முகத்திலும் நிழற்படங்களா-தனித்துவம் தான்

218

இன்று நவீன யுகத்தில் மனிதனின் தனித்துவதிறனும் சிந்தனைஆற்றலும் நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டு தான் இருகின்றது.

தென்கொரியாவைச் சேர்ந்த 22 வயது டியான் யூனின் (Dian Yoon) தனது கலைவண்ணங்களை காகிதத்தில் வரைவதில்லை.

இவர் முகத்திலும் கைகளிலும் ஒப்பனையிட்டு, கண்ணைக் கவரும் வகையிலான நிழற்படங்களை உருவாக்குவது அனைவரையும் கவர்ந்து வருகின்றது.

இன்ஸ்டகிராமில் 31,000க்கும் மேலான ரசிகர்களைக் கொண்ட யூன், தனது நிழற்படங்களை மின்னிலக்கத்தின் மூலம் மேம்படுத்துவதில்லை.

ஒப்பனைத் திறன் மட்டுமே இந்த அழகிய படங்களுக்குக் காரணம் என்கிறார் யூன்.

SHARE