முகம்மதுநபி பாலியல் வேட்கை கொண்டவர் பதில் என்ன?

357
இந்த தலைப்பை பார்த்து முகம்மதியர்களுக்கு கடும் கோபம் வரக்கூடும். அந்த கோபத்தின் நேர்மையை நான் அளிக்கும் விளக்கத்துடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் என்று அவ்வாறு கோபப்படுபவர்களைக் கோருகிறேன். முகம்மது முதலாளித்துவ கைக்கூலியா? எ இப்படி விளக்கமளிக்கப்பட்டிருந்தது.

\\\ஏன் இப்படிச் சொன்னால் என்ன தவறு? மார்க்ஸ் வட்டி வங்கியை ஏற்படுத்தச் சொன்னார், மார்க்ஸ் வட்டியை ஆதரித்தார் என்று பொய் சொல்லி அதன் மூலம் மார்க்ஸ் ஒரு யூதக் கைக்கூலி எனச் சொல்லும் உணர்வு கும்பலை நோக்கி (உணர்வு கும்பலை நோக்கி மட்டுமே) அதே திசையில் ஒரு கேள்வியை எழுப்பிப் பார்க்கலாம். இதற்காக பொய் சொல்ல வேண்டிய அவசியமில்லை. முகம்மது லாபத்தை ஆதரித்தார் என்பது ஆதாரபூர்வமான உண்மை. எனவே, முகம்மது நபி ஒரு முதலாளித்துவ கைக்கூலி என்று கூறினால் டி.என்.டி.ஜே விலிருக்கும் எந்தக் கொம்பனாவது மறுக்க முடியுமா?///

இதே அடிப்படையில் தான் மேற்கண்ட தலைப்பும் வைக்கப்பட்டிருக்கிறது. போதை மயக்கத்தில் ஆட்டம் போட்ட மார்க்ஸ் ஒரு வழிகாட்டியா? என்று கேள்வி எழுப்பியிருக்கிறது உணர்வு கும்பல். ஐரோப்பியக் கலாச்சாரத்தில் மது அருந்துவது என்பது வெகு இயல்பானது. கல்லூரி காலத்தில் மார்க்ஸ் மது அருந்தினார் என்பதும் இயல்பானது. ஆனால் அதை இன்று குடும்பத்தை கவனிக்காமல் உழைக்கும் சொற்பக் காசையும் குடித்து அழித்து விட்டு சுயநினைவின்றி வீதியில் வீழ்ந்து கிடக்கும், அல்லது டாஸ்மாக் கடையில் வரிசையில் நிற்கும் ஒரு குடி நோயாளியுடன் மார்க்ஸை ஒப்பிட முடியுமா? மார்க்ஸ் மது அருந்தினார் என்பதை எந்த மார்க்சியவாதியும் மறுப்பதில்லை. ஆனால் அவர் அருந்திய மதுவைக் கொண்டு தான் அவரை மதிப்பிட வேண்டுமா? எனும் கேள்வி யாருக்கு புரியும். ஆனால், உணர்வு கும்பலுக்கு புரியுமா? மது அருந்தியதைக் கொண்டு அவரை வழிகாட்டியா என்று கேள்வி எழுப்ப முடியும் என்றால்; முகம்மதுவுக்கு நபித்துவம் வழங்கப்பட்டதாக கூறப்படுவதற்குப் பின்பும் (கவனிக்கவும் அவர் உலக மக்களின் அழகிய முன்மாதிரியாக, உலக மக்களின் வழிகாட்டியாக ஆனதன் பிறகும்) முப்பதுக்கும் மேற்பட்ட பெண்களை திருமணத்தின் மூலமும், அதற்கு மேலும் சில பெண்களை திருமண உறவுக்கு வெளியேயும் பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்ட முகம்மது நபியை, இதற்கு மேல் உறவுக்கு அலையாதே என்று குரானே கண்டித்த முகம்மது நபியை பொம்பளை பொறுக்கி என அழைப்பதில், ஒரு பொம்பளைப் பொறுக்கி தான் உங்களுக்கு வழிகாட்டியா என்று கேட்பதில் என்ன தவறு இருக்க முடியும்? எனவே, பொருளற்று கோபம் கொள்பவர்கள் தங்கள் விரலை டி.என்.டி.ஜே வை நோக்கி நீட்ட வேண்டும் எனக் கோருகிறோம்.

உணர்வு கும்பல் எழுதியுள்ள 12வது பகுதி முழுவதும் வட்டியின் கொடுமை பற்றியும், தொடர்பே இல்லாமல் பைத்தியக்காரனின் உணர்வற்ற உளரல் போல் யூதர்களுக்கு ஆதரவாக மார்க்ஸ் வட்டியை ஆதரித்தார் என்று திரும்பத் திரும்ப கூறுவதன் மூலமும் நிரப்பியிருக்கிறார்கள். கடந்த பகுதியில் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் இல்லாத ஒன்றை பொய்யாக, இட்டுக்கட்டி கூறி மார்க்ஸ் வட்டியை ஆதரித்தார் என்று அசடு வழிந்த உணர்வு கும்பல் இந்தப் பகுதியில் யூதர்கள் வட்டித் தொழில் செய்பவர்கள், மார்க்ஸும் யூதர் தான் என்பதால் தன் இனத்தை ஆதரிக்க வேண்டும் என்பதற்காக வட்டியை ஆதரித்து மூலதனத்தில் எழுதியுள்ளார் என்று அயோக்கியத்தனமாக உளறியிருக்கிறார்கள். இதனிடையே யூதர்களின் மீது குரான் உமிழும் வெறுப்பு வசங்களை ஆங்காங்கே எடுத்துக்காட்டி இருக்கிறார்கள். அதாவது மார்க்ஸ் எப்ப்படி யூதர்களை ஆதரிக்கிறார் பாருங்கள் என்று பொய்யாய் எழுதி விட்டு அதனுடன் குரான் எப்படி யூதர்களை வெறுத்து எழுதியிருக்கிறது பாருங்கள் என்று ஒப்பீட்டு முறையை பயன்படுத்தியுள்ளார்கள். தெளிவாகச் சொன்னால் குரானுக்கு எதிரானவர் மார்க்ஸ் என்று சிம்பாலிக்காக முஸ்லீம்களிடம் பதியவைக்கும் முயற்சி.

யூதர்கள் மீது குரானுக்கு அல்லது அல்லாவுக்கு அல்லது முகம்மதுவுக்கு ஏன் இந்த வெறுப்பு? பலஸ்தீனியர்கள் மீது தொடுக்கப்படும் பயங்கரவாத தாக்குதல்களையும், அவர்களின் நாட்டை ரவுடித்தனமாக பறித்துக் கொண்டதையும் அறிந்தவர்கள் அனைவரும் இஸ்ரேல் மீது, யூதர்கள் மீது கொடும் வெறுப்பு கொண்டிருப்பார்கள். இது 70 ஆண்டு கால வரலாறு. ஹிட்லர் யுதர்களை விரட்டி விரட்டி கொன்றொழித்த கதையை மட்டும் அறிந்தவர்கள் யூதர்கள் மீது பரிதாபம் கொண்டிருப்பார்கள். இது நூற்றாண்டு கால வரலாறு. ஆனால் குரான் 1400 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே யூதர்கள் மீது மிகக் கடுமையான வெறுப்பை உமிழ்கிறதே இதன் காரணம் என்ன? அவர்கள் நபிமார்களை கொலை செய்தார்கள், அல்லாவின் கட்டளைக்கு மாறு செய்தார்கள் என்பதான பதில்கள் கூறப்படுவது உண்மையானால், யூதர்களைத் தவிர பிற மக்கள் அனைவரும் நபிமார்களை ஏற்றுக் கொண்டார்களா? ஒவ்வொரு நபியும் எதிர்க்கப்பட்டே இருக்கிறார் எனும் போது, பிற மக்கள் மீது இல்லாமல், யூதர்கள் மீது மட்டும் ஏன் இவ்வளவு வெறுப்பு ஏன் உமிழப்படுகிறது? சுருக்கமாகப் பார்க்கலாம்.

யூதம், கிருஸ்தவம், இஸ்லாம் ஆகிய மூன்று மதங்களும் அப்ரஹாமிய மதங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இதில் கிருஸ்தவம் யூத மதத்தின் வழி வந்தது. அப்ரஹாம் என்றழைக்கப்படும் இப்ராஹிமுக்கு இரண்டு மகன்கள். இஸ்மாயில், இஸ்ஹாக் (இஸ்மவேல், ஈசாக்) இப்ராஹிமுக்கும் அவர் மனைவி சாரா வுக்கும் பிறந்தவர் இஸ்ஹாக். இப்ராஹிமுக்கும் சாராளின் வேலைக்காரி ஆகார் க்கும் பிறந்தவர் இஸ்மாயில். இஸ்ஹாக்கின் வழிவந்தவர்கள் யூதர்கள் என்றும், இஸ்மாயிலின் வழி வந்தவர்கள் முஸ்லீம்கள் என்றும் கூறப்படுகிறார்கள். இந்த இரண்டு மகன்களில் அல்லாவினால் சிறப்புக்குறியவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார் என்பது தான் இஸ்லாமியர்களுக்கும் யூதர்களுக்கும் உள்ள முரண்பாடு. இதில் பெரும் குழப்பமும் முரண்பாடுகளும் இருக்கின்றன. (இது குறித்து வாய்ப்பிருந்தால் பின்னர் விரிவாகப் பார்க்கலாம்) யூதமதமும், கிருஸ்தவ மதமும் இஸ்ஹாக் தான் அந்த சிறப்புக்குறியவர் என்கின்றன. இஸ்லாமோ இஸ்மாயில் தான் அந்த சிறப்புக்குறியவர் என்கின்றது. இந்த பங்காளிச் சண்டை தான், தெளிவாகச் சொன்னால் மனைவிக்குப் பிறந்த மகனா? வேலைக்காரிக்குப் பிறந்த மகனா? எனும் கேள்வியில் இருக்கும் கோபம் தான் முகம்மதின் குரானில் யூத வெறுப்பாக வழிகிறது. குரானில், இஸ்லாத்தில் இருக்கும் யூத வெறுப்பு என்பது அறிவியல் வழியிலோ, சமூக உணர்விலோ வந்தது அல்ல என்பது சரியான திசையில் சிந்திப்போருக்கு புரியும்.

வட்டியின் மீது இஸ்லாம் ஏன் கடுமையான தடையை ஏற்படுத்தி இருக்கிறது என கடந்த பதிவில் பார்த்ததை நினைவூட்டிக் கொள்வோம்.

\\\இஸ்லாம் போரில் கொள்ளையடிப்பதை அனுமதிக்கிறது. கனீமத் பொருட்கள் போரில் வென்றவர்களுக்குச் சொந்தம். கனீமத் என்பது கடவுளின் கொடை. முகம்மதின் சம காலத்தில் முகம்மதை பின்பற்றியவர்களின் சொத்து என்பது பெரும்பாலும் கனீமத் பொருட்களால் வந்தது. இதில் நீங்கள் போதுமான அளவு தானம் செய்யுங்கள் என வலியுறுத்துகிறது குரான். அப்படி தானம் செய்யும் பொருட்கள் உங்களை சுத்தீகரிக்கும் என்கின்றன ஹதீஸ்கள். ஏன் தானம் செய்வதின் மூலம் மனிதன் தன்னை சுத்தீகரித்துக் கொள்ள வேண்டும்? ஏனென்றால் அவன் சொத்துகளாக இருப்பவை பிறரிடமிருந்து அபகரிக்கப்பட்டவை. அந்த சொத்துகளை நீங்கள் உண்ணுங்கள், உண்ணுவதால் ஏற்படும் பாவங்களை தானம் கொடுத்து கழுவிக் கொள்ளுங்கள். அதை நீங்கள் விரிவாக்க வேண்டுமென்றால் உங்கள் உழைப்பை செலுத்தி விரிவாக்கம் செய்யுங்கள். மாறாக வட்டி என்பது உழைக்காமல் விரிவாக்கம் செய்வது, அதை செய்யாதீர்கள். இது தான் வட்டியை தடுக்கும் இஸ்லாத்தின் உள்ளடக்கம்///

இதுவும், அறிவியல் வழியிலோ, சமூக உணர்விலோ வந்தது அல்ல என்பது சரியான திசையில் சிந்திப்போருக்கு தெள்ளெனப் புரியும்.

வட்டியின் மீது இஸ்லாத்துக்கு இருக்கும் இயல்பான தடை, யூதர்கள் மீது இஸ்லாத்துக்கு இருக்கும் இயல்பான கோபம் இந்த இரண்டையும் திரட்டி அதை கம்யூனிசத்தின் மீதான, மார்க்ஸின் மீதான கோபமாக மடைமாற்றுவதைத் தான் ‘உணர்வு கும்பல்’ செய்திருக்கிறது. இஸ்ரேலின் ரவுடித்தனத்தை அதை அங்கீகரித்த ஏகாதிபத்தியத்தை ரியல் எஸ்டேட் நடவடிக்கையாக சுருக்கியது உணர்வு கும்பல். வரலாற்று அறிவு இல்லாமல் அரங்கேற்றிய இந்த வரலாற்றுத் திரிப்பை முஸ்லீம்களின் மனதில் இறக்கும் கருவியாக வட்டியின் மீது முஸ்லீம்களுக்கு இருக்கும் வெறுப்பை எப்படி பயன்படுத்தியதோ அதேபோலத் தான் வட்டியின் மீதான வெறுப்பை மார்க்சின் மீதான, மார்க்சியத்தின் மீதான வெறுப்பாக முஸ்லீம்கள் மனதில் படிய வைக்க முயல்கிறது ‘உணர்வு கும்பல்’. அதனால் தான் வட்டியைப் பற்றி குறிப்பிடும் ஒவ்வொரு இடத்திலும் யூதர்களின் வட்டித் தொழிலை மார்க்ஸ் தன் மூலதனத்தில் ஆதரித்தார் எனும் பொய்யை மீண்டும் மீண்டும் இணைத்தே எழுதுயிருக்கிறது ‘உணர்வு கும்பல்’.

யூத இனத்தின் தொழிலான வட்டியை மார்க்ஸ் ஆதரித்தார் என ‘உணர்வு கும்பல்’ கூறுவது வரட்டுக் குற்றச்சாட்டு தானே தவிர அதற்கு எந்த விதமான விளக்கத்தையும் அந்தக் கும்பல் கூறவில்லை. எனவே, அந்த வரட்டுத்தனங்களை புறந்தள்ளி வட்டியின் மீது கவனத்தை குவிக்கலாம். வட்டி என்பது லாபத்தின் ஒரு பகுதி அதாவது தனக்கு உடமை இல்லாத மூலதனத்தை பயன்படுத்தி பெறும் லாபத்தின் ஒரு பகுதியை மூலதன உடமையாளனுக்கு திருப்பியளிக்கும் ஒரு பகுதி தான் வட்டி என்பது. இது தான் வட்டி குறித்த மார்க்சியத்தின் பார்வை. இந்த வட்டிக்கும் மக்களுக்குமான உறவு என்ன? மூலதனமும் தனிச் சொத்துடமையும் இருக்கும் வரை வட்டி நீடிக்கும், ஒழிக்க முடியாது. மார்க்சியத்தின் இந்தக் கூற்றை முஸ்லீம்களாலும் மறுக்க முடியாது. குரான் தண்ணீர் குடிக்காமல் வட்டி வாங்காதீர்கள் என்று 1400 ஆண்டுகளுக்கு முன்பிருந்து கத்திக் கொண்டிருந்தாலும் இன்னும் முஸ்லீம்களிடம் மட்டும் கூட வட்டியை ஒழிக்க முடியவில்லை. இது மட்டுமல்லாமல் முகம்மது, நபி எனும் சான்றிதழ் வாங்கியதிலிருந்து இன்றுவரை இஸ்லாத்தின் சட்டங்களே செயல்பாட்டில் இருக்கும் நாடான சௌதி அரேபியா, முதல் வளைகுடா போரில் அமெரிக்கா தனக்கு செய்த இராணுவ உதவிக்கான பொருளாதார ஈட்டை வட்டியுடன் தான் திருப்பிச் செலுத்தியது. எனவே வட்டியை ஒழிக்க இஸ்லாமும் குரானும் அல்லாவும் முகம்மது நபியும் மட்டும் போதாது மார்க்சும் மார்க்சியமும் வேண்டும் என்பது முஸ்லீம்களுக்கு தெரிந்த ஒன்று தான்.

என்றால் மார்க்சியம் ஏன் வட்டியை தடை செய்யவில்லை? முதலில் மார்க்சியம் கவைக்குதவாத மதங்களின் வேதங்களைப் போல் சட்டத் தொகுப்பு அல்ல. தனிச்சொத்துடமை நீடிக்கும் வரை வட்டியும் நீடிக்கும் என்பதால் அதை மேலிந்து கீழாகத் தான்  ஒழிக்க முடியும். அதாவது பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசு ஏற்பட்டு உற்பத்தி முறையை மாற்றும் நோக்கில் செயல்படும் போது தனியுடமையை ஒழிக்கும் நிலை ஏற்படும். அதன் தொடர்ச்சியாகத் தான் வட்டி ஒழியும்.அதாவது அரசு இந்த வேலையைத் தொடங்கி முடிக்கும் போது தான் மக்களிடம் வட்டி ஒழியும். மாறாக கீழிருந்து மேலாக அதாவது தனி மனித ஒழுக்கத்தின் வாயிலாக வட்டியை தடை செய்து அது மேல் நோக்கி அரசு வரை பரவி வட்டி இல்லாததாகும் என்பது சாத்தியமே இல்லாதது. டி.என்.டி.ஜே வில் இந்த கற்பனைத் தொடரை எழுதும் பாசிலை விட்டு விடுவோம். பாவம் அவர் அறியாதவர். எல்லாவற்றையும் கரைத்துக் குடித்த அறிஞர் ஒருவர் இருக்கிறாரே, திறனிருந்தால் இதை மறுத்து முறியடிக்கட்டும் பார்க்கலாம். நேரடி விவாதம் எனும் வார்த்தைகளுக்கு உள்ளே ஒழிந்து கொள்ள மட்டுமே அவர்களுக்குத் தெரியும்.

வட்டியின் கொடுமைகளைப் பேசும் உணர்வு கும்பல் லாபத்தின் கொடுமைகளைப் பற்றி பேச மறுப்பது ஏன்? லாபக் கோட்பாடு  மனித குலத்தின் உயர்வுக்கு பாடுபட்டுக் கொண்டிருக்கிறதா? அதனால் தான் இஸ்லாம் லாபத்தை ஆதரிக்கிறதா? இந்தக் கேள்விக்கு பதில் சொல்லும் கடமை யாருக்கு இருக்கிறது? இஸ்லாத்தின் சார்பாக எந்தக் கேள்விக்கும் பதில் சொல்ல தயாராக இருக்கிறோம் என்று பீற்றிக் கொள்ளும் அறிஞர்கள் ஏன் இதற்கு பதில் சொல்ல முன்வருவதில்லை. மக்ரிபுக்கு முன் சுன்னத்து உண்டா இல்லையா என்று கேட்டால் தான் மாய்ந்து மாய்ந்து பதில் எழுதுவார்களா? முஸ்லீம்களே, நீங்கள் பதில் கூறுங்கள். வட்டி குறித்து குரான் கூறுவதா, மார்க்சியம் கூறுவதா, எது சரி?

இஸ்லாமிய வங்கி முறை என்று ஒன்று உள்ளது. வட்டியில்லாத வங்கி முறை என்று இஸ்லாமியர்கள் புளகமடைந்து கொள்வார்கள். இந்த வங்கிகளில் தகுதியுடையவர்கள் தொழில் தொடங்க கடன் வாங்கலாம். கடனுக்கு இத்தனை விழுக்காடு வட்டி என்று வட்டி கணக்கிட மாட்டார்கள். ஆனால், அவர்களின் தொழில் லாபகரமாக நடந்தால் கடனை திரும்ப அடைக்கும் போது வாங்கிய கடனை விட குறிப்பிட்ட அளவு அதிகமாக வசூலிப்பார்கள். ஒரு வேளை நட்டமடைந்தால் வாங்கிய கடனை மட்டும் திருப்பச் செலுத்தினால் போதும். இது தான் இஸ்லாமிய வங்கியின் அடிப்படை. லாபகரமாக தொழில் நடந்தால் வாங்கிய கடனை விட ஏன் குறிப்பிட்ட அளவு அதிகமாக கொடுக்க வேண்டும்? இதற்குப் பெயர் என்ன? வட்டியை வட்டி என்றில்லாமல் வேறொரு பெயர் வைத்து விட்டால் அது வட்டி இல்லை என்றாகி விடுமா? பூ என்று சொன்னால் என்ன? புய்ப்பம் என்று சொன்னால் என்ன? இதை வட்டியில்லாத இஸ்லாமிய வங்கி என்று புளகமடையும் முஸ்லீம்களே, வட்டி என்பது லாபத்தின் ஒரு பகுதி என்று மார்க்ஸ் சொன்னதன் அடிப்படையில் தானே இஸ்லாமிய வங்கிகள் செயல்படுகின்றன. சிந்தித்துப் பாருங்கள். குரானில் முகம்மது நபி சொன்னதா? மூலதனத்தில் மார்க்ஸ் சொன்னதா? எது சரி.

ஒருவர் தன்னுடைய தேவைகளுக்காக இன்னொருவரிடம் ஒரு லட்ச ரூபாய் கடன் வாங்குகிறார் என்று கொள்வோம். இரண்டு ஆண்டுகள் கழித்து அந்தக் கடனை திருப்பிச் செலுத்துகிறார். கடனாக கொடுக்கும் போது இருந்த ஒரு லட்ச ரூபாயின் மதிப்பு, இரண்டு ஆண்டுகள் கழித்து திரும்பச் செலுத்தும் போது இருக்குமா? இன்றைய பொருளாதார சூழலில் அப்படி இருப்பதற்கான வாய்ப்பே இல்லை. என்றால் எதன் பொருட்டு கடன் வழங்கியவர் தனக்கு ஏற்பட்ட நட்டத்தை பொறுத்துக் கொள்ள வேண்டும்? கடன் பெற்றவர் தான் பெற்றதை விட அதிகமாக செலுத்தினால் அதில் ஒரு நேர்மை இருக்கிறது. தனக்கு உடமையில்லாத பணத்தை தன்னுடைய தேவைகளுக்காக பயன்படுத்தியிருக்கிறார். அதன் மூலம் லாபம் அடைந்திருக்கிறார் எனும் அடிப்படையில் அந்த தார்மீக நேர்மை வருகிறது. அதேநேரம் கடன் வழங்கியவர் எந்த அடிப்படையில் மதிப்பிழப்பை ஏற்றுக் கொள்வது? பிறருக்கு உதவி செய்வது எனும் அடிப்படையில் கொடுத்த கடனால் தனக்கு ஏற்படும் மதிப்பிழப்பை எப்படி ஈடுசெய்வது? இதற்கு முஸ்லீம்கள் என்ன பதிலை சிந்தித்தாலும் அந்தப் பதிலின் அடிப்படை வட்டி என்பதற்கு மார்க்சியம் அளிக்கும் வரையறையை ஏற்றுக் கொள்வதாகத் தான் இருக்கும். அப்படி என்றால் லாபத்தை அனுமதித்து வட்டியை மட்டும் தடுக்க நினைக்கும் குரானின் செயல் குறைபாடுடையதா? இல்லையா? முஸ்லீம்களே, பதில் சொல்லுங்கள்.

வட்டி வாங்கக் கூடாது, கொடுக்கக் கூடாது என்பது மட்டும் இஸ்லாத்தின் நிலை அல்ல. வட்டிக் கணக்கை எழுதுவதும் பாவம் என்று தான் இஸ்லாம் நிலைப்படுகிறது. இந்த அடிப்படையிலிருந்து தான் முஸ்லீம்கள் வங்கி வேலைக்கு செல்லக் கூடாது என்று முல்லாக்கள் ஃபத்வா வழங்குகிறார்கள். ஒரு நெருக்கடியான சூழல் நேரும் போது பாதிக்கப்பட்டவர்கள் என்ன செய்வது? வேலைவாய்ப்பை இழந்த ஓர் அன்றாட கூலித் தொழிலாளி மனைவி குழந்தைகள் பசியால் வாடும் போது அவருக்கு கிடைக்கும் எளிமையான நிவாரணம் வட்டிக்கு கடன் வாங்குவது தான். இதை தடுக்க நினைக்கும் மதம், அருகிலேயே உணவுக் கடைகளை திறந்து லாபம் சம்பாதிக்க அனுமதி அளித்திருக்கிறது. யதார்த்த உலகில் இருந்து சிந்தித்துப் பார்க்கும் எவருக்கும் மதம் என்ன சொல்ல விரும்புகிறது என்பது புரியும்.

மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துவதில் குற்றம் ஒன்றும் இல்லை. மார்க்சியம் வட்டியை ஆதரிக்கிறது எனும் உணர்வு கும்பல் அதற்கான தெளிவான ஆதாரத்தை கொண்டு வரட்டும். மார்க்சியம் வட்டியை ஒழிக்கவே விரும்புகிறது. ஆனால் தனியுடமை நீடிக்கும் வரை வட்டியை ஒழிக்க முடியாது என்று அறிவியல் பார்வையில் விளக்குகிறது. வட்டி போன்ற சமூகக் கொடுமைகளை மேலிருந்து கீழாக ஒழிக்க முடியுமே அல்லாது. கீழிருந்து மேலாக ஒழிக்க முடியாது என்று தெளிவு தந்திருக்கிறது. ஆனால் உணர்வு கும்பல் ஜாக்கி வைத்து தூக்கும் குரானின் நிலைப்பாடு என்ன? லாபத்தை தக்க வைத்துக் கொண்டு வட்டியை ஒழித்து விடலாம் என்பது மோசடி. வட்டியை எதிர்த்து கூப்பாடு போடுவோர்கள் லாபத்துக்கு எதிராக கள்ள மவுனம் சாதிப்பது கொடுமை. இதை நேமையாக மீளாய்வு செய்ய உணர்வு கும்பலோ, டி.என்.டி.ஜே வோ ஒருபோதும் முன்வரப் போவதில்லை. குரான் எக்காலத்துக்குமான தீர்வு என நம்பிக்கை கொண்டிருக்கும் முஸ்லீம்களே, உங்கள் நம்பிக்கை மூட நம்பிக்கை இல்லை என நீங்கள் கருதினால் நீங்கள் பரிசீலித்துப் பார்ப்பதிலிருந்து தப்பிச் செல்ல முடியாது.

SHARE