விஜய் தொலைக்காட்சியில் டிஆர்பியின் உச்சத்தில் இருக்கும் சீரியல் சிறகடிக்க ஆசை.
அண்ணாமலை-விஜயா என்ற தம்பதியின் குடும்பத்தை மையமாக வைத்து ஒளிபரப்பாகும் இந்த தொடர் நாளுக்கு நாள் ரசிகர்கள் கூட்டத்தை பெற்று வருகிறது.
அதோடு முத்து-மீனா ஜோடிக்கு தனியாக ரசிகர்கள் பக்கம் தொடங்கப்பட்டு நிறைய வீடியோக்கள் எடிட் செய்யப்பட்டு வெளியாகிறது.
கடந்த வாரம் முத்துவை வைத்து பிரச்சனை கிளப்பி ஸ்ருதியை வீட்டிற்கு அழைத்து செல்ல அவரது அம்மா ஒரு பிளான் போடுகிறார். ரோஹினி அப்பா டிராமாவை மறைக்க முத்துவை பயன்படுத்தி ஒரு பிரச்சனை கிளப்ப அவர் ஒரு விஷயம் செய்துள்ளார்.
புரொமோ
இந்த நிலையில் சிறகடிக்க ஆசை சீரியலின் இந்த வார புரொமோ வெளியாகியுள்ளது. அதில் மீனாவை நகை திருடி என்ற பழியை ஸ்ருதி பெற்றோர்கள் போடுகிறார்கள்.
இதனால் அழுதபடி விஷயத்தை முத்துவிடம் மீனா கூற பின் பிரச்சனையாகிறது. முத்து ஸ்ருதி அப்பாவை அடித்துவிடுகிறார், இதனால் அண்ணாமலை வீட்டிற்கு வாருங்கள் என கூற ஸ்ருதி நான் வரவில்லை என்கிறார். இதோ அந்த பரபரப்பான புரொமோ,