முடிவுக்கு வந்த கிரீஸ் நாட்டு கடன் விவகாரம். புதிய ஒப்பந்தத்தை ஐரோப்பிய நாடுகள் ஏற்றுக்கொண்டதாக தகவல் (வீடியோ இணைப்பு)

433
சர்வதேச செலவாணி நிதியகம் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு திருப்ப செலுத்த வேண்டிய கடன் தொடர்பாக கிரீஸ் அரசு கொண்டு வந்துள்ள புதிய கடன் உடன்பாட்டிற்கு ஐரோப்பிய நாடுகள் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.150621133900_tsipras_juncker_512x288_getty_nocreditசர்வதேச செலவாணி நிதியகம், ஐரோப்பிய நாடுகள் மற்றும் பிற நாட்டு வங்கிகளுக்கு கிரீஸ் நாடு செலுத்தவேண்டிய சுமார் 310 பில்லியன் யூரோ கடன் தொகையின் இறுதி நாள் கடந்த யூன் 31ம் திகதியே முடிவடைந்தது.கடனை திருப்பி செலுத்துவதற்கு கால அவகாசம் மற்றும் கடன் தொகையில் தள்ளுபடி உள்ளிட்ட சலுகைகளை வழங்க வேண்டும் என கிரீஸ் நாடு விடுத்த கோரிக்கைகளை ஐரோப்பிய நாடுகள் நிராகரித்தன.

இது தொடர்பாக,கடந்த 5 மாதங்களாக நடைபெற்று வந்த பேச்சுவார்த்தை தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய நாடுகளுடன் நடைப்பெற்ற பேச்சுவார்த்தையில், கிரீஸ் நாடு புதிதாக கொண்டு வந்துள்ள கடன் ஒப்பந்தத்திற்கு ஐரோப்பிய நாடுகள் ஒருமனதாக சம்மதம் தெரிவித்துள்ளதாக ஐரோப்பிய கவுன்சில் தலைவரான Donald Tusk சற்று முன்னர் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தற்போது தொடர்ந்து 17 மணி நேரங்களாக நடைபெற்று வரும் பேச்சுவார்த்தை தொடர்பான விவரங்கள் இன்னும் முழுமையாக வெளியிடப்படவில்லை.

கிரீஸ் நாடு கொண்டுவந்துள்ள புதிய கடன் ஒப்பந்தம் தொடர்பான தகவல்கள் இன்னும் சற்று நேரத்தில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE