முதல் முறையாக மனைவி பற்றி பேசிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.. என்ன சொன்னார் என்று பாருங்க

133

 

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என பல வெற்றி திரைப்படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் நடிகராகவும் அறிமுகமாகியுள்ளார்.

ஸ்ருதி ஹாசனுடன் இணைந்து இனிமேல் எனும் வீடியோ பாடலில் நடித்துள்ளார். இந்த வீடியோ பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக லோகேஷின் நடிப்பு நன்றாக இருக்கிறது என பலரும் கூறி வருகிறார்.

இந்த பாடல் வெளியிட்டு விழாவில் பத்திரிகையாளர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு தொடர்ந்து பதிலளித்து வந்தார் லோகேஷ். ஒரு கட்டத்தில் இந்த பாடலை பார்த்துவிட்டு, உங்கள் மனைவி என்ன சொன்னார் என லோகேஷிடம் கேள்வி கேட்கப்பட்டது.

கேள்விக்கு பதில்
இதற்கு பதில் கூறிய லோகேஷ் “என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய கேள்விகளை நாம் ஆரம்பத்தில் இருந்தே தவிர்த்து வருகிறேன். எனக்கு உங்களுக்குமான தொடர்பு மட்டும் போதும் என நினைக்கிறன். இதனால் பர்சனல் விஷயங்களை பேச எனக்கு விருப்பம் இல்லை. என் வீட்டில் என்ன நடக்கிறது என்பதை பற்றி பொது இடத்தில பேசக்கூடாது என்பதால் இந்த கேள்வியை தவிர்க்கிறேன்” என கூறினார்.

SHARE