முதலாளியால் சிதைக்கப்பட்டு நடுவீதியில் கிடந்த பெண்

413

கலதாரி ஹொட்டலில் நடைபெற்ற தனது நண்பரின் திருமண வைபவத்தில் கலந்து கொண்டு விட்டு, நீண்டகாலம் நெருக்கமான வர்த்தகர் ஒருவரை காண கோல்பேஸ் க்கு வந்தபோதே இச் சம்பவத்தை கண்டிருந்தார் ஒருவர்.

பெய்த பெருமழையில் நனைந்து எவ்விதமான மறைப்புகளும் இன்றி பெண்ணொருவர் விழுந்து கிடப்பதை அவர் கண்டார்.

ஒன்றரை நாட்கள் இந்த பெண் விழுந்து கிடந்ததை யாருமே கண்டிக்காமல் செல்ல வாய்ப்பில்லை.

ஆயிரக்கணக்கான மக்கள் நிதமும் நடமாடும், காவற்துறை அதிகாரிகள் அடிக்கடி வந்து செல்லும் இடத்தில் ஒன்றரை நாட்களாக விழுந்து கிடந்தமை ஆச்சரியமான விடயம்.

அந்த பெண்ணிடம் அவர் விபரங்களை கேட்டறிந்த போது, அந்த பெண் அம்பாந்தோட்டையில் இருந்து வந்தாகவும் தான் பணியாற்றிய இடத்தின் உரிமையாளர் அவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகவும் கூறியுள்ளார்.

அந்த பெண்ணுக்கு தேவையான சுகாதார தேவைகளை பெற்றுக்கொடுத்து, அதுவரை நித்திரையில் ஆழ்ந்திருந்த காலிமுகத்திடல் காவற்துறையினரை அழைத்து, சட்டத்தை உடனடியாக செயற்படுத்துமாறு கூறி, அந்த பெண்ணை காவற்துறையினரிடம் ஒப்படைத்தார்.

SHARE