முதல் நாள் ரத்னம் திரைப்படம் செய்த வசூல்.. எவ்வளவு தெரியும்! இதோ பாருங்க

429

 

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் விஷால் மார்க் ஆண்டனி வெற்றியை தொடர்ந்து நடித்துள்ள திரைப்படம் ரத்னம். கமர்ஷியல் கிங் என தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் இயக்குனர்களில் ஒருவரான ஹரி இப்படத்தை இயக்கியுள்ளார்.

ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் விஷாலுடன் இணைந்து பிரியா பவானி ஷங்கர், சமுத்திரக்கனி, கவுதம் மேனன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

வசூல் விவரம்
இதுவரை ஹரி – விஷால் கூட்டணியில் தாமிரபரணி மற்றும் பூஜை ஆகிய படங்கள் வந்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதே வரவேற்பை ரத்னம் படம் பெறுமா என பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்த நிலையில், ரத்னம் திரைப்படம் முதல் நாள் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் வெளிவந்த முதல் நாளில் ரூ. 3 கோடி வரை வசூல் செய்துள்ளதாம்.

SHARE