முதலீட்டு மோசடியில் 2 லட்சம் டொலர்களை இழந்த ரொறன்ரோ பிரஜை

121

 

ரொறன்ரோவைச் சேர்ந்த நபர் ஒருவர் முதலீட்டு மோசடியில் சிக்கி இரண்டு லட்சம் டொலர்களுக்கு மேல் இழந்துள்ளார்.

இந்த மோசடியுடன் தொடர்புடைய 24 வயதான அர்விந்தர் சிங் என்ற நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

போலி முதலீட்டு வாய்ப்பு குறித்து இந்த நபர் இணைய வழியாக பிரச்சாரம் செய்துள்ளார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இணைய வழியாக பெயர், தொலைபேசி இலக்கம் மற்றும் மின்னஞ்சல் முகவரியை பெற்றுக்கொண்டு இந்த மோசடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முதலீட்டுக்கு கூடுதல் இலாபம் கிடைக்கப் பெறும் என பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மோசடியில் சிக்கியவர்கள் மேலும் பலர் முறைப்பாடு செய்யாமலிருக்கக் கூடும் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

முதலீட்டு மோசடிகளில் சிக்கியவர்கள் அல்லது அது குறித்த தகவல் தெரிந்தவர்கள் விபரங்களை பொலிஸாருக்கு அறிவிக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

SHARE