முக்கோண நரிகள்-மகிந்தா,ரணில், சரத்பொன்சேகா

475

 

இலங்கையில் யுத்தம் தொடங்கி முடிந்த காலப்பகுதி வரை 5 ஜனாதிபதிகள் ஆட்சிப்பீடத்தில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். ஆனாலும் ஆட்சியில் இருந்த மகிந்தாவைத் தவிர நான்கு ஜனாதிபதிகளும் யுத்தத்தில் வெற்றிக்காண வில்லை. மாறாக கூடுதலான இழப்புக்களையே சந்தித்தனர். சந்திரிக்கா அரசு அதிகூடிய இழப்புக்களைச் சந்தித்து பொருளாதாரத்திலும் வீழ்ச்சி கண்டது. இதனை அடுத்து சந்திரிக்கா அரசு மகிந்தாவின் கையில் இலங்கையின் ஆட்சியை ஒப்படைத்தது.

download Gangarama Temple in Colombo on February 6, 2012_1

இதன் போது ரணில் விக்கிரமசிங்கா அவர்கள் ‘வயலுக்கிறைக்கின்ற நீர் வாய்கால் வழிந்தோடி புல்லுக்கும் என்பதுமாப்போல்’ உள் நுளைந்து கொண்டார். இதன் ஒரு கட்டமாக விடுதலைப்புலிகள் ஒரு தலைப்பட்சமான யுத்த நிறுத்தத்தை 2001ஆம் ஆண்டு டிசம்பர் 24 இல் அறிவித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இதே நாளில் இருந்து ஒருவருட மோதல் தவிர்ப்பினை அரசாங்கமும் அறிவித்திருந்தது. இதனை இரு தரப்பினரும் கடைப்பிடித்தனர். இதன் பின்னர் 31-10-2004 இல் இடைக்கால தன்னாட்சி வரைபு விடுதலைப்புலிகளினால் ரணில் அரசிடம் கையளிக்கப்பட்டு கொள்கையளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில் 07-02-2004 அன்று சந்திரிக்காவினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பேச்சுவார்த்தை குழப்பமுற்றது.

ரணில் விக்கிரமசிங்க அவர்கள் விடுதலைப்புலிகளின் யுத்த நிறுத்தத்ததை சாதகமாக்கிக் கொண்டு அமெரிக்காவின் துணையுடன் கருணாம்மான், பிரபாகரன் இருவருக்குமிடையில் பிரிவை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டு வெற்றியும் கண்டார். இதற்கான ஓர் முன்னெடுப்பாக ஆறு கட்டப் பேச்சுவார்த்தைகள், புரிந்துணர்வு ஒப்பந்தம் தாய்லாந்து, ஜேர்மன், ஒஸ்லோ ஆகிய இடங்களில் நடைபெற்றன. இதன் பின்னர் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக 02-04-2004இல் தமிழ்த் தேசியமம் என்ற அடிப்படையில் தமிழ்த் தரப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற அணியில் விடுதலைப்புலிகளே ஏக பிரதிநிதிகளாகப் போட்டியிட்டு 22 ஆசனங்களைப் பெற்றனர். இதன் பின்னர் ஆழிப்பேரலை பொதுக்கட்டமைப்பு ஒப்பந்தம் ஒன்றை 24-06-2005 அன்று டு.வு.வு.நு யினரும் இலங்கை அரசும் கைச்சாத்திட்டது.

இதற்க்கிடையில் ரணில் விக்கிரமசிங்கவின் ஒரு குள்ளத்தனமாக கருணாம்மான், பிரபாகரன் இருவருக்குமிடையில் சகோதரப்போர் உச்சக்கட்டத்தை எட்டியது. உண்மையிலேயே கருணாம்மானின் பிரிவு டு.வு.வு.நு யினருக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தியது. இக்கால கட்டத்தில் தமிழ் புத்திஜீவிகள், போராளிகள் பலரும் கண்மூடித்தனமாகச் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட ஸ்ரீலங்கா அரசு விடுதலைப்புலிகளுடன் மீண்டும் ஒரு யுத்தத்தை இரகசிய முறையில் ஆரம்பித்தது. இதற்கு உறுதுணையாக சரத் பொன்சேகா போருக்கான முன்னெடுப்புக்களில் போத்தபாயவுடன் இணைந்து செயற்பட்டார்.

இதற்காக வடகிழக்குப் பிரிவினை வாதத்தினைத் தூண்டி பாரியளவிலான இராணுவ நடவடிக்கையினை கொஞ்சம், கொஞ்சமாக முன்னெடுத்தார். இதன் பின்னர் வன்னிப் புலிகள், கிழக்குப் புலிகள் என பாகுபாடு நிலைமை தோற்றுவிக்கப்பட்டது. இதன் ஒரு கட்டமாக 15.07.2005இல் விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே ஏற்பட்ட பொதுக்கட்டமைப்பு உடன்படிக்கைக்கு இலங்கை அரசு உச்ச நீதிமன்ற இடைக்காலத் தடை உத்தரவினைப் பிறப்பித்தது.

விடுதலைப்புலிகள் முற்றாக அழிக்கவேண்டும் என்ற தீர்மானம் மகிந்தவின் கனவாக இருந்தது. இதற்கான முன்னெடுப்பாக இந்தியா, சீனா, பகிஸ்தான் போன்ற நாடுகளுடன் இரகசிய பேர்ச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டது. இதன் போது சரத்பொன்சேகா அவர்கள் பாகிஸ்தான் இந்திய இராணுவத்தினரின் பயிற்சிகளை இலங்கை இராணுவத்தினருக்கு பெற்றுக் கொடுத்தார். 2005ஆம் ஆண்டு டிசம்பர் பதவிக்கு வந்த ராஜபக்ஷ அரசுடன் இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தைகள் ஜெனிவாவில் இடம்பெற்றது. மகிந்த அரசின் முதலாவது திட்டமாக 2007இல் இணைக்கப்பட்டிருந்த வடக்குக், கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்டன. முழுமையாக இராணுவ மயமாக்கப்பட்டது. யுத்தமும்
ஆங்காங்கே கட்டவிழ்க்கப்பட்ட நிலையில் காணப்பட்டது.

இதன் போது கருணா அணியினரை வைத்து சரத்பொன்சேகா சகோதரப் படுகொலையை திட்டமிட்ட முறையில் மேற்கொண்டார். இதன் காரணமாக கருணா அணியினரை வைத்தே பிரபாகரனின் இருப்பிடங்களை நன்கு உளவறிந்து, விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர்களான சங்கர், மகேந்தி, சாள்ஸ் ஆகியோர் கிளைமோர் தாக்குதலின் மூலம் கொன்று குவித்தனர். பிரபாகரன் இருக்கும் பகுதிகளுக்கு ஆள ஊடுருவும் இராணுவத்தினர் அனுப்பப்பட்டனர். இதனால் விடுதலைப்புலிகளின் வியூகம், நகர்வுகள் என்பன பல்வேறு வழியில் தடைப்பட்டது.
இவ்வாறு யுத்தம் ஆங்காங்கே காணப்பட்ட நிலையில் 2008 ஜனவரி 3ம் திகதி மகிந்த அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான யுத்த நிறுத்த ஒப்பந்தம் ஒரு தலைப்பட்சமாக முறியடிக்கப்பட்டு, மகிந்த அரசு இனவாதத்தைப் பிரகடனப்படுத்தி தமிழர் தாயகத்தில் முழு அளவிலான போரை இந்தியா, சீனா, பாக்கிஸ்தான் போன்ற நாடுகளின் உதவியுடன் போரை முன்னெடுத்தார். இதன் விளைவாக 2009-05-08 விடுதலைப்புலிகளுடனான போர் முடிவுக்கு வந்தது. பிரபாகரனும், பிரபாகரன் உள்ளிட்ட போராளிகளும் சண்டைக்களத்தில் கொல்லப்பட்டனர்.

பிரபாகரனின் 30 வருடப் போராட்டம் முடிவுக்கு வந்தது. பொன்சேகாவின் நேரடி நெறிப்படுத்தலிலும், ரணில்விக்கிரமசிங்கவின் புலனாய்வுத் தகவல் அடிப்படையிலும், மகிந்தவின் ஆயுதக் கொள்வனவிலும் இப் போராட்டம் முள்ளிவாய்க்கால் பேரழிவுடன் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. இருந்தபோதும் அண்மையில் லண்டனில் நடைபெற்ற போர்க்குற்றம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுப்பப்பட்ட நிலையில் யார்? குற்றவாளிகள். யார்? நரிகள் என்பதும் கூடிய விரைவில் வெளிச்சத்திற்கு வரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
(இரணியன்)

SHARE