முல்லைத்தீவில் மட்டும் 34,191 ஏக்கர் நிலம் அபகரிப்பு! ஆதாரங்களுடன்-வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

402

 

முல்லைத்தீவில் மட்டும் 34,191 ஏக்கர் நிலம் அபகரிப்பு! ஆதாரங்களுடன் வெளிப்படுத்தினார் ரவிகரன்
வடமாகாண சபையின் காணி அபகரிப்பு தொடர்பான இன்று வியாழக்கிழமை நடைபெற்ற விசேட அமர்வில் 5 மாவட்டங்களிலும் இடம்பெற்ற காணிகள் அபகரிப்பு விவரங்களை மாகாணசபை உறுப்பினர்கள் அம்பலப்படுத்தினர்.

இதில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மட்டும் குறைந்தது 34 ஆயிரத்து 191 ஏக்கர் நிலம் அபகரிக்கப்பட்டுள்ளதாக வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் புள்ளிவிபரங்களுடன் வெளிப்படுத்தினார். அவர் வெளிப்படுத்திய விபரங்களின் படி முல்லைத்தீவில் பிரதேச வாரியாக குறைந்தது, கரைதுறைப்பற்று – 17,919 ஏக்கர் ஒட்டுசுட்டான் – 12585 ஏக்கர் புதுக்குடியிருப்பு – 1,008 ஏக்கர் துணுக்காய் – 2,350 ஏக்கர் மாந்தை கிழக்கு – 329 ஏக்கர் என்றவாறாக காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளன.

தமிழர் தாயகத்தின் இதயபூமியான மணலாறு, கொக்குத்தொடுவாய், கொக்கிளாய், நாயாறு, கேப்பாபுலவு உள்ளிட்ட மாவட்டத்தின் சகல இடங்களிலும் நடைபெறுகிற நில அபகரிப்பை ஆதாரங்களுடன் வெளிப்படுத்தினார். மற்றும் சுதந்திரபுரம், தேவிபுரம், முத்தையன்கட்டு, திருமுறிகண்டி வசந்தநகர் உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 30 வருடங்களாக வசித்து வருகின்ற 139 குடும்பங்களுக்கு மத்திய வகுப்புத் திட்டத்தின் கீழ் காணிகள் வழங்கப்படாததையும், இதனால் வீட்டுத் திட்டமும் கிடைக்காமல் அவர்கள் அலைகிற நிலையையும் புள்ளிவிபரங்களுடன் எடுத்துக்கூறினார்.

SHARE