முதல் சர்வதேச டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்திய வீரர்! நெருக்கடி கொடுக்கும் வங்கதேசம்

112

 

வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்தின் கிளென் பிலிப்ஸ் தனது முதல் டெஸ்ட் விக்கெட்டை கைப்பற்றினார்.

முதல் டெஸ்ட்
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று சில்ஹெட்டில் தொடங்கியது. நாணய சுழற்சியில் வென்ற வங்கதேசம் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. ஹசன் ஜோய் மற்றும் ஜாகிர் ஹசன் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

பிலிப்ஸ் முதல் விக்கெட்
அஜாஸ் படேல் பந்துவீச்சில் ஜாகிர் ஹசன் (12) போல்டு ஆனார். அதன் பின்னர் களமிறங்கிய ஹொசைன் ஷாண்டோ 37 ஓட்டங்கள் எடுத்த நிலையில் கிளென் பிலிப்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

தனது 2வது டெஸ்டில் விளையாடும் பிலிப்ஸிற்கு இது முதல் சர்வதேச டெஸ்ட் விக்கெட் ஆகும். இரண்டு விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் அரைசதம் அடித்த ஹசன் ஜோய் நியூசிலாந்துக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் விளையாடி வருகிறார்.

டி20 போட்டிகளில் மிரட்டி வரும் பிலிப்ஸ் தற்போது டெஸ்டில் முதல் விக்கெட்டை வீழ்த்தி தனது கணக்கை தொடங்கியுள்ளார்.

SHARE