இலங்கையில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டது இனப்படுகொலையே என்றும் இனப்படுகொலை தற்போதும் தொடர்வதாகவும் சுட்டிக்காட்டியதுடன் ஜெனீவாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது தென்னாபிரிக்க அரசு இலங்கை அரசாங்கத்துக்கு சார்பான கருத்துக்களை வெளியிட்டதுடன் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை என்பதையும் அவர் குறிப்பிட்டார். தமிழ் மக்களின் உண்மையான நிலைப்பாட்டினைப் புரிந்து கொள்ளாத தென்னாபிரிக்க அரசு நடுவு நிலைமை வகிப்பதற்கு தகுதியற்றது என்றும் தெரிவித்தார்.
தென்னாபிரிக்க போராட்டத்தில் அவர்கள் இறுதியில் வெற்றி பெற்று நாடொன்றிருக்கின்றது. அங்கு பெரும்பான்மையினரை சிறுபான்மையினர் அடக்கி ஆண்டிருந்தனர். ஆனால் இங்கு நேர்மாறான நிலையே உள்ளது. எங்களிற்கு ஏதும் கி;ட்டியிருக்கவில்லை. எந்த அடிப்படையினில் இனப்படுகொலை செய்த இந்த கொலையாளிகளை மன்னிப்பதெனவும் அவர் கேள்வி எழுப்பினார்.