முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வாவுக்கு எதிரான மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

192

முன்னாள் பிரதம நீதியரசர் சரத்.என்.சில்வாவுக்கு எதிரான மனு மீதான விசாரணை எதிர்வரும் ஜூன் மாதம் 28 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவானது இன்றைய தினம் நீதியரசர்களான பிரசன்ன ஜயவர்தன, முர்து பெர்னாண்டோ மற்றும் காமினி அமரசேகர ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது மனு மீதான விசாரணையிலிருந்து தான் விலகுவதாக நீதியரசர் பிரசன்ன ஜயவர்தன அறிவித்த நிலையிலேயே இந்த மனு மீதான விசாரணை எதிர்வரும் ஜூன் மாதம் 28 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டே இவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

SHARE