முடிவுக்கு வந்த பெரும் பிரச்சனை! இளையராஜாவின் பிறந்தநாளை ஒட்டிய இசை நிகழ்ச்சியில் மீண்டும் எஸ்.பி.பி

192

இசையால் அத்தனை பேரையும் தன் பக்கம் கட்டிப்போட்ட இசையமைப்பாளர் இளையராஜா. 1000 படங்களை கடந்து இசையமைத்து தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல, தமிழ் இசை உலகுக்கும் அவர் பணியாற்றியிருக்கிறார் என்பதை மறுக்க முடியாது.

பல குரல்களை கண்டெடுத்து சினிமாவில் சிறந்த பாடகர்கள், பாடகிகளாக மாற்றிவர் அவர். அதில் ஒருவர் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். இவர்கள் இருவருக்கும் இடையில் கடந்த சில மாதங்களாக காப்புரிமை விசயத்தில் கருத்து வேறுபாடு இருந்து வந்தது.

இளையராஜாவின் அனுமதியில்லாமல் அவரின் பாடல்களை மேடை கச்சேரிகளில் எஸ்.பி.பி குழுவினர் பாடக்கூடாது என நோட்டீஸ் பாய்ந்தது. இந்நிலையில் இருவரின் தரப்பும் தங்களுடைய கருத்துக்களை முன்வைத்து வந்தது.

 

 

இருந்த போதிலும் எஸ்.பி.பி இளையராஜாவின் மீது தான் வைத்திருக்கும் மரியாதை துளியளவும் குறையவில்லை, எப்போதும் அவரின் காலில் விழுந்து தொட்டு கும்பிடுவதற்கு தயங்கமாட்டேன் என எஸ்.பி.பி கூறியிருந்தார்.

இந்நிலையில் விரைவில் இருவரும் ஒன்று சேருவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள். அவர்களுக்கு நல்ல செய்தியாக தற்போது வந்துள்ளது. வரும் ஜூன் 2 ல் இளையராஜாவின் பிறந்தநாளை ஒட்டி இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளாராம்.

இதில் எஸ்.பி.பி, யேசுதாஸ், பாம்பே ஜெயஸ்ரீ, சுதா ரகுநாதன், உஷா உதூப், மனோ என பெரும் பிரபலங்கள் ஒன்று கூடுகிறார்கள். இந்நிகழ்ச்சி சென்னை செம்பரம்பாக்கம் ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நடைபெறவுள்ளது.

SHARE