சுருதிஹாசன், என்னதான் தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்தாலும், அவர் முன்னுரிமை கொடுப்பது என்னவோ பாலிவுட்டுக்கு தான்.
அவர் பெரும்பாலும் ஹிந்தி படங்களில் நடிப்பதால், மும்பையில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். ஆனால் கடந்த வருடம் நவம்பர் மாதம் சுருதிஹாசன் மீது தாக்குதல் நடந்தது. மர்ம மனிதன் அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து சுருதிஹாசனை தாக்கினான்.
ஒருவழியாக தப்பித்த அவர் தன் தோழியுடன் தங்கியிருந்தார். இப்போது அவர் சொந்தமாக ஒரு வீடு வாங்கியுள்ளதாகவும் , விரைவில் அங்கு குடியேற உள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன.
அவர் வீடு வாங்கியுள்ள பகுதி, பிரபலங்கள் பலர் தங்கியுள்ள பகுதி என்பதால் பாதுகாப்பு மிகவும் அதிகம். இனி சுருதிஹாசனுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.