இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் தற்போது இலங்கையை வந்தடைந்துள்ளனர்.
அவர்கள் நேற்று (03) காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து நாடு திரும்பியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன், முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகிய மூன்று இலங்கையர்களும் 2022ஆம் ஆண்டு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
பின்னர் திருச்சியில் உள்ள விசேட முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் விடுத்த கோரிக்கைக்கு அமைய அவர்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாடு திரும்பிய அவர்களை குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் தடுத்து வைத்து விசாரணை செய்துள்ளனர்.