முதன்முறையாக தமிழ் தெரியாத ஒரு நடிகையுடன் நடித்திருக்கிறேன் – அதர்வா

163

அதர்வாவுக்கு நாளை பிறந்தநாள். அவர் முதன்முறையாக போலீசாக நடித்து இருக்கும் 100 படம் வரும் வாரம் வெளியாக இருக்கிறது. இதையொட்டி அவர் அளித்த பேட்டி:-
நீங்களும் காக்கி உடை அணிந்து விட்டீர்களா?
ஆமாம். எல்லா ஹீரோக்களுக்கும் போலீஸ் கதையில் நடிக்கும் ஆசை இருக்கும். ஆனால் எனக்கு அதற்கான சரியான கதை அமையவில்லை. சாம் ஆண்டன் 100 கதையை சொன்னபோதே விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் இருந்தது. 100 என்ற எண்ணுக்கு போன் செய்தால், அதை அட்டென்ட் செய்யும் காவலரின் மனநிலை எப்படி இருக்கும்? அவர் உண்மையிலேயே சம்பந்தப்பட்டவருக்கு உதவி செய்வாரா? அல்லது அவருக்கு என்னென்ன சிக்கல்கள் என்பதை பற்றி சொல்லும் படம் இது. எனக்கு உண்மையிலேயே இது வித்தியாசமான கேரக்டர். 100 படம் என்னால் மறக்க முடியாத படமாக இருக்கும்.
போலீசாக நடிக்க தயாரானது எப்படி?
போலீஸ் வேடத்தில் நடிக்கும்போது மற்றவர்களுக்கு என் மீது நம்பிக்கை வருவதற்கு முன்பு எனக்கு நம்பிக்கை வரவேண்டும். அதற்காக வொர்க் அவுட் செய்து பிட் ஆனேன்.
உண்மை சம்பவங்கள் அடங்கிய கதையா?
சில உண்மை சம்பவங்கள் கதையில் இருக்கும். ஆனால் அவற்றை வைத்து கமர்சியலான படமாக கொடுத்து இருக்கிறோம்.
ஹன்சிகாவுடன் நடித்த அனுபவம்?
அவர் ஒரு கால் சென்டரில் பணிபுரிவார். போலீசாக முயற்சி செய்துகொண்டு இருக்கும் நான் அவரை கிண்டல் செய்வேன். கடைசியில் நானே போலீஸ் துறையில் அதுபோன்ற ஒரு வேலையில் சேர்வேன். அது சுவாரசியமாக இருக்கும். கிளைமாக்ஸ் காட்சியில் ஹன்சிகாவுக்கு மிகவும் முக்கியத்துவம் இருக்கும். அவருடன் பணிபுரிந்தது மகிழ்ச்சியாக இருந்தது. முதன்முறையாக சுத்தமாக தமிழ் தெரியாத ஒரு நடிகையுடன் நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது.
பஞ்ச் வசனங்கள் இருக்குமா?
என்னால் விஜய் சார், சூர்யா சார் மாதிரி இப்போது பஞ்ச் வசனம் பேச முடியாது. அவர்கள் உயரம் வேறு.
வெற்றி, தோல்விகளை எப்படி பார்க்கிறீர்கள்?
நான் தேர்வு செய்யும் கதைகள் எனக்கு திருப்தி அளித்தபிறகு தான் தேர்வு செய்கிறேன். ஆனால் வெற்றி, தோல்வி என்பது நம் கையில் கிடையாது. எல்லா படங்களையுமே உயிரை கொடுத்து தான் நடிக்கிறேன். ஒரே மாதிரியான உழைப்பை தான் தருகிறேன். சினிமா என்பது டீம் வொர்க். எனக்கு இப்போது கிடைத்துள்ள அடையாளம் என்பது நான் நடித்த படங்களால் தான் கிடைத்து இருக்கிறது.
SHARE