மீண்டும் வெளியாகிறது சாம்சங் கேலக்ஸி நோட் 7!

190

சாம்சங் நிறுவனம் கடந்த ஆண்டில் வெளியிட்ட சாம்சங் கேலக்ஸி நோட் 7 மொபைல், பேட்டரியில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக திரும்ப பெறப்பட்டது.

இதனை புதுப்பித்து மீண்டும் சந்தையில் வெளியிடப்போவதாக அந்நிறுவனமானது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு சாம்சங் நிறுவனமானது புதியதாக சம்சங் கேலக்ஸி நோட் 7 எனும் மொபைல் போனை அறிமுகப்படுத்தியது. அதனை அறிமுகப்படுத்திய இரண்டே மாதங்களில் 30இலட்சம் மொபைல்கள் விற்பனையானது.

ஆனால், பேட்டரியில் ஏற்பட்ட பழுதுகாரணமாக மொபைல்போன்கள் வெடித்து சிதறியது. இதனால் அவை திரும்பப்பெறப்பட்டன.

சாம்சங் நிறுவனம் மற்றும் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் பேட்டரியினை தவிர்த்து மொபைல் போனில் எந்த குறைப்பாடும் இல்லை என அறியப்பட்டது.

சாம்சங் எஸ்டிஐ கோ லிமிட்டெட் மற்றும் அம்பெரெக்ஸ் டெக்னாலஜி லிமிட்டெட் நிறுவனங்கள் சாம்சங் மொபைல்கான பேட்டரியினை தயாரித்து தருகின்றன. இதன் மூலம் மொபைலானது புதுப்பித்து மீண்டும் வெளியிடப்படவுள்ளது.

புதுப்பிக்கப்பட்ட நோட் 7 விற்பனையானது சாம்சங் கேலக்ஸி S8ன் வெளீயிட்டிற்கு சில தினங்களுக்கு முன்னதாக வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE