் ஜெயிக்கவில்லை என்றாலும் பெரிய அளவில் பிரபலம் ஆனார்.

அதன் பின் படவாய்ப்புகளும் அதிகம் வந்தது. மேலும் வனிதா பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் அதன் பின் கருத்து வேறுபாட்டால் பிரிந்துவிட்டார். கடந்த வருடம் பீட்டர் பால் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் திருமணமா?
இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய வனிதாவிடம் தொகுப்பாளர் வில்லங்கமாக திருமணம் பற்றி பல கேள்விகள் கேட்டார்.

அதற்கு கோபப்படாமல் பதில் சொன்ன வனிதா தான் இதுவரை சட்டப்படி இரண்டு முறை தான் திருமணம் செய்து இருப்பதாகவும், மூன்றாவது முறையும் செய்வேன் என கூறி இருக்கிறார்.

3ம் திருமணம் வெயிட்டிங் லிஸ்ட்ல இருக்கு என கூறிய அவரிடம் மாப்பிள்ளை கருப்பா இருக்கணுமா இல்லை செகப்பா இருக்கணுமா என தொகுப்பாளர் கேட்டதற்கு, ‘பச்சையாக இருக்கனும். குபேரன் போல பச்சையாக இருக்க வேண்டும். அப்படி ஒருவரை தான் தேடிக்கொண்டிருக்கிறேன்’ என காட்டமாக பதில் கொடுத்து இருக்கிறார்.

எப்போது பேட்டி கொடுத்தாலும் திருமணம் பற்றிய கேள்விகளை தான் கேட்கிறார்கள் எனவும் அவர் கோபமாக பேசி இருக்கிறார்.

SHARE