முப்பது ஆண்டு கால வீர வரலாற் றின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணங்களில் ஒன்று கருணம்மானின் பிரிவு

430

சகோதர யுத்தம் உலக வரலாற்றில் காணக் கூடிய ஒன்று. ஒரு தாய் வயிற்றில் பிறந்த மக்களிடையே எழுந்த பகை, யுத்தத்தில் முடிந்திருக்கிறது. மொழியாலும், இனத்தாலும் ஒன்றாக இருப்பவர்களிடையே பகை மூண்டதை சங்க இலக்கியமும் சான்று கூறும். அதேபோன்று சேர, சோழ, பாண்டிய மன்னர் வரலாற்றிலும் நாம் அறிந்திருக்கிறோம். குறுநில மன்னர்கள் காலத்திலும் இவ்விதமான யுத்தம் தொடர்ந்திருக்கிறது. இதன் பின்னணியில் இருப்பது மேலதிகாரம்தான் என்பதையும் காணக்கூடும்.

இவ்வகையான பின்னணியை மனதில் நிறுத்தி சில செய்திகளைப் பார்க்கலாம்:

“”தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் அரசியல் வகுப்புகளில் விடுதலைப் புலிகள் இயக்கம் அழிக்கப்பட வேண்டும் எனப் பகிரங்கமாகக் கூறப்பட்டது. இதே கொள்கை டெலோவிடமும் இருந்தது.

ஈபிஆர்எல்எப்-ஐப் பொறுத்தவரையில் மற்றைய இயக்கங்களை அழிக்கும் திட்டம் எப்போதும் இருந்திருக்கவில்லை.

ஆயினும் இந்திய ராணுவத்தின் (அமைதிப்படை) வருகைக்குப் பின் அவர்கள் நடந்து கொண்டவிதம், “எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்’ என்பதை உறுதி செய்தது” என லண்டனில் இருந்து வெளிவந்த “ஈழ பூமி’ என்னும் பத்திரிகையின் ஆசிரியராக இருந்த சண் எனப்படும் சண்முகலிங்கம் கூறினார்.

“”ஓர் உண்மையை நாங்கள் மறந்துவிடக் கூடாது. எமது இயக்கங்கள் மாற்று இயக்கத்துக்குப் பலியாகிப் போன சம்பவத்தில், இந்திய உளவுப் படையினரின் (“ரா’ அமைப்பு) பங்கு கணிசமான அளவு இருந்திருக்கிறது. இதைப் பல இயக்கத்தவர்கள் புரிந்து கொண்டிருந்தும் மீண்டும் மீண்டும் அவர்கள் அதற்குப் பலியாகிப் போனார்கள்”

“”டெலோ இயக்கத்துக்குள் தாஸýக்கும், பொபிக்குமிடையே ஏற்பட்டப் பிரச்னையில், இயக்கத்தை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ஸ்ரீசபாரத்தினம் விரும்பினாலும் அவரின் பரிவு பொபி மீதே இருந்தது”

“”பேச்சுவார்த்தைக்கென யாழ்ப்பாணம் வைத்தியசாலை தேர்ந்தெடுக்கப்பட்டது. 1986 மார்ச் 11-ஆம் தேதி அங்கு ஐந்து மெய்க்காவலர்களுடன் தாஸ் வந்தபோது பொபி குழுவினரால் அழிக்கப்பட்டனர்”

“”(திம்புப் பேச்சுவார்த்தை தோல்விக்குப் பின்) இந்தியாவிலிருந்து வெளியேற்றப்பட்ட மூவருள் இருவராகிய சத்தியேந்திராவும், சந்திரகாசனும் டெலோ இயக்கத்தவர் ஆவர். இவர்களின் வெளியேற்றத்திற்கு தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் காரணம் என டெலோ இயக்கத்தினர் சந்தேகப்பட்டனர்”

“”இந்தக் காலகட்டத்தில் வடபகுதியில் தங்கியிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான துரைரத்தினம், ராஜலிங்கம், ஆலாலசுந்தரம், தர்மலிங்கம் ஆகியவர்களைக் கொல்லும்படி ஸ்ரீசபாரத்தினம் தனது தளபதிகளுக்கு தொலைத் தொடர்பு சாதனம் மூலம் உத்தரவிட்டார்”

“”வடமராட்சிக்குப் பொறுப்பானவர், துரைரத்தினத்தையும் ராஜலிங்கத்தையும் கொல்ல மறுத்துவிட்டார். ஆனால் வி.தர்மலிங்கமும், ஆலாலசுந்தரமும் வகையாக மாட்டிக் கொண்டனர் (1985 செப். 2) – என்று “ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்’ என்ற நூலில் புஷ்பராஜா குறிப்பிட்டுள்ளார். இவர் ஈபிஆர்எல்எஃப் இயக்கத்தைச் சேர்ந்தவர் என்றபோதிலும் இந்தக் குறிப்புகளை அளித்துள்ளார்.

தர்மலிங்கம், ஆலாலசுந்தரம் இருவரின் மரணம் உலகெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இக் கொலைகளைச் செய்தது யார் என்று பெரிய ஆராய்ச்சியே நடைபெற்றது. இந்தக் கொலைகளுக்கு விடுதலைப் புலிகள்தான் காரணமாக இருப்பர் என்றே பெரும்பாலானோர் கருதினர்.

இதுகுறித்து பழ.நெடுமாறன், விடுதலைப் புலிகள் தலைவர் வே.பிரபாகரனிடம் பேசும்போது, அவர் திட்டவட்டமாக மறுத்ததாகக் கூறியுள்ளார்.

பழ.நெடுமாறன் எழுதிய “பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம்’ என்ற நூலில்,
“”நாங்கள் ஏன் இந்தக் கொலைகளைச் செய்ய வேண்டும். அதற்கான அவசியம் என்ன?

அதிலும் தர்மலிங்கம் எங்களால் நன்கு மதிக்கப்பட்டவர். யாருக்கும் மனதாலும் தீங்கு நினைக்காதவர். எங்கள்பால் அன்பு கொண்டவர். காரணமில்லாமல் எதற்காக நாங்கள் அவரைக் கொலை செய்ய வேண்டும்.

இந்தக் கொலைகளை யார் செய்தது என்று விசாரித்துக் கொண்டிருக்கிறோம். விரைவில் உண்மைக் குற்றவாளி பிடிபடுவார்” என்று பிரபாகரன் கூறியதையும் எடுத்தாண்டுள்ளார்.

பின்னர் 1986-ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகளுக்கும் டெலோவுக்கும் நடந்த மோதலில் டெலோ உறுப்பினர் பழனிவேல்-தங்கராசா என்னும் பேராளி கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டபோது அவர், “தலைமையின் உத்தரவு. இது ஓர் அரசியல் தந்திரம்; விளக்கம் தேவையில்லை’ என்று பொபி கூறினார்.

விசாரணையில் பழனிவேல் தங்கராசா மேலும் கூறியதாவது:

“”எங்களுக்குப் பழுப்புநிற மோரிஸ் ஆக்ஸ்போர்டு கார் வழங்கப்பட்டது. நான், சிட்டிபாபு, ரஞ்சித் ஆகியோர் வலண்டையன் தலைமையில் இயங்கினோம். ஆலாலசுந்தரம் வீட்டுக்குச் சென்றோம். அவரைப் பலவந்தமாகக் காரில் ஏற்றிக்கொண்டு தர்மலிங்கத்தின் இருப்பிடத்துக்குச் சென்றோம். ஆலாலசுந்தரம் உங்களிடம் பேசுவதற்காக வந்திருக்கிறார் என்று சொல்லி அவரையும் காரில் ஏற்றிக்கொண்டு “கோண்டாவில்’ என்ற ஊருக்குப் போனோம்.

தர்மலிங்கத்தை சிட்டிபாபுவுடன் இறக்கிவிட்டுவிட்டு, ஆலாலசுந்தரத்தை நல்லூர் கூட்டிச் சென்றோம். அவரை நானும் வலண்டையனும் கொன்றோம். பின்னர் தர்மலிங்கத்தைக் காரில் ஏற்றிக்கொண்டு போய், தாவடி ரோட்டில் வைத்து அவரை சிட்டிபாபு கொன்றார்”

இந்த உண்மை வெளிவந்ததும் விமர்சனம் வேறு வகையாகத் திரும்பியது.

மதுரையில் 1986 மே 5-ஆம் தேதியன்று நடைபெற்ற டெசோ மாநாட்டின்போது, விடுதலைப் புலிகளுக்கும் டெலோவுக்கும் மோதல் ஏற்பட்ட செய்தி அறிந்து, அம்மாநாட்டின் தலைவர்கள், அங்கே இருந்த இலங்கைத் தமிழர் தலைவர்களை, “”ஒற்றுமையுடன் இருப்போம். எங்களுக்குள் மோதலில் ஈடுபட மாட்டோம்” என்று உறுதி கேட்டார்கள். அவர்களும் அவ்வாறே உறுதி அளித்தனர். வாக்குறுதி அளித்தவர்கள் அனைவரும் மதுரையில் இருக்க, இலங்கையின் வடக்குப் பகுதியில் விடுதலைப் புலிகளுக்கும் டெலோவுக்கும் மோதல் உச்சகட்டத்தில் இருந்தது.

இதன் பின்னணி என்ன?

விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த மேஜர் அருணா 1986 ஏப்ரல் 27-ஆம் தேதி சிங்களக் கடற்படையினருடன், கடலில் ஏற்பட்ட மோதலில் கொல்லப்பட்டார். இதையொட்டி யாழ்குடாப் பகுதியில் ஏப்ரல் 28-ஆம் தேதியன்று அஞ்சலி செலுத்தும் வகையில் வேலைநிறுத்தம் கடைபிடிக்கப்பட்டது.

அதற்கு நான்கு நாட்களுக்கு முன்னர் சிங்களக் கடற்படையினருடன் ஏற்பட்ட மோதலில் 11 பேரை டெலோ இயக்கம் இழந்திருந்தது. அவர்களுக்கு அஞ்சலி செலுத்தாமல், விடுதலைப் புலிகள் இயக்க வீரருக்கு மட்டும் அஞ்சலி செலுத்துவதா எனக் கேட்டு மறுநாள் 29-ஆம் தேதி வேலைநிறுத்தம் செய்ய டெலோ இயக்கம் அறிவுறுத்தியது.

இதற்கு மறுத்த கல்வியங்காட்டுப் பகுதி மீது டெலோ தாக்குதலைத் தொடுத்ததும் இதைத் தடுத்த விடுதலைப் புலிகள் இயக்கத் தளபதிகள் மேஜர் பஷீர்காக்கா, லெப்டினன்ட் முரளி ஆகியோரைக் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
இச் சம்பவத்தைத் தொடர்ந்து ஸ்ரீசபாரத்தினத்தின் பழைய நண்பர் என்ற முறையில் விடுதலைப் புலிகளின் தளபதி கேப்டன் லிங்கம் பிரச்னையைப் பேசித் தீர்க்கும் நோக்கத்துடன் டெலோ முகாமுக்குச் சென்றார். ஆனால் அங்கே லிங்கம் கொல்லப்பட்டார்
(தகவல்: பழ.நெடுமாறன்-பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம்).

இதன் பின்னர் டெலோ இயக்கத்தவர்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் மோதல் மூண்டது. இரு இயக்கங்களுக்குமிடையே நடந்த ஒருவார மோதலில் டெலோ இயக்கத் தலைவர் ஸ்ரீசபாரத்தினம் உயிரிழந்தார். (6.5.1986).
இந்த மரணத்துக்கு திமுக தலைவர் மு. கருணாநிதி உள்ளிட்ட டெசோ தலைவர்கள் வருத்தமும் வேதனையும் தெரிவித்தனர். இனி டெசோ அமைப்பு இயங்காது என்று மு.கருணாநிதி அறிவித்தார். முரசொலி நாளிதழ் அவர் எழுதிய இரங்கற்கவிதையை வெளியிட்டது. ஈபிஆர்எல்எஃப் இயக்கம் மட்டும் ஸ்ரீசபாரத்தினம் கொல்லப்பட்டதற்கு, யாழ்ப்பாணத்தில் இரங்கல் ஊர்வலம் ஒன்றை நடத்தியது.

பலத்த விமர்சனங்களுக்கான விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே.பிரபாகரன் அப்போது தமிழ்நாட்டில்தான் இருந்தார். இது குறித்து பிரபாகரன் கூறுகையில், “லிங்கத்தின் சாவுச் செய்தி வந்தபோது நானே கொதிப்படைந்தேன். களத்திலிருந்த எங்கள் தோழர்களுக்கு வேறு வழி எதுவுமில்லை. லிங்கம் படுகொலை மற்றும் எங்களது முக்கியத் தோழர்கள் கைது என்பது தற்செயலாக நடந்ததாகத் தெரியவில்லை. ஆழமான சதியின் விளைவாகவே இவை நிகழ்ந்துள்ளன.

இந்திய உளவு அமைப்புகளின் தூண்டுதல் பேரிலேயே சென்னையிலிருந்த ஸ்ரீசபாரத்தினம் யாழ்ப்பாணத்தில் முகாமிட்டிருக்கிறார் என்பதும், எங்களுடன் மோதி எங்களை ஒழித்துக் கட்டுவதே அவரின் திட்டம் என்பதற்கான ஆதாரங்கள் எங்களுக்குக் கிடைத்திருக்கின்றன. எனவே எங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானோம்.

ஸ்ரீசபாரத்தினத்தையோ, டெலோ இயக்கத்தையோ திட்டமிட்டு நாங்கள் அழிக்கவில்லை. நாங்கள் முந்திக் கொள்ளாவிட்டால் எங்களை அழித்துவிட டெலோ இயக்கத்தினர் முயன்றிருப்பார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

சென்னை சங்கமம் இத்துணை பெரிய வெற்றியைப் பதிவு செய்யுமென நாங்கள் கனவிலும் நினைத்திருக்கவில்லை. காலம் சிலவற்றை எதற்காகவோ கொண்டாடித் தள்ளிவிடுகிறது. அப்படி நிகழ்ந்ததுதான் சென்னை சங்கமம் வெற்றியும். இந்த வெற்றி எங்களுக்கே புரிந்து கொள்ள முடியாத வியப்பென்றால் பலருக்கு அது வயிற்றெரிச்சலைத் தந்திருக்க வாய்ப்பு உண்டு. இலட்சியங்களிலும், உயர்ந்த விழுமியங்களிலும் புடமிடப்பட்டவர் போல் பம்மாத்து காட்டும் எழுத்தாளர் ஞானி சங்கமத்தை கனிமொழியின் விளம்பர விழா என்று எழுதினார். நான் சொல்வது தவறாக இருக்கலாம், ஆனால் சதா விமர்சித்துக் கொண்டே இருப்பது ஒருவகை மனநோய் என்பது என் எண்ணம். இத்தகையோரை நெருங்கி அணுகிப் பார்த்தீர்களென்றால் சிறுமைகள் அவர்களிடத்து நிறைய இருக்கும். ஆதலினால் பொதுவாக இத்தகையோருக்கு நான் பரிந்துரைப்பது கனிவான உளநல உதவி.

பயணங்களின் போது நான் தேடி பணம் கொடுத்து வாங்கிப் படித்து வந்த பத்திரிகை “காலச்சுவடு’. அவர்கள் சென்னை சங்கமத்தை ஜீரணிக்க முடியாமலும் நாலு வார்த்தை பாராட்டாதிருந்தால் தனது நடுநிலை முற்போக்கு முலாம் சேதாரப்பட்டுவிடுமோ என்ற ஜாக்கிரதை உணர்விலும்பட்டிருந்த அவஸ்தை பரிதாபமாய் இருந்தது. போலித்தனங்களும், நாடகத் தன்மைகளும் இன்றி சமூக வாழ்வை கட்டமைத்தல் கடினம்தான். ஆனால் முற்போக்காளர் என தமக்கு முகவரி இட்டுக் கொள்கிறவர்களின் நாடகத்தன்மை அருவருப்பாகிறது.

நக்கீரனைப் போன்ற இன்னொரு பத்திரிகை எனக்கு முகப்பு அட்டை மரியாதை தந்தது. “”அரசின் ஆசிபெற்ற மர்ம மனிதர்” என்பது பெருந்தலைப்பு. “”யார் இந்த ஜெகத் கஸ்பர்?” என்பது துணைக் கேள்வி. சர்ச்சைக்குரிய ஒருவராக சமூக-அரசியற் களத்தில் ஆக்குவதன் மூலம் இயங்கும் ஆற்றலை மட்டுப்படுத்தலாம் என்ற நுட்பமான மேலாதிக்க அரசியல் அதில் இருந்தது. பொழுதுபோக்கு வியாபாரப் பத்திரிகைகளை பொதுவாக நான் விமர்சித்து மெனக்கெடுவதில்லை, அவசியமுமில்லை. ஆனால், அப்பத்திரிகைகள் தலையங்கம் எழுதி ஊருக்கு உபதேசம் செய்யும்போதுதான் பற்றிக் கொண்டு வரும். உபதேசிப்பதற்கு சில அடிப்படை யோக்கியதைகள் வேண்டும் என்றே நினைக்கிறேன். பொதுவாழ்வில் இருப்போரது தனிவாழ்வை சந்திக்குக் கொண்டு வந்து வியாபாரம் நடத்துகிற பத்திரிகை முதலாளிகளின்
தனிவாழ்வில் இருக்கிற வக்கிரங்களை அவர்தம் வாசகர்கள் அறிந்தார்க ளென்றால் ஆடிப் போவார் கள். அந்த வேலையை செய்வதற்கென்றே தனியாக ஒரு பத்திரிகை தொடங்க லாமா என்று கூட நான் யோசித்ததுண்டு.

ஜெயா தொலைக் காட்சி ஏதோ “இந்திய தொலைக்காட்சிகளில் முதன் முறையாக வரும்’ உலகப் புகழ்பெற்ற த்ரில்லர் திரைப் பட விளம்பரம் போல் “சென் னை சங்கம திடுக்கிடும் மர்மங்களுக்கு’ இடைவிடா முன் விளம்பரம் செய்து கொண்டிருந்தது. முன் விளம்பரத்தில் எனது முகத்தை நரகாசுரன் போல் கிராபிக்ஸில் வடிவமைத்திருந் ததை நான் நன்றாகவே ரசித்தேன்.

“சென்னை சங்கமம் ஊடாக பெரும் பணம் வந்தது. வந்த அப்பணம் விடுதலைப்புலிகளுக்குச் சென்றது என்பதுதான்’ இவர்களது பிரதான கதை. துணைக் கதை அமெரிக்காவில் புலிகள் இயக்கத் தடையை நீக்க லஞ்சம் கொடுத்ததாய் கைது செய்யப்பட்ட நாச்சிமுத்து சாக்ரட்டீஸ் எனக்கு நண்பர் என்பது. உண்மையில் துணைக் கதை உண்மைதான். நாச்சிமுத்து சாக்ரட்டீஸ் நான் பார்த்த அறிவாளிகளில் மறக்க முடியாதவர். ஒரு நேரத்தில் நான்கு விஷயங் களை சிதறாமல் சிந்திக்கும் அபார அறிவாற்றல் கொண்டவர். அமெரிக்காவின் அணு ஆயுத திட்டமொன் றில் முதுநிலை விஞ்ஞானியாகப் பணியாற்றியவர். 1970-களில் அண்ணாமலை பல்கலைக்கழகம் உருவாக் கிய தமிழ் அக்னி குஞ்சுகளில் ஒருவர். சேலம் சேந்த மங்கலத்துக்காரர். அற்புதமான மனிதர். எனக்கு நண்பர்.

தந்தை பெரியாரின் கொள்கைபால் ஆழ்ந்த மதிப்பும் ஈடுபாடும் கொண்டவர். ஒரு விதவையை மணம் புரிந்தவர், அதுவும் கலப்புத் திருமணமாய் ஜாதி மீறல் செய்தவர். அமெரிக்காவில் விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்க அவர் உழைத்து வந்தது உண்மை. அதிலொன்றும் தவறேதும் இல்லை. அது சட்டரீதியான செயற்பாடு. ஆனால் அவரை ஏமாற்றி, வஞ்சக வலை விரித்து, 5000 டாலர்கள் ஒரு அதிகாரிக்கு “ஊக்கப்பணம்’ கொடுக்க வைத்து சிக்க வைத்ததில் போதைப்பொருள் கடத்தும் கும்பல் தலைவன் சங்கரசே என்ற தமிழனும், ரஜினிகாந்தின் “பாஷா’ திரைப்படத்தில் ரஜினிகாந்த்துக்கு தங்கையாக வரும் ஒரு கேரக்டரும் உண்டு என்பதை உலகறியாது.

ஜெயா தொலைக்காட்சியில் அந்நிகழ்ச்சி நிஜ மாகவே என்னை மனவருத்தப்படுத்தவில்லை. ஏனென்றால், முன்பு நான் குறிப்பிட்டது போலவே தமிழ் ஈழ ஆதரவு விஷயத்தில் குற்றம் சாட்டப்படுவது பெருமையே என்பது ஒருபுறமிருக்க, பொய் வேகமாகப் பரவினாலும் உண்மை ஒருநாள் உருண்டு, புரண்டு வந்து சேரும் என்ற எனது நம்பிக்கையும் முக்கிய கார ணம். ஆனால் எது வலித்ததென்றால் அந்த நிகழ்ச்சி யை ஆக்கிய பலரில் சௌபா என்ற சௌந்தர பாண்டி முக்கியமானவராக இருந்தார், பணத்திற்காக அதைச் செய்தார் என்று நான் கேள்விப்பட்டபோது உண்மையி லேயே மனது வலித்தது. ஏனென்றால் எனது மாணவப் பருவத்தில் ஏழை மனிதர்களுக்காய் அவர் எழுதிய கட்டுரைகள் படித்து நம்பிக்கை பெற்றவன் நான். அந்த நம்பிக்கை தகர்ந்தபோது வலித் தது. அதுவும் பணத்திற் காகச் செய்தார் என்றபோது ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நமது இனத்தின் போர் வாளாய் நிற் கும் ஆற்றல் கொண்ட தோழர் கள், சில்லறை விஷயங்களுக் காய் சோரம் போவது காண எழும் வேதனை அனுபவித்தவர் களுக்கு மட்டுமே தெரியும். வெளியே ஈழத்தமிழர் களின் துயரத்தை வியாபாரமாக்கிக் கொண்டு இலங்கை தூதரகத் தின் மது விருந்துகளுக்கு மலிவாய் துணை போன பத்திரிகை -ஊடக நண்பர்கள் ஒவ்வொருவரையும் நான் அறிவேன். அவர்கள் மீதான கோபம் தீர்ந்து விட்டது. ஆனால் வலி தொடர்கிறது. துரோக வரலாற்றிலிருந்து நான் சார்ந்த இனத்திற்கு இறைவா, விடிவே இல்லையா என்ற கேள்வியில் வருகிற வலி அது.

கருணா என இன்று நாம் அறிகிற கருணம்மான் விடுதலைப் போராட்டத்தை விட்டு விலகியபோதும் இதே உணர்வுதான் ஏற்பட்டது. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களது உடல் என சொல்லப்பட்டதை அடையாளம் காட்டவென இலங்கை ராணுவம் கருணாவை முல்லைத்தீவுக்கு கடந்த மே 17-ம் தேதி கூட்டிச் சென்றது. முல்லைத் தீவு மண்ணில் தமிழின அழித்தலின் குரூர சாட்சியங்களுக்கு நடுவில் நிறுத்தப்பட்டிருந்த கருணம்மானின் முகத்தில் படர்ந்திருந்த வேதனை இறுக்கத்தை தொலைக்காட்சி வழி நான் பார்க்கத் தவறவில்லை. எந்த இனத்தின் விடுதலைக்காக தனது வாழ்வை அர்ப்பணித்து தலைவன் போற்றிய தளபதியாய் உயர்ந்தாரோ அந்த இனம் தோற்கடிக் கப்பட்டு, பல்லாயிரம் சடலங்களால் பிணக்காடா கிக் கிடந்த அவலத்தின் சாட்சியாய் நிற்க வேண் டிய சாபத்தை எண்ணி கருணம்மான் உள்ளுக்குள் அழாமல் இருந்திருக்க முடியாது. ஒரு காலத்தில் வன்னிக் காடுகளில் வளரும் போராளியாய் தன் தலைவன் பிரபாகரன் உண்டு மிச்சம் வைத்த உணவை உண்ணும் பாக்கியத்திற்காய் தவமிருந்த நாட்கள் கருணம்மானின் மனசாட்சியை அக்கணம் குத்திக் கிழித்து ரணப்படுத்தியிருக்கும்.

2002-ம் ஆண்டு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களை நான் நேர்கண்ட கையோடு வேறு பல மூத்த தளபதிகளையும் நேர்காண முயன்றேன். அவர்களில் முக்கியமானவர் கருணம்மான். மட்டக்களப்பு மாவட்டம் கரடியனாறு பகுதியிலுள்ள அவ ரது முகாமில் நேர்காணலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

மியன்மார் என்ற பர்மா, வியட்நாம், கம்போடியா போன்ற நாடுகள் உலகின் பணக்கார நாடுகளாகவோ, பெரிய நாடுகளாகவோ புகழ்பெறவில்லைதான். ஆனால் இந்நாடுகளுக்குப் பயணம் செய்தீர்களென்றால் பொறாமை யாக இருக்கும். அந்த அளவுக்கு எங்கு நோக்கினும் காடுகள், ஆறுகள், நீர் நிலைகள்… “”மீன் பாடும் தேனாடு” என தமிழர்கள் கொண்டாடும் மட்டக்களப்பு பிராந்தியமும் அப்படித்தான். எங்கு பார்த்தாலும் ஆறுகள், நீர்நிலைகள், காடு, கடல் என செழுமை சிறந்த பிராந்தியம். எளிமையான மக்கள், அவர்தம் விருந்தோம்பல் காவியத்தன்மை கொண்டது. எங்கள் வேரித்தாஸ் வானொலிக்கு மட்டக்களப்பு நகரில் கள அலுவலகம் இருந்தது. உயிரைப் பணயம் வைத்து தொடர்பாளர்களாய் கடமையாற்றிய இருவரை உயிருள்ளவரை நான் மறக்க முடியாது. இன்றைய காலகட்டத்தில் பாதுகாப்பு கருதி அவர்கள் பெயர்களை நான் குறிப்பிட விரும்பவில்லை.

கருணம்மானை பேட்டி காண நான் விரும்பி யமைக்கு பலவேறு காரணங்கள் இருந்தாலும் ஒரு காரணம் முக்கியமானது. ஓர் அரசியல்- ராணுவ ஆய்வாளன் என்ற வகையில் தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இயக்கம் சாதித்த மகத்தான ராணுவ வெற்றியானது என்னைப் பொறுத்தவரை “”ஜெயசிகுறு எதிர்சமர் தான்.

அதிபர் சந்திரிகா அரசு யாழ்ப்பாணத்துக்கு வவுனியாவிலிருந்து தரைவழிப்பாதை திறக்க முயன்ற “”ஜெயசிகுறு” எனப் பெயரிடப்பட்ட யுத்தம் வென்றிருக்குமேயானால் இன்று முல்லைத்தீவில் நடந்தது 12 ஆண்டுகளுக்கு முன்னரேயே நடந்திருக்க வாய்ப்புண்டு. அந்த “”ஜெயசிகுறு” ராணுவப் பெருநகர்வை எதிர்கொண்டு முறியடித்த வரலாற்றில் முக்கிய பங்காற்றியவர்கள் கருணம்மானும் அவரது படையாளிகளும். உள்ளபடியே வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களை “”போராட்ட வரலாற்றில் மகத்தான ராணுவ வெற்றி எது?” என நான் கேட்டபோது அவரும் “”ஜெயசிகுறு எதிர்சமர்” என பதில் தர, நான் உளம் சிலிர்த்ததும் உண்மை. எனவே ஜெயசிகுறு எதிர்சமரின் நாயகன் கருணம்மானை நான் நேர்காண விரும்பியதில் வியப்பில்லை.

முப்பது ஆண்டு கால வீர வரலாற் றின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணங்களில் ஒன்று கருணம்மாவின் பிரிவு என்பது யாவரும் அறிந்ததே. கிழக்கின் போர் அணிகள் இல்லாது போனது பேரிழப்பென்றால் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ராணுவ, பூகோள, அனைத்துலக செயல்பாடு ரகசியங்களை இலங்கை அரசுக்கு அவர் தந்துதவியது கடந்த ஈராண்டு கால போரின் போக்கை முக்கியமாகத் தீர்மானித்தது.

உண்மையில் கருணம்மான் இயக்கத்திலிருந்து பிரிந்துவிட்ட செய்தி கேட்ட அன்று மனதில் அவநம்பிக்கை படர்ந்தது, போராட்டம் பெருத்த பின்னடைவு காணும் என உள்மனது சொன்னது. இன்று தன் எஜமானர்களை திருப்தி செய்ய வேண்டி கருணா பிரபாகரன் அவர்கள்மீது பல விமர் சனங்களை வைக்கலாம். ஆனால் பிரபாகரன் நெஞ்சார நேசித்த போராளிகளில் ஒருவர் கருணம்மான் என்பதே உண்மை. ஏனென்றால், திறமையாளர்களை பிரபாகரனுக்குப் பிடிக்கும். கருணம்மான் வியத்தகு ஆளுமைத்திறன் கொண்ட ஒரு தளபதி. படையணிகளை கட்டி யெழுப்புவதில் மட்டுமல்ல, மக்களோடு நெருங்கி உறவாடி ஆதரவுத் தளத்தை விரிவாக்கு வதிலும் கெட்டிக்காரன். விடுதலைப் புலிகள் இயக்கம் முதலில் பயன்படுத்திய எறிகணை எந்திரம் (Artillery Machine) கருணாவால் இலங்கை ராணுவத்திடமிருந்து கைப்பற்றப்பட் டது. அந்த எறிகணை எந்திரத்தை வன்னியில் நின்ற தன் தலைவனிடம் ஒப்படைப்பதற்காக சுமார் 100 கிலோமீட்டர் அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் பாதை அமைத்துக் கொண்டு சென்று சேர்த்தவர் கருணா. அந்த அளவுக்கு துடிப்பும் செயல்வேகமும் மதிநுட்பமும் கொண்ட கருணா விடுதலைப் போராட்டத்தின் அழிவுக்கு தானும் ஒரு காரணம் ஆனது எப்படி?

 

கடந்த ஆண்டு நவம்பர் 26-ம் நாள் மும்பை நகர் முற்றுகைக்கு உள் ளானது. லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு ஒரே நேரத்தில் எட்டு முனைகளில் நடத்திய தாக்குத லில் மும்பை போர்க்களமானது மட்டுமல்ல இந்தியா ஸ்தம்பித்து நின்றது. தாக்குதல் நடத்திய அணியினரில் ஒருவனான அஜ்மல் அமீர் கசாப் உயிருடன் பிடிபட்டான். மும்பை தாக்குதல் மூலம் லஷ்கர்-இ-தொய்பா சாதிக்க விழைந்தது என்ன? இந்திய அரசமைப்பை திகிலடையச் செய்து அதன் தன்னம்பிக்கையை சிதைப்பது, இசுலாமிய மக்களை தேசிய நீரோட்டத்திலிருந்து மேலும் தனிமைப்படுத்தி, அவர்களிடையே இந்திய அரசமைப்பு மீதான அவநம்பிக்கையை மேலும் ஆழப்படுத்துவது.

உண்மையில் இந்தியாவின் இசுலாமிய மக்கள் மிகுந்த வணக்கத்திற்குரியவர்கள். கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. குடும் பத்தின் வெறுப்பு பிரச்சாரங்களால் ஒருபுறம் துரத்தப்பட்டு, பாகிஸ்தான்-தலிபான் பின்னணி யோடான, இந்தியாவை சீர்குலைக்கும் அரசியல் நோக்கு கொண்ட பயங்கரவாதத்தால் மறுபுறம் நெருக்கப்பட்டும் கூட இந்திய அர சமைப்பு மீது இன்னும் நம்பிக்கை இழக்காதவர்களாக இருக்கிறார்கள். நடந்து முடிந்த தேர்தலில் நம்பிக்கையோடு வாக்களித்து பங்கேற்றிருக் கிறார்கள்.

கல்லூரிக் காலத்திலும், இன்றும் கூட “”மார்க்கம்” என்ற வகையில் இசுலாம் எனக்கு மிக மிக பிடித்த மதம். இந்தியாவின் கொடுமையும் அவமானமுமான சாதி அமைப்பு முறையை ஆணி வேரிலேயே ஆப்பு வைத்து தகர்த்த மதம் இசுலாம் மட்டும்தான். ஷியா, சன்னி மற்றும் வேறுசில சிறு பிரிவுகளைத் தவிர்த்து ஒருவர் இசுலாமியர் ஆகிவிட்டாரென்றால் அவரது சாதி அப்போதே அழிந்து விடுகிறது. அவர் இசுலாமியராக மட்டுமே அறியப்படுவார். கிறித் துவத்தில் கூட இது நடக்கவில்லை. இசுலாத்தின் இன்னொரு சிறப்பு அதன் எளிமை. சடங்கு, சம்பிரதாயங்கள் அதிகம் இல்லை. இறைவன் ஒருவர், நாம் அவர் பிள்ளைகள் என்பதோடு சரி.

எல்லா மதங்களையும் போல் விமர்சிப்பதற்கு இசுலாத்திலும் பல உண்டு. ஆனால் அவை மனிதர்களின் குறையேயன்றி, மார்க்கத்தின் குறை அல்ல. அவை பற்றி விவாதிக்கும் களமும் இதுவல்ல.

எல்லை தாண்டி இங்கு வந்து சேரும் பயங்கரவாதத்தில் இந்தியாவின் இசுலாமிய மக்களது பங்கு, பூஜ்யம் புள்ளி ஒரு சதம் கூட இருப்பதில்லை. அப்பயங்கரவாதத்திற்கு முக்கிய காரணங்கள் அநீதியான இன்றைய உலக ஒழுங்கும் (Global order), நம்மிடையே இருக்கும் மதவாத அரசியலும், அரசு அமைப்புகள் சிலவற்றின் தவறான அணுகு முறைகளும். அமெரிக்காவும் சோவி யத் ரஷ்யாவும் சேர்ந்து தகர்த்த ஆப்கானிஸ்தானின் சிதிலங்கள் பாகிஸ்தானில் கரையொதுங்கும் என்பதும், பலவீனமாகி உருக்குலை யும் பாகிஸ்தானின் சிதிலங்கள் இந்தியாவில் கரையொதுங்குமென் பதும் அரசியல் விஞ்ஞானத்தில் சராசரி அறிவு கொண்டவர்களுக்கே புரியும். எனவேதான் வளமாகவும், வலுவாகவும் வாழ்கின்ற பாகிஸ் தான் நாடு இந்தியாவுக்கு அதிக பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என நாம் சொல்வது. இன்று சிங்களப் பேரினவாதத்தால் தமிழ் ஈழமக்களின் தாயகமும் தேசியமும் தகர்க்கப்பட்டிருக்கிறது. ஈவிரக்கமற்ற சிங்களப் பேரினவாதத்திற்கு உற்ற துணையாய் நின்றது இன்றைய உலக ஒழுங்கும் (ஏப்ர்க்ஷஹப் ர்ழ்க்ங்ழ்), இந்தியாவும். தகர்க்கப்பட்ட ஈழத் தின் சிதிலங்கள் தமிழகத்திலோ இந்தியாவிலோ கரையொதுங்கு மானால் அதற்கு முழுப் பொறுப்பும் நாமாகத்தான் இருக்க முடியும்.

இந்திய அரசமைப்பை திகிலடையச் செய்து அதன் தன்னம் பிக்கையை சிதைக்க முயன்ற அஜ்மல் கசாபும் கூட்டாளிகளும் உல்லாசப் பயணிகள் போல் அரபிக் கடல் வழி இந்தியக் கரையை வந்தடைந்தார்கள். அவர்களால் “ஜாலி’யாக வந்து சேர முடிந்தமைக்கு முக்கிய காரணம் இந்தியாவின் கடற்படை வளங்களில் பெரும்பகுதி இந்தியாவின் இறையாண்மைக்கு எவ்வித அச்சுறுத்தலும் முழங்காத தமிழ் ஈழ விடுதலைப் புலிகளை அழிக்கும் இலங்கை ராணுவத்திற்குப் பின்புலமாக இந்தியப் பெருங்கடல் பரப்பில் நிறுத்தப்பட்டிருந்தமைதான்.

இந்தியப் பெருங்கடலில் நின்ற கடற்படை வளங்கள் நிகர் நிலையாக அரபிக் கடலிலும் நின்றிருந்தால் கசாபும் கூட்டாளி களும் இந்தியாவுக்குள் நுழையும் வாய்ப்புகள் குறைந்திருக்கும். அல்லது கடினமாக இருந்திருக்கும் அல்லது இல்லாமலே போயிருக்கும்.

சிங்களப் பேரினவாதம் தமிழர் மீது நடத்திய இறுதிப் போரில் சீனாவுக்கு அடுத்தபடி அதிக ஆயுதங்களை இலங் கைக்கு கொடுத்துதவிய நாடு பாகிஸ்தான். 2006-ம் ஆண்டு திருகோணமலை சம்பூர் பகுதியில் இருந்த இலங்கை ராணுவத்தின் 27 சிறு முகாம்களை விடுதலைப்புலிகள் அதிரடித் தாக்குதலில் அழித்தார்கள். தாக்குதல் முடிவில் அறியப்பட்ட அதிர்ச்சியூட்டும் உண்மை என்னவென்றால் பாகிஸ்தான் ஏற்பாட்டில் தலிபானிடம் பயிற்சி பெற்ற சுமார் 700 பேர் அம்முகாம்களில் இருந்தனர். இந்த உண்மையை இலங்கை அரசு நுட்பமாக மறைத்துவிட்டது. இன்றும்கூட ராஜபக்சே அரசில் பங்கேற்கும் அமைச்சர் அதாவுல்லாவின் மறைமுக ஆளுகையில் இயங்கும் “கிழக்கு பாதுகாப்பு படையின்’ சுமார் 1400 பேர் பாகிஸ்தானில் பயிற்சி பெற்றவர் கள் எனக் கூறப்படுகிறது. இந்த ஏற்பாடு சீனா-பாகிஸ்தான்- ராஜபக்சே அரசு இணைந்து செய்த ஏற்பாடு எனவும் சொல்லப் படுகிறது. வெற்றிடம் வெறுமனே இருக்காது. கிழக்கு மாகாணத் தில் விடுதலைப்புலிகள் அகற்றப்பட்டு ஏற்பட்ட வெற்றிடத்தை கடந்த மூன்று ஆண்டுகளாய் பாகிஸ்தான்-தலிபான் பின்னணி கொண்ட ஆயுதம் தாங்கியவர்கள் நிரப்பியுள்ளார்கள். குறித்து வைத்துக் கொள்ளுங்கள், இன்னும் சில ஆண்டுகளில் இதுவரை அமைதிப் பூங்காவாகத் திகழும் தமிழகம் குண்டுகள் வெடிக்கும் அச்ச பூமியாக மாறுமேயானால் அதற்கான முழுப் பொறுப்பை யும் தமிழர்களை அழிக்க உதவிய நமது அதிகார அமைப்பினரே ஏற்க வேண்டும்.

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாறு பிறப்பித்த மகத் தான தளபதிகளில் ஒருவரான கருணம்மான் “துரோகி’ என்று தலை முறை நினைவுகளில் பதிவு பெறுவது மிகவும் வேதனையானது. அவரது எத்தனையோ சாதனைகளில் குறிப்பிடத்தக்க ஒன்று கிழக்குப் பகுதி களின் இசுலாமிய மக்களையும் தமிழர் என்ற அடையாளத்திற்குள் உறுதியாக நிலைபெறச் செய்தமை. காத்தான்குடி இசுலாமிய வர்த்தகர்களோடு அவர் உரு வாக்கிய விரிவான வர்த்தக உறவுகளும், பொதுவான அவரது தோழமை அணுகு முறையும் அதற்கு முக்கிய காரணங்கள். அவர் இயக்கத்தை விட்டு விலகிய பின் னணியின் அனைத்து தன்மைகளையும் இங்கு அரங்கேற்றுவது இன்றைய கால கட்டத்திற்கு ஒவ்வாத ஒன் றாகவே கருதுகிறேன்.

நம்மூரில் “வடக்கு வாழ் கிறது- தெற்கு தேய்கிறது’ என்ற முழக்கம் இருந்ததுபோல், இயக் கத்திலும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சிலருக்கு ஒரு மனக்குறை இருந்திருக்கிறது. போர்க்களத்தில் மடியும் போராளிகள் அதிகம் பேர் கிழக்குப் பகுதியினர், ஆனால் முக்கிய பதவிகளில் இருப்போர் வடக்கு மாகாணத் தவர் என்ற மனக்குறை அது. அதை ஊதிப் பெருக்கி இடைவெளியாக்குவதில் இலங்கை புலனாய்வுத்துறை வெற்றி பெற்றதாகவே சொல்ல வேண்டும். இதில் தீர்க்கமான சதிவேலை செய்தவர் இலங்கை ராணுவ புலனாய்வு பிரிவால் நடத்தப்படும் “”ஏசியன் ட்ரிபியூன்” (ஆள்ண்ஹய் பழ்ண்க்ஷன்ய்ங்) என்ற இணைய இதழை இயக்கும் தமிழர். பெயர் ராஜசிங்கம் என்று நினைக்கிறேன். ஓஸ்லோ அமைதிப் பேச்சுவார்த்தை அணியில் சென்ற கருணம்மானை ரகசியமாகச் சந்தித்து கரைத்த மனிதர் இவர் என கதைக்கப்படுகிறது.

முக்கியமாக வடக்கும், கிழக்கும் தொடர் நிலப்பரப்பாக புலிகளின் கட்டுப்பாட்டில் இல்லாதிருந்தமையால் கிழக்குப் பகுதி வன்னியை மையமாகக் கொண்ட பொது நிர்வாகத்தின் கீழ் இயங்கவில்லை. உண்மையில் கிழக்குப் பகுதி கருணம்மானின் முழு ஆளுகைப் பரப்பாகவே இருந்தது. இதனால் விடுதலைப் புலிகளின் பொது நிர்வாகப் பிரிவில் இருந்த சிலருக்கும் கருணம்மானுக்கும் கருத்து வேறுபாடுகள் எழுந்ததும், அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டபின் அக்கருத்து வேறுபாடுகள் உரசலாக மாறியதும் உண்மை. இவற்றோடு பெண்கள் குறித்த சில குற்றச்சாட்டுகளும் எழ பிரச்சனை சிக்கலுக்குள்ளாகியது.

இதில் மிக முக்கியமாக குறிப்பிடப்பட வேண்டியது என்னவென்றால் இறுதிவரை கருணம்மானை இயக்கத்திலிருந்து வெளியேற்றக்கூடாது என்பதில் பிரபாகரன் பிடிவாத மாயிருந்த, ஆனால் உலகிற்கு அதிகம் தெரியாத உண்மை.

பிரபாகரன் அவர்களின் ஆழமான ஆளுமை குணாதிசயங்களில் ஒன்று “எல்லையற்ற நன்றியுணர்வு’ எனச் சொல்கிறார்கள். தன்னைச் சுற்றியிருந்த முக்கிய தளபதிகள் சிலர் கருணம் மானை கைது செய்து, விசாரித்து தண்டிக்க வேண்டுமென பிடிவாதம் செய்தபோது பிரபாகரன் அவர்கள், “கருணா விஷயத்தை என்னிடம் விட்டு விடுங்கள், ஜெயசிகுறு எதிர்சமரில் அவன் இல்லையென்டால் நீங்களும் நானும் கிளிநொச்சியில் இன்டு இருந்திருக்க முடியாது. நானே கதைத்து சரி செய்கிறேன்’ என்றிருக்கிறார். அதற்காகவே கருணம்மானை வன்னிக்கு வரும்படி அழைத்திருக்கிறார்.

ஆனால் தலைவர் தன்மீது வைத்திருந்த தனிப்பட்ட நேசத்தின் ஆழத்தை ஒன்றேல் கருணம்மான் அறியவில்லை, அல்லது ஐயப்பட்டார் என்றே தெரிகிறது. அவசரப்பட்டு இயக்கத்தை உடைத்தார்.

உடைத்தபோதும் கூட இயக்கத்தோடு முழு மோதலில் இறங்காமல் மட்டக்களப்பை விட்டு அவர் அகன்றது சாதுர்யமான முடிவு என்றே கொள்ள வேண்டும்.

மட்டக்களப்பை விட்டு அவர் புறப்படும் செய்தி யறிந்து கொழும்பு மட்டக்களப்பு சாலையில் ஆங்காங்கே புலிகளின் புலனாய்வு அதிரடிப் படைகள் நின்றிருக்கின்றன. ஆனால் அவரை கொழும்புக்கு பத்திரமாக தனது அரசு வாகனத்தில் அழைத்து வந்தது பாராளுமன்ற உறுப்பினர் அலிசார் முகம்மது. அன்று மட்டக்களப்பிலிருந்து வெளியேறிய அலிசார் முகம்மது இன்று வரை எங்கிருக் கிறார் என்பது தெரியாது. அலிசார் முகம்மது, கருணம்மான் இருவருமே பாதுகாப்பிற்காக இந்தியா வந்தார்கள் -அல்லது வருவிக்கப்பட்டார்கள். அலிசார் முகம்மது இங்கு கஸ்தூரி என்ற பழைய திரைப்பட நடிகையோடு சிலகாலம் ஐக்கியமாகி வாழ்ந்து பின் எங்கோ வெளிநாடு போய் விட்டதாகத் தெரிகிறது.

கருணம்மான் இந்திய உளவுத்துறை ஏற்பாட்டில் கேரள மாநிலம் திருச்சூரில் ஈராண்டு காலம் “மலேசிய தொழிலதிபர்’ எனச் சொல்லி வாழ்ந்து பின்னர் இங்கிலாந்து சென்று, அங்கும் நிம்மதியாக வாழ முடியாமல் மீண்டும் இலங்கைக்கே திரும்பி தானும் பெரும்பாடுபட்டு வளர்த்த இயக்கமும், தனது மக்களும் கொடூரமாகத் தகர்க்கப்பட்ட களத்தின் சாட்சியானார்.

ஆயினும் இன்றைய சூழலில் விலங்குகளிலும் கேவலமாய் வதை முகாம்களில் கிடக்கும் மூன்று லட்சத்திற்கும் மேலான தமிழர்களும், கைதாகி படுகொலை, சித்திரவதைகளுக்கு உள்ளாகி வரும் பல்லாயிரம் போராளிகளும் பாதுகாக்கப்பட அவர் உறுதியாக இயங்குவாரேயானால் அவரது பழிகளில் சிலவேனும் கழுவப்படும்.

SHARE