முத்தையா முரளிதரனின் பல சாதனைகள்

261

முத்தையா முரளிதரனுக்கு எந்த அறிமுகமும் தேவையில்லை. உலகில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பவர் அவர்தான். அந்த அபூர்வ சாதனையுடன் மேலும் பல சாதனைகளுக்கு சொந்தக்காரர்.

இவர் 28 வருடங்களுக்கு முன்னர் ஒரு பாடசாலை கிரிக்கெட் வீரராக களம் இறங்கியவர். அப்போது பாடசாலை கிரிக்கெட்டில் ஒரு வெற்றிகரமான பந்து வீச்சாளர். அப்போது கட்டுகஸ்தொட்டை சென்ட் அந்தனீஸ் கல்லூரிக்காக விளையாடிய போது இவர் 1991 இல் ஒப்சேர்வர் வருடத்தின் சிறந்த பாடசாலை வீரர் விருதுக்கு தெரிவானார்.

முத்தையா முரளிதரன் இந்த விருதுக்கு தெரிவானது பாடசாலை கிரிக்கெட் வீரர்களுக்கு குறிப்பாக வெளிமாகாண கிரிக்கெட் வீரர்களுக்கு பெரும் உந்துசக்தியாக அமைந்தது.

ஒரு கிரிக்கெட் பருவத்தின் போது ஆயிரம் ஓட்டங்களை பெறுவது அல்லது 100 விக்கெட்டுக்களை வீழ்த்துவது என்ற சாதனையை பல வீரர்கள் நிகழ்த்திய போதிலும் அதில் ஒரு சிலர் மட்டுமே அதனை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்சென்றனர். பாடசாலையை விட்டு விலகியதும் பிரபலமான கிரிக்கெட் கழகம் ஒன்றுக்கு விளையாட்டு அங்கு திறமைகாட்டி தேசிய அணியில் இடம்பிடிக்கும் திறன் ஒரு சிலருக்கு மட்டுமே கிடைக்கும் அரிய வாய்ப்பாகும்.

அவ்வாறான ஒரு வீரர் மேற்படி இலக்கை எட்டியது மட்டுமன்றி அதற்கு அப்பால் சென்று டெஸ்ட் கிரக்கெட்டில் உலக சாதனைகளை முறியடிக்கும் திறன்பெற்ற ஒருவர் 28 வருடங்களுக்கு முன் இலங்கை பாடசாலை கிரிக்கெட் அரங்கில் தோன்றியிருந்தார்.

அந்த காலகட்டத்தில் பாடசாலை கிரிக்கெட அணிகளில் விளையாடிய அனைத்து துடுப்பாட்ட வீரர்களின் கனவுகளையும் தகர்த்த ஒரு ஒப் ஸ்பின் பந்து வீச்சாளராக இவர் ஒவ்வொரு பருவ காலத்திலும் 100 விக்கெட்டுகளை மிகவும் அரிதாக கைப்பற்றி வந்தார். கொஞ்சமே பேசும், விளம்பரத்தை பெரிதும் விரும்பாத அந்த வீரர் சில காலத்தில் உலக கிரிக்கெட் அரங்கில் பிரபல்யம் பெற்றிருந்த முன்னணி துடுப்பாட்ட வீரர்களை கலங்கடிக்கச் செய்தார்.

1991 இல் ஒப்சேர்வர் சிறந்த பாடசாலை வீரர் விருதை வென்ற சில நாட்களில் அவர் இலங்கை தேசிய அணியில் இடம்பிடித்தார். பிறகென்ன டெஸ்ட் கிரிக்கெட் ஒரு நாள் கிரிக்கெட் என்ற அனைத்து வகை கிரிக்கெட்டிலும் பந்து வீச்சு சாதனைகள் அனைத்தும் இவர் வசமாகின. அந்த பெருமைக்குரியவர்தான் முத்தையா முரளிதரன்.

33 ஆவது ஒப்சேர்வர் சிறந்த பாடசாலை வீரர் விருது வழங்கும் நிகழ்வுக்கு முரளிதரன் பிரதம அதிதியாக அழைக்கப்பட்டிருந்தார்.

“ஒரு அணியில் 11 பேர் மட்டுமே விளையாட முடியும் என்பதை இளம் வீரர்களான நீங்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். எவ்வாறான அரிய வாய்ப்பு உங்களுக்கு கிடைத்தால் முழுமையான அர்ப்பிணப்புடன் விளையாட வேண்டும் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்” என்று முரளிதரன் அங்கு பேசியபோது மேலும் குறிப்பிட்டார்.

ஆரம்பகாலத்தில் நீங்கள் நினைத்ததற்கு மாறாக பெறுபேறுகள் அமையலாம் ஆனால் தைரியத்தை இழக்க வேண்டாம். நீங்கள் தொடர்ந்து முயற்சி செய்தால் வெற்றி உங்களைத் தேடி வரும்” என்று முரளிதரன் சுட்டக்காட்டினார்.

மோசமான பெறுபேறுகளுக்கிடையே ஒரு கிரிக்கெட் வீரர் எப்படி நடந்துகொள்கிறார் என்பதில் இருந்து அவரது வெற்றியை யூகித்துக்கொள்ளலாம். எனவே எதிலும் பதட்டப்படாதீர்கள். அமைதியாக இருங்கள் நீங்கள் நிலைப்பதற்கு மாறாகவே எல்லாம் நடக்கக்கூடும் ஆனால் அமைதி காத்தால் வெற்றி இலக்கை எட்டலாம்.

முரளிதரன் 1972 ஏப்ரல் 17 ஆம் திகதி பிறந்தவர்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளை ஒரே பந்துவீச்சாளர் அவர்தான் இலங்கைக்கான 133 டெஸ்ட போட்டிகளில் விளையாடியுள்ள முரளி 800 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இதில் ஒரு போட்டியில் மொத்த 10 க்கு மேற்பட்ட விக்கெட்டுகளை 22 தடவைகளும் 5க்கு மேற்பட்ட விக்கெட்டுகளை 67 தடவையும் பெற்றுள்ளார். அத்துடன் 350 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி மொத்தம் 534 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

SHARE