முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தினுடைய அவசர புனரமைப்புத்தொடர்பில் இறுதியாக நடைபெற்ற ஜனாதிபதி செயலணிக்கூட்டத்தில் வலியுறுத்தியிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு நகரத்திற்கான பிரதான பாதைகளில் ஒன்றாகக் காணப்படுகின்ற ஏ-35 வீதியின் வட்டுவாகல் பாலம் கடந்த நாற்பது வருடங்களிற்கு மேலாக எந்தவித புனரமைப்புக்களுமின்றி சேதமடைந்து காணப்படுகின்றது.
இவ்வாறு சேதமடைந்து காணப்படும் பாலம் அடிக்கடி தற்காலிக புனரமைப்புச் செய்யப்பட்டு வருகின்றன இதேவேளை தற்போது பாலத்தின் மையப்பகுதியில் உடைவு ஏற்பட்டு ஆபத்தான நிலையில்பாரிய குழியொன்று காணப்படுகின்றது.
குறித்த பாலத்திற்குப்பதிலாக புதிய பாலம் ஒன்றினை அமைத்துத்தருமாறு தொடர்ச்சியாக கோரிக்கை விடப்படுகின்றது. இந்த விடயம் தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜாவை இன்று தொடர்புகொண்டு வினவியபோது, குறித்த பாலம் அவசரமாக புனரமைக்கப்படவேண்டும் என்பதுதொடர்பில் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றோம்.
இறுதியாக நடைபெற்ற ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற ஆறாவது ஜனாதிபதி செயலணி கூட்டத்திலும் இந்தப்பாலம் தொடர்பில் நான் குறிப்பிட்டிருந்தேன், இதனை புனரமைப்பது தொடர்பில் IRCORN என்ற தனியார் கம்பனி ஒன்றிற்கு கையளிக்கப்பட்டுள்ளதாகவும் இதனை மதிப்பீடு செய்வதற்கான கடந்த ஏப்ரல் மாத இறுதியில் குறித்த கம்பனியினர் வருவதாக குறிப்பிட்டிருந்தாலும்நாட்டில் அசாதாரண சூழ்நிலையால் காலதாமதங்கள் ஏற்பட்டிருப்பதாக மீள்குடியேற்ற அமைச்சினுடைய செயலாளர் சிவஞானசோதி அவர்கள் தெரிவித்துள்ளார்;
முல்லைத்தீவு மவட்டத்திலுள்ள மற்றுமொரு பாலமான கொக்கிளாய் பாலத்தினை புனரமைப்பதற்கான அமைச்சரவை அங்கிகாரம்கிடைக்கப்பெற்று 48 யூரோ மில்லியன் ரூபா செலவில் வீதிஅபிவிருத்தி அதிகாரசபையினால் புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர்மேலும் குறிப்பிட்டுள்ளார்.