முஸ்லிம்களால் அபகரிக்கப்பட்ட தமிழ்க் கிராமங்கள்-முஸ்லீம் அரசியல் வாதிகளும் மக்களும் இதை புரிந்துகொள்ளவேண்டும்

365

 

திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய தென் தமிழீழம் மிகவும் செழிப்பு மிக்க பிரதேசம் என்பது அனைவரும் அறிந்ததே.
கடல் மற்றும் தரை வளங்கள் அதன் முதுகெலும்பாகக் காணப் படுகின்றன. ஹா என்ன வளம் இல்லை இத்திரு நாட்டில்’ என்ற வாசகம் தென்தமிழீழத்திற்கும் பொருந்தும். அந்தளவுக்கு சகல வளங்களும் நிறைந்த மாகாணமாகவே அது விளங்குகிறது.

கிழக்கு மாகாணத்தின் பூர்வீகக் குடிகளான தமிழர் பண்டைய மன்னராட்சியின் கீழ் சிற்றரசு களை அமைத்து ஆண்டு வந்தனர். ஆனால் இந்த தமிழர்களுடைய பாரம்பரியமான நிலங் கள் சுதந்திரத்திற்குப் பின்னர் திட்டமிட்ட முறை யில் ஆக்கிரமிக்கப்பட்டு சின்னா பின்னமாக்கப் பட்டுள்ளன. கிழக்கு மாகாணத்தில் சிங்களக் குடியேற்றங்கள் சிங்கள ஆட்சியாளர்களால் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ள அதேவேளையில் இஸ்லாமியர்களும் திட்டமிட்ட குடியேற்றங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு நடவடிக்கை மூலமாகவும் தமிழர்களுடைய நிலங்களை தமதுடைமை யாக்கியுள்ளனர் என்ற கசப்பான வரலாறு மறைக்கப்பட்டு வருகிறது. தமிழர்களில் பலர் இதுபற்றி பேசமறுக்கிறார்கள். இவ்வாறு பேசுவது இனக்குரோதத்தை வளர்க்கும் என சிலர் அச்சப்படுகிறார்கள். இருப்பினும் இது விடயத்தில் உள்ள வரலாற்று உண்மைகளே பேசியே ஆகவேண்டும்.


கிழக்கு மாகாணத்திற்கு வியாபார நடவடிக் கைக்காகச் சென்ற முஸ்லிம்கள் அப்பகுதியில் தற்காலிகமாகத் தங்கி வியாபாரத்தில் ஈடு பட்டனர். சிலர் நிலச்சுவாந்திரர்களான தமிழர்க ளிடம் அவர்களின் விவசாய செய்கைக்கு கூலி களாகவும் இருந்து தொழில் செய்து வந்தனர். ஆனால் பின்னர் வியாபாரத்திற்குச் சென்றவர்களும் விவசாயத்திற்கு கூலிகளாக இருந்த வர்களும் எவ்வாறு அங்கு தமது இருப்பை ஏற்படுத்திக் கொண்டார்கள் என்பதும் காணி நிலங் களுக்குச் சொந்தக்காரர்களாகி அப்பகுதி தமது தாயகப் பகுதி என எவ்வாறு மாற்றிக் கொண்டார் கள் என்பதும் இன்று மறைக்கப்பட்ட வர லாறாகவே உள்ளது. இன்று முஸ்லிம் புத்தி ஜீவிகளும் அரசியல் வாதிகளும் இந்த வரலாற் றைத் திரித்துக் கூறி கிழக்கை மட்டுமல்ல வடக்கையும் தமது தாயகப் பகுதியாக உரிமை கொண்டாடி வருகின்றனர்.
முஸ்லிம் இனத்தவர்கள் தமிழ் மக்களின் பூர்வீக நிலத்தில் இருந்துவிட்டார்கள் அதுவும் சில பகுதிகளில் செறிவாகவும் சில பகுதிகளில் பரந்துபட்டும் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் இஸ்லாமியத் தமிழர்களாக இருப்பதால் குறிப் பிட்ட பகுதியில் அவர்கள்வாழ்ந்துவிட்டுப் போகட் டும் என்ற நிலையே தமிழ் மக்களிடமும் தமிழ் அரசியல் தலைவர்களிடமும் இருந்து வந்தது. ஆனால் பிற்பட்ட காலத்தில் குறிப்பாக எண் பதுக்கு பின்னரான காலத்தில் அவர்கள் வடக்குக் கிழக்கு தமது தாயகம் என்று கூறும் அளவிற்கும் வந்துவிட்டதுடன் அத்துமீறிய குடி யேற்றங்கள் மூலமாகவும் மிரட்டல்கள் மூலமாக தமிழர்களின் காணிகளை குறைந்த விலையில் சுரண்டியெடுத்தல் மூலமாகவும் நேரடியாகவும் மறைமுகமாகவும் தமிழர்களின் பூர்வீக நிலங் களை ஆக்கிரமிக்கத் தொடங்கியிருந்தனர். இதனால் தமிழர்கள் படிப்படியாக தமது நிலங்களை முஸ்லிம்களிடம் இழந்தனர்.
முஸ்லிம்களின் இந்த வரலாறு தெரியாமல் தற்போதைய காலகட்டத்தில் சில ஊடகங்களும் சில அறிவாளர்களும் தமிழர்களால் முஸ்லிம்கள் வடக்குக் கிழக்கில் விரட்டியடிக்கப்பட் டனர் என கூறிவருவது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தையும் ஆத்திரத்தையும் ஏற் படுத்தி உள்ளது மாத்திரமல்ல மனக்கிலேசத் தையும் ஏற்படுத்தி உள்ளது என்பது உண்மை.
கிழக்கில் எவ்வாறு திட்டமிட்ட சிங்களக் குடி யேற்றங்கள் நடைபெற்றதோ அதேபோன்று தாமும் சளைத்தவர்களல்ல என்ற வகையில் முஸ்லிம் குடியேற்றங்களும் தமிழர் நிலப்பறிப் புகளும் இடம் பெற்றுள்ளன என்பதை குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களை மையப்படுத்தி எழுதியுள்ள ஹ அழிக்கப்பட்ட தமிழ் கிராமங்கள்’ என்ற நூலில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப் பினராகவிருந்த திரு. சேனாதிராஜா ஜெயா னந்தமூர்த்தி அவர்கள் இதை எழுதியுள்ளார்.
திரு ஜெயானந்தமூர்த்தி நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படுவதற்கு முன்னர் ஒரு ஊடகவியலாளராகவும் இருந்தார். அந்த வேளையில் அவர் பாதிக்கப்பட்ட இடங் களுக்கு நேரில் சென்றும் பாதிக்கப்பட்டவர்களை நேரடியாகச் சந்தித்தும் தொடர் கட்டுரை யாக இலங்கையில் இருந்து வெளியாகும் வீரகேசரி வாரவெளியீட்டுக்கு எழுதியிருந்தார். அது பின்னர் நூலுருவில் வெளியிடப்பட்டது. இந்த நூலே கிழக்கில் முஸ்லிம்களின் அத்து மீறிய குடியேற்றங்களுக்குச் சிறந்த ஆதாரமாக உள்ளது. இந்த நூலில் எழுதப்படாத இன்னும் சில தமிழ் கிராமங்கள் பற்றியும் திருகோண மலையில் தமிழ் கிராமங்கள் எவ்வாறு அழிக்கப் பட்டன என்பன பற்றியும் அவரின் மற்றொரு புத்தகத்தில் வெளிவரவுள்ளதாக நூலாசிரியரான திரு. ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார். எனினும் இக்கட்டுரையில் திருகோணமலையில் முஸ்லிம்களின் அத்துமீறிய குடியேற்றங்கள் பற்றியும் தொட்டுச் செல்லப்படுகின்றது.
சரி இனி கிழக்கின் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் நடந்த அத்து மீறிய குடியேற்றங்கள் பற்றி விரிவாகப்பார்ப்போம். முதலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடந்த குடியேற்றங்கள் தமிழ் மக்களின் வெறி யேற்றம் என்பன பற்றி ஆராய்வோம்.
மட்டக்களப்பு மாவட்டம் வடக்காக வெருகல் வாவி தொடக்கம் தெற்காக நீலாவணை வரை நீண்டுள்ளது. கிழக்கில் வங்காள விரிகுடா கடல் பரந்து கிடக்கின்றது. மேற்கு எல்லையாக பொலனறுவை மற்றும் பதுளை மாவட் டங்களின் சிங்கள கிராமங்கள் அமைந்துள் ளன. மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் (கோறளைப்பற்று) அமைந்துள்ள அழகிய தமிழ் கிராமம் மிறா வேடை தமிழ் கிராமம். இது மிகவும் பழமை வாய்ந்த கிராமம். இங்கு சுமார் 460 குடும்பங்கள் வாழ்ந்து வந்தன. பாடசாலை, பிள்ளையார். காளி அம்மன், முருகன் ஆலயங்களும் இருந்தன. இந்த தமிழ் கிராமத்திற்கு அருகில் மீரா வோடை (முஸ்லிம்) மற்றும் மாஞ்சோலை ஆகிய முஸ்லிம் கிராமங்கள் இருந்தன.
இந்த முஸ்லிம் கிராமத்தில் வாழ்ந்தவர் களுக்கு அருகில் இருந்த மீராவேடை தமிழ் கிராமத்தின் மீது ஒரு கண் இருந்து கொண்டே வந்தது. அங்கிருந்து தமிழ் மக்களை விரட்டி யடித்துவிட்டு அதை அபகரிக்க வேண்டுமென்பதே இதற்குக் காரணம். அதனால் அக்கிராம மக்கள் மீது முஸ்லிம்கள் தொடர்ந்து முறுகல் நிலையை ஏற்படுத்தி வந்தனர். இந்த முறுகல் நிலை மெல்ல மெல்ல அதிகரித்து முதல் தடவையாக 1985 இல் காணித்தகராறு ஒன்று காரணமாக தமிழர்கள் மீது முஸ்லிம்கள் தாக்குதலை நடத்தினார்கள். இது பின்னர் இனக் கலவரமாக மாறியது. முஸ்லிம்களுக்கு ஆதர வாக இராணுவத்தினர் பலமாக இருந்தனர் இராணுவத்தினரின் உதவியுடன் பல வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டனகொள்ளையடிக்கப் பட்டன. இதனால் அக்கிராம மக்கள் அச்சம் காரணமாக முதல் தடவையாக கிராமத்தை விட்டு வெளியேறினர்.
சில மாதங்களின் பின்னர் சுமுகநிலை வந்ததை அடுத்து தமிழ் மக்கள் மீண்டும் தமது சொந்தக் கிராமத்திற்குத் திரும்பியிருந்தனர். எனினும் அச்சநிலையும் இரு இனங்களுக் கிடையே முறுகல் நிலையும் இருந்து கொண்டே வந்தன. சில வருடங்கள் இந்த நிலை இருந் தாலும் இரண்டாம் கட்ட ஈழப்போர் ஆரம் பமான 1990 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பல முஸ்லிம் இளைஞர்கள் இலங்கை படையின் ஒரு பிரிவான ஊர்காவல் படையிலும் பொலி சிலும் இணைந்தனர்.
இதன் பின்னர் நிலமை மிகவும் மோசமானது. இரண்டாவது தடவையாக முஸ்லிம்களும் ஊர் காவல் படையினரும் இணைந்து மேற்படி தமிழ் கிராமத்தின் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் பெரும் வன்முறையை முஸ்லிம் கள் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விட்டனர். இந்த வன்முறை இக்கிராமத்து தமிழர்கள் மாத்திரமின்றி மாவட்டத்தில் இருந்த முஸ்லிம் கிராமங்களுக்கு அருகில் இருந்த அனேக மான தமிழ் கிராமங்களில் நடந்தேறின.
இவ்வன்முறையினால் மீராவோடை தமிழ் கிராமம் ஏறக்குறைய முற்றாக அழிக்கப் பட்டது. மக்கள் நிரந்தரமாக இடம் பெயர்ந்து அயலில் இருந்த தமிழ் கிராமங்களான கிண்ணையடி, சுங்கான்கேணி, வாழைச் சேனை, வினாயகபுரம் ஆகிய கிராமங்களுக் குச் சென்றனர். அதன் பின்னர் முஸ்லிம்கள் திட்டமிட்டவாறு பல நூறு ஏக்கர் காணி களைச் சுவீகரித்துக் கொண்டனர். இதனால் அக்கிராமத்தின் அரைவாசிக்பகுதிக்கு மேல் அத்துமீறிய குடியேற்றங்களைச் செய்தும் பெரும் பகுதியை அபகரித்துக் கொண்டனர். பாடசாலை கோயில்கள் பொதுக் கட்டிடங்கள் அனைத்துமே அழிக்கப்பட்டன.
தியாவட்டவான்
கொழும்பு- மட்டக்களப்பு வீதியில் வாழைச்சேனை பிரதேசத்தில் அமைந்திருந்த பழமை வாய்ந்த தமிழ் கிராமம் தியாவட்டவான். அதுதற்போது முஸ்லிம்களினால் ஆக்கிரமிக்கப்பட்டு முஸ்லிம் கிராமமாக மாற்றப்பட்டுள்ளது. இக்கிராமத்திற்கு அருகில் காவத்தமுனை முஸ்லிம் கிராமமும் ஓட்டமாவடி முஸ்லிம் பகுதியின் எல்லையும் அமைந்திருந்தன. தியாவட்டவான் கிராமத்தில் நீண்ட கால வரலாற்றைக் கொண்ட தமிழ் கலவன் பாடசாலை, ஆலயங்கள் என்பனவும் இருந்தன. அருகில் வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலை இருந்ததால் இக்கிராமம் மிகவும் வளர்ச்சி கண்டிருந்தது. இக்கிராமத்தை அபகரிக்க வேண்டுமென்ற எண்ணம் முஸ்லிம்களுக்கு இருந்துவந்தது, இலங்கையில் ஒரேயொரு கடதாசித்தொழிச்சாலையாக இது இருந்தது. கொழும்புநாரகென்பிட்டியவில் இதன் உபநிலையம் உள்ளது. எண்பது காலகட்டத்தில் இக்கடதாசி தொழிச்சாலையில் சுமார் இரண்டாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் வேலை செய்தனர். அதில்சுமார்
பத்து வீதத்திற்கும் குறைந்தவர்களேமுஸ்லிம் தொழிலாளர்கள். அதிலும் உயர்பதவிகளில் இருந்தவர்கள் அனைவரும் தமிழர்கள். முஸ்லிம்கள் சாதாரண தொழிலாளர்களாகவே இருந்தனர். இக்கடதாசித் தொழிற்சாலையும் தற்போது முஸ்லிம்களின் கைகளுக்குச் சென்று விட்டது.
தியாவட்டவான் கிராமத்தில் முதற்தடவையாக 1983 ஆகஸ்ட் மாதத்தில் முஸ்லிம் காடையர்களால் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதன் பின்னர் 1985 மற்றொரு தாக்குதல் தமிழர்கள் மீது நடத்தப்பட்டது. இத்தாக்குதல்கள் காரணமாக பல வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டன. சிலர் கொல்லப்பட்டனர்.இத்தாக்குதல் காரணமாக தமிழ் மக்கள் கிராமத்தை விட்டு வெளியேறினர். இத் தாக்குதல்களுக்குப் பின்னாலும் இலங்கை படையினரின் உதவிஇருந்தது. இலங்கை இராணுவத்தில் முஸ்லிம்இளைஞர்களும் இருந்தது மாத்திரமின்றிமுஸ்லிம்கள் தமது வியாபாரம், மரக்கடத்தல்கஞ்சாக் கடத்தல் போன்ற சுயநலத்திற்காகஇராணுவத்தினருக்கு உதவிகளை செய்வதும்வழக்கமாக இருந்தது. தியாவட்டவான் கிராமத்தை விட்டு வெளியேறியவர்கள் அயற்கிராமங்களிலேயே நீண்டகாலம் அகதிகளாக இருந்தனர். அவர்கள் 1988 ஆம் ஆண்டில் இந்தியஇராணுவத்தினரின் வருகைக்குப் பின்னர் சொந்த கிராமத்திற்குச் சென்றனர்.
ஆனால் அங்கு தமது பெரும்பாலான காணிகளிலும் வீடுகளிலும் முஸ்லிம்கள் அத்து மீறிக் குடியேறியிருந்தனர். தமிழ் கலவன் பாடசாலை அரபா முஸ்லிம் பாடசாலையாக பெயர்மாற்றம் செய்யப்பட்டிருந்தது. ஆலயத்தின் அடையாளமே தெரியாமல் குடியேற்றம் இடம்பெற்றிருந்தது. மக்கள் எங்கு முறையிட்டாலும்உரிய பலன் கிடைக்கவில்லை. சில தமிழ் வீடுகள் எஞ்சியிருந்தன. அதில் குறைந்த குடும்பங்கள் குடியேறினர். மீண்டும் அவர்கள் மீதும் 1990 ஐ×ன் மாதத்தில் தாக்குதல் நடத்தப்பட்டன. இதனால் அவர்களும் முற்று முழுமாக வெளியேற்றி விட்டனர். இதனால் தற்போது இத்தமிழ்கிராமம் முற்று முழுதாக முஸ்லிம் கிராமமாகமாறியுள்ளது. தற்போது கடதாசி தொழிச்சாலை குறைந்த ஊழியர்களுடன் இயங்கினாலும் 90சதவீதமானவர்கள் முஸ்லிம்களே.
ஓட்டமாவடி
ஓட்டமாவடி கிராமம் ஒரு கலப்புக் கிராமம்தான். ஆனால் கிராமத்தின் அதிகாரமும் அதன்மையப்பகுதியும் தமிழர்களுடையது. ஓட்டமாவடியில் 60 வீதமானவர்கள் முஸ்லிம்களாகவும் ஏனையவர்கள் தமிழர்களும் வாழ்ந்தனர்.ஓட்டமாவடி கிட்டத்தட்ட ஒரு உபநகரமாகவேஇருந்தது. பல கடைகளும் பெரும் கல்வீடுகளும் நகரின் மையப்பகுதியில் தமிழர்களுடையதாகவே இருந்தன. தமிழர்களின் வழிநடத்தலிலே இக்கிராமம் இயங்கியது. இதன்மையப்பகுதியில் பிள்ளையார் ஆலயம் இருந்தது. அது தமிழர்களின் வழிபாட்டுத்தலம்.முஸ்லிம்களுக்குச் சற்றுத் தொலைவில் பள்ளிவாசல் இருந்தது. தமிழர்களின் மயானமும்மையப்பகுதியில் ஒரு புறத்தில் அமைந்திருந்தது. இக்கிராமத்தில் இரு இனத்தினரும் ஆரம்பகாலத்தில் ஒற்றுமையாகவே வாழ்ந்தனர்.ஆனால் 83 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இங்கு இருந்த தமிழர்கள் மீதும் தாக்குதல்கள் ஆரம்பமாகின.
இத்தாக்குதல்கள் மெல்ல மெல்ல அதிகரித்து 85, 90 ஆம் ஆண்டுப்பகுதியில் அங்காங்கு நடந்த தமிழர் மீதான தாக்குதல்கள் போன்றே ஓட்டமாவடி தமிழ் மக்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டன. பெரும் கடைகள் வீடுகள் என்பன அடித்து நொருக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்ட பின்னர் தீயிட்டுக் கொழுத்தப்பட்டன. இதனால் தமிழர்களுக்கு முஸ்லிம்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தமுடியாமல் அப்பகுதியை விட்டு வெளியேறினர்.வெளியேறிய தமிழர்கள் கறுவாக்கேணி கிராமத்தில் தற்போது நிரந்தரமாக வாழுகின்றனர். ஓட்டமாவடியில் இருந்த தமிழர்களின் பல காணிகள் வீடுகள் என்பன முஸ்லிம்களினால் அத்துமீறிப் பிடிக்கப்பட்டன. சில காணிகளை மனச்சாட்சியுள்ள சில முஸ்லிம்கள் தமிழர்களிடம் காசு கொடுத்து வாங்கிக் கொண்டனர்.அங்கிருந்த பிள்ளையார் ஆலயம் உடைக்கப்பட்டு தற்போது அதில் மீன்சந்தை கட்டப்பட்டுள்ளது. மயானம் அழிக்கப்பட்டு தபாலகம், பிரதேச செயலகம் என்பன கட்டப்பட்டுள்ளன.
ஓட்டமாவடி பகுதி 1990 ஆம் ஆண்டுக்குமுன்னர் வாழைச்சேனை தமிழ் பிரதேச செயலகப் பிரிவுக்குள்ளேயே இருந்தது. 90 ஆம் ஆண்டு ஏற்பட்ட அசாதாரண சூழல் இனவன்முறைகள் காரணமாக அரசாங்கம் தற்காலிகமாக இந்த பகுதியை நிருவாக ரீதியாக ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவாக மாற்றப்பட்டு முழுமையான முஸ்லிம் பிரதேசமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த வன்முறைகள் மற்றும்தனியான செயலக நிருவாக பிரிவுகள் என்பனவற்றை ஏற்படுத்துவதில் முஸ்லிம் அரசியல் வாதிகளுக்கு நிறையவே பங்கிருந்தது. அத்துமீறிய குடியேற்றங்களையும் இவர்களே அதிகம் தூண்டி விட்டனர். முஸ்லிம் ஊர்காவல் படை மற்றும் முஸ்லிம் இளைஞர்களை பொலிஸ் சேவையில் இணைத்தல் போன்றவற்றையும் இந்த அரசியல்வாதிகளே திட்டமிட்டும் செய்தனர்.
இதன் மூலம் தமிழர்களின் பலத்தை அழிப்பது மாத்திரமின்றி போராட்டத்தையும் சிதைப்பதும் கிழக்கில் முஸ்லிம்களுக்கென தனியானமாகாண அலகுகளை ஏற்படுத்துவதும் நோக்கமாக இருந்தது. இந்த வகையில் இந்த அரசியல்வாதிகளினதும் முஸ்லிம் காடையர்களின் நோக்கங்களில் தனியான பிரதேச செயலகம் அமைத்தது முதற்படியாக வெற்றி பெற்றது. இந்த திட்டமிட்ட நடவடிக்கைகளின் பின்னணியில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் அமைச்சருமான எம்.எச்.எம்.அஸ்ரப், தற்போதைய கட்சித் தலைவர் ரவூப் கக்கீம், பசீர் சேகுதாவூத், எம்.எல்.ஏ.எம்.கிஸ்புல்லா உட்பட பலர் செயற்பட்டனர்.
உண்மையில் மட்டக்களப்பு மாவட்டத்தைப்பொறுத்தவரையில் 85 ஆம் ஆண்டுக்கு முன்னர் முஸ்லிம்கள் பரந்துபட்டோ அல்லது பலஇடங்களிலோ வாழவில்லை. அவர்கள் பிரதானநெடுஞ்சாலையை அண்டியதாக கொழும்பு-மட்டக்களப்பு வீதியில் ஓட்டமாவடி, ஏறாவூர்,காத்தான்குடி ஆகிய மூன்று இடங்களிலுமே வாழ்ந்தனர். இந்த இடங்களை ஒட்டியதாக ஒருசில கிராமங்களும் இருந்தன. ஆனால் தற்போது நில ஆக்கிரமிப்பு, திட்டமிட்ட குடி யேற்றம் போன்றனவற்றால் குறைந்தது ஐம்பதுகிராமங்கள் வரை அமைத்துள்ளனர்.
ஏறாவூர்
ஓட்டமாவடியில் தமிழர்களை விரட்டியடித்ததுபோலவே ஏறாவூர் தமிழ் கிராமத்தில் இருந்தும் தமிழர்கள் விரட்டடியக்கப்பட்டனர். இந்த சம்பவங்களும் 83, 85, மற்றும் 90 ஜுன்மாதத்திலும் இடம் பெற்றன. ஏறாவூர் தமிழ்கிராமம் மிகவும் செழிப்பான கிராமம். அங்குள்ளவர்களில் அதிகமானோர் பொற்கொல்லர்களாகவும் பெரும் வியாபாரிகளாகவும் இருந்தனர். இதனால் ஏறாவூர் நகர் மிகவும் பரபரப்பாகவே எப்போதும் இருக்கும். அது மாத்திரமின்றி அங்கு வாரச்சந்தை நடப்பதும் வழங்கம்.இத்தமிழ் கிராமத்திற்கு அருகில் இருந்தது ஏறாவூர் முஸ்லிம் பகுதி. அது அப்போது பெரியளவில் அபிவிருத்தியடைந்து இருக்கவில்லை.
இதனால் தமிழ் பகுதியைப் பார்த்துஆத்திரமும் வெறுப்பும் அடைந்திருந்த முஸ்லிம்கள் சந்தர்ப்பம் பார்த்திருந்து தாக்குதல்களை நடத்தினர். இத்தாக்குதல்களில் 90 ஆம் ஆண்டு ஜுன் மாதத்தில் நடந்த தாக்குதலே மிகவும் மோசமானதாக அமைந்திருந்தன. இத்தாக்குதலால் ஏறாவூர் தமிழ் கிராமம் முற்றாக அழிக்கப்பட்டன. தற்போதும் அந்த அழிவுகள் அப்படியே கிடப்பதைக் காணலாம். இந்த மக்கள் இன்னமும் மீளக் குடியமரவில்லை. ஆனால் இக்கிராமத்தின் எல்லைப்பகுதிகள் மற்றும் சில பகுதிகளை முஸ்லிம்கள் ஆக்கிரமத்துள்ளனர். இதுதவிர அப்பகுதியில் இருந்த தமிழ் மக்களுக்கானபல ஏக்கர்கணக்கான தோட்டக்காணிகள் அரச நிலம் என்பனவற்றை ஆக்கிரமித்துஜின்னாநகர், மிச்நகர் என்று பல கிராமங்களை புதிதாக அமைத்துள்ளனர்.
கொழும்பு வீதியில் புனாணை கிராமத்திற்கு எதிராக இருந்த தமிழர்களின் காணிகள் மற்றும்வன இலாகாவுக்கான காணிகளில் திட்டமிட்டமுஸ்லிம் குடியேற்றத்தை கிஸ்புல்லா 94 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அமைச்சராக இருந்தபோது ஏற்படுத்தினார். தற்போது அது பெரும் நகரமாக அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. தற்போது மேலும் இந்த பகுதியிலும் வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புனாணை கிழக்கு பகுதியிலும் தமிழர்களின் பூர்வீகக் காணிகளைச் சுவீகரித்து அத்துமீறிய குடியேற்றங்களை முஸ்லிம்கள் செய்து வருகின்றனர்.
இதுதவிர முஸ்லிம்களால் சிதைக்கப்பட்ட பல தமிழ் கிராமங்கள் உள்ளன. ஆறுமுகத்தான்குடியிருப்பு, வாழைச்சேனை தமிழ் கிராமம், நாவலடிச்சந்தி, ஆரையம்பதி எல்லைக்கிராமம், புதுக்குடியிருப்பு, செல்வாநகர் என கிராமங்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்லுகின்றது.
அம்பாறை மாவட்டம்
அம்பாறை மாவட்டம் முற்றுமுழுதாக தமிழ் பாரம்பரிய கிராமங்களைக் கொண்டதாகவும் அவர்களே பெரும்பான்மையினத்தவராகவும் இருந்ததுடன் ஆங்காங்கே முஸ்லிம்களும் சிங்களவர்களும் திட்டுத்திட்டாக வாழ்ந்தனர். ஆனால் 1956 ஆம் ஆண்டு அப்போதைய இலங்கையின் பிரதமர் டி.எஸ்.சேனநாயக்கவினால் கல்லோயாத்திட்டம் என்ற பெயரில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின்னர் படிப்படியாக தமிழர்கள் சிங்களவர்களால் விரட்டியடிக்கப்பட்டு பல குடியேற்றங்களை செய்தனர். இதே காலப்பகுதியில் முஸ்லிம்களும் பல இடங்களில் குடியேறியும் தமிழர்களின் நிலங்களை கொள்ளையடித்தும் அத்துமீறியும் தமது இருப்பைப் பலப்படுத்திக் கொண்டனர். எனினும் முஸ்லிம்கள் அம்பாறை மாவட்டத்தில் கண்மூடித்தனமாகக் குடியேற்றங்களைச் செய்தனர். இன்று அந்த மாவட்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவும் அடுத்த படியாக சிங்களவர்களும் அதற்கடுத்ததாகவே தமிழர்களும் உள்ளனர்.
மீனோடைக்கட்டு
மீனோடைக்கட்டு கிராமம் மிக நீண்டகாலத் தமிழ் கிராமம். ஆனால், தற்போது அது ஒருமுஸ்லிம் கிராமமாக மாறியுள்ளது. இக்கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட தமிழ்க் குடும்பங்கள் தொன்றுதொட்டு வாழ்ந்து வந்தன. இக்கிராமத்திற்கு அயற்கிராமங்களாக முஸ்லிம் கிராமங்கள் இருந்தன. ஆனால், 1978 ஆம் ஆண்டு தொடக்கமே இத்தமிழ்க் கிராமம் மீது முஸ்லிம்கள் தாக்குதல்களை நடத்தினர். இதனால் எல்லைப்பகுதியில் இருந்த மக்கள் படிப்படியாகத் தமது இடங்களை விட்டு வெளியேறத் தொடங்கினர்.
அதன் பின்னர் 1985.07.12 ஆம் திகதி இக்கிராமத்தின் மீது முஸ்லிம்கள் கடுமையான தாக்குதல்களை நடத்தினர். அரசினர் தமிழ்கலவன் பாடசாலை, கோயில்கள், வீடுகள் என்பன முற்றாக அழிக்கப்பட்டன. இதையடுத்து அப்பகுதி மக்கள் முற்றாக வெளியேறிவிட்டனர். அதன் பின்னர் அக்கிராமம் முழுமையான முஸ்லிம் கிராமமாக மாறியது. தற்போது அங்குஅரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை உள்ளது. மீனோடைக்கட்டு என்று கூறினால் தற்போது அது எல்லோருக்கும் முஸ்லிம் கிராமமாகவே தெரியும். அவ்வாறு அதன் வரலாறே மாற்றப்பட்டுள்ளது.
திராய்க்கேணி
மீனோடைக்கட்டைப்போன்றே ஒலுவில், பாலமுனை ஆகிய இரு முஸ்லிம் கிராமங்களைஎல்லையாகக் கொண்ட கிராமம் திராய்க்கேணி கிராமம். இக்கிராமத்தையும் அழிக்கும் வகையிலும் அதை முஸ்லிம் கிராமமாக்கும் வகையிலும் பல முயற்சிகள் நடந்தன. இக்கிராமத்தில் 360 குடும்பங்கள் இருந்தன. இங்கு வாழ்ந்தத் தமிழர்கள் மீது முதல் தடவையாக 1985 இல் தான் தாக்குதல் நடந்தது.
இதனால்வழக்கம்போல் மக்கள் இடம் பெயர்ந்தனர். பின்னர் ஒரிரு ஆண்டில் மீண்டும் மீளக்குடியமர்ந்தனர். ஆனால், திராய்கேணியின் சில பகுதிகளை முஸ்லிம்கள் ஆக்கிரமித்து குடியேறியிருந்தனர். ஆனால், இவர்களை எழுப்புவதற்கு எடுத்த முயற்சிகள் அனைத்தும் தடைப்பட்டன. இதற்குக் காரணமாக இருந்தவர் காலஞ்சென்ற அமைச்சர் அஸ்ரப். அவரின் நோக்கமே மீனோடைக்கட்டு கிராமம் போன்று திராய்க்கேணி கிராமத்தையும் முஸ்லிம் கிராமமாக மாற்ற வேண்டும் என்பதே.
இதற்குப் பின்னர் 06.08.90 இல் விசேட அதிரடிப்படையின் உதவியுடன் முஸ்லிம் ஊர்காவல் படையினர் மற்றும் முஸ்லிம் காடையர்கள் இணைந்து இக்கிராமத்தைத் தாக்கினார்கள். இத்தாக்குதலின்போது 46 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு பெரியதம்பிரான் ஆலயவளவுக்குள் புதைக்கப்பட்டனர். வீடுகள், ஆலயம், பாடசாலை என்பன முற்றாக அழிக்கப்பட்டன. தற்போது இக்கிராமத்தின் பெரும் பகுதியில் முஸ்லிம்களே வாழ்கின்றனர்.
கரவாகு
கரவாகு கிராமம் மிகவும் தொன்மை மிக்கது. இதைச் சாய்ந்தமருது தமிழ் டிவிசன் என்றும் அழைப்பதுண்டு. அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்களால் அபகரிக்கப்பட்ட தமிழ் கிராமங்களில் இதுவும் ஒன்று. ஆனால், இக்கிராமம் 1965 ஆம் ஆண்டுக்கு முன்னரே பறிபோய்விட்டது.
இக்கிராமத்தில் 660 குடும்பங்களைச் சேர்ந்ததமிழர்கள் வாழ்ந்து வந்தனர். இங்கு கரவாகு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, கதிரேசபிள்ளையார் ஆலயம், விஸ்ணு ஆலயம் மற்றும் ஐயனார் ஆலயம் என்பனவும் தொன்று தொண்டு இருந்து வந்தன.
அவை மாத்திரமின்றி இங்கு வாழ்ந்த மக்கள்விவசாயிகளாக இருந்ததுடன் கரவாகு வட்டைஎன்ற பகுதியில் ஆயிரக்காணக்கான பொன்கொழிக்கும் நெல்வயல்கள் இவர்களிடம் இருந்தது. ஆனால், இக்கிராமத்தை 1965 ஆம் ஆண்டு முஸ்லிம் காடையர்கள் தாக்கியதில் அதற்கு ஈடுகொடுக்க முடியாது கிராம மக்கள் வெளியேறினர். அதன் பின்னர் இக்கிராமம் தனி முஸ்லிம் கிராமமாக மாறியது. இதற்கு அப்போது அங்கு அரசியல்வாதியாக இருந்த எம்.எஸ்.காரியப்பர் பின்னணியில் இருந்தார்.
தமிழ்ப் பாடசாலை 70 ஆம் ஆண்டில் அல்.அமீன் வித்தியாலயம் என பெயர் மாற்றப்பட்டது. கோயில்கள் இருந்த இடத்தில் பள்ளிவாசல்களும் அமைக்கப்பட்டன. அவர்களின் வயல்காணிகள் அனைத்தும் முஸ்லிம்களின் உடமையானது.
வீரமுனை
வீரமுனைக்கிராமம் நீண்ட வரலாற்றைக் கொண்ட கிராமம். இக்கிராமத்தையும் பல தடவைகள் முஸ்லிம்கள் இராணுவத்தினரின் உதவியுடன் அழித்தனர். அக்கிராமத்தின் பெரும் பகுதியில் அத்துமீறிக் குடியேறினார்கள். தற்போதும் முஸ்லிம்கள் தமிழர்களின் காணிகளில் சுதந்திரமாக வாழ்ந்து அனுபவித்து வருகின்றனர். இங்கு வாழ்ந்த தமிழ் மக்கள் மீது முதன் முதலில் 1954 இல் தாக்குதல் நடத்தப்பட்டது. பின்னர் 1958 இல் தாக்குதல் நடந்தது. இவையனைத்தும் முஸ்லிம்களினாலேயே நடத்தப்பட்டன. பின்னர் 12.081990 இல்தாக்கப்பட்டு பின்னர் முழுமையாக அழிக்கப்பட்டது. இத்தாக்குதலை விசேட அதிரடிப்படையினரும் முஸ்லிம்களுமே செய்தனர்.
850 குடும்பங்கள் இங்கு வாழ்ந்து வந்தன.ஆரம்பம் முதல் இறுதிவரையான இத்தாக்குதல்களின் போது நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். வீரமுனை கிராமம் தற்போதுவரை அதன் பழைய நிலையை அடையவில்லை. இக்கிராமம் மாத்திரமின்றி அருகில் இருந்த தமிழர்களின் பாரம்பரிய கிராமங்களான சம்மாந்துறை தமிழ்ப் பிரிவு, கோரக்கர்கோயில் கிராமம், மல்வத்தை புதுநகரம், கணபதிபுரம், வளத்தாப்பிட்டி, மல்லிகைத்தீவு, வீரன்சோலை ஆகிய கிராமங்களும் அழிக்கப்பட்டதுடன் முஸ்லிம் குடியேற்றங்கள் செய்யப்பட்டன.
திருகோணமலை மாவட்டம்
இயற்கைத் துறைமுகமும் பல வளங்களும் கொண்ட திருகோணமலை மாவட்டம் தமிழர்களின் தலைநகராக உள்ளது. இங்குள்ள வளங்கள் மற்றும் புவிசார் அமைப்பைக் காரணங்களாகக் கொண்டு சிங்களக் குடியேற்றங்கள்மிகவும் துரித கதியில் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளன மாத்திரமின்றி, உலக நாடுகளும் இங்குத் தமது தளங்களை அமைத்துள்ளன. இந்த வகையில் முஸ்லிம்களும் தங்கள் இருப்பைப் பலப்படுத்தும் வகையில் பல அத்துமீறிய குடியேற்றங்களைத் தமிழ் பகுதிகளில் செய்துள்ளன.
பள்ளிக்குடியிருப்பு கிராமம் மிகவும் செழிப்பான தமிழர்களின் ஆதிக்கிராமம். இதற்கு அருகில் தோப்பூர் கலப்புக் கிராமம் உள்ளது. ஆனால், 1990 ஆம் ஆண்டு முதல் பள்ளிக்குடியிருப்புக் கிராமத்தின் மீது முஸ்லிம்கள் தாக்குதலை நடத்தத் தொடங்கினர். இதனால் அங்கிருந்த மக்கள் அச்சம் காரணமாக வெளியேறத் தொடங்கினர். எனினும், பல குடும்பங்கள் அச்சத்திற்கு மத்தியிலும் தொடர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் பள்ளிக்குடியிருப்பு கிராமத்தின் சில பகுதிகளை உள்ளடக்கியதாக இக்பாலநகர் என்ற புதிய கிராமத்தை முஸ்லிம்கள் உருவாக்கியுள்ளனர். இக்கிராமம் தற்போது பரபரப்பான வளமுடையகிராமமாக மாறியுள்ளது. ஆனால், ஆதிக்கிராமமான பள்ளிக்குடியிருப்பு தற்போது பின்தள்ளப்பட்டுத் தேய்ந்து போய்விட்டது.
உப்பாறு
உப்பாறு கிராமம் பல தடவைகளில் முஸ்லிம்களின் தாக்குதலுக்கு இலக்கானது. இக்கிராமம் கிண்ணியாவுக்கு அருகில் உள்ளது. கிண்ணியாவில் இரு இனத்தவரும் இரு வேறுபகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். இங்கும் அடிக்கடி கலவரங்களை முஸ்லிம்கள் ஏற்படுத்தினாலும், தமிழ் மக்கள் அந்நேரத்தில் இடம் பெயர்ந்தாலும், பின்னர் தங்கள் இருப்பிடங்களுக்குத் திரும்பி விடுவது வழக்கம். ஆதலால்உப்பாறு மக்கள் 1983, 1985 ஆண்டுகளில் ஏற்பட்ட கலவரங்களின்போது இடம் பெயர்ந்தபோதிலும் பின்னர் நிலமை சீரானதும் மீளக்குடியேறினர். எனினும், முஸ்லிம் காடையர்களும் ஊர்காவல் படையினரும் தொடர்ந்து இக்கிராம மக்கள் மீது தாக்குதலை நடத்தியே வந்தனர். இறுதியில் 90 ஆம் ஆண்டு இக்கிராமத்தின் மீது பாரிய அளவு தாக்குதல் நடத்தியதால் தமிழர்களின் வீடுகள், பாடசாலை, ஆலயங்கள் சேதமாக்கப்பட்டன.
இந்நடவடிக்கைகளுக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திடீர்தௌபீக் மற்றும்அப்துல் மஜீத் போன்றோர் பின்னணியில் இருந்தனர். தற்போது உப்பாறு கிராமம் முஸ்லிம் கிராமமாக மாறியுள்ளது. அங்கிருந்த றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை தற்போதுமுஸ்லிம் வித்தியாலயமாக மாற்றப்பட்டுள்ளது.
சிவன்கோயில், பிள்ளையார் கோயில்கள் இருந்த இடங்களில் பள்ளிவாசல்களும் பொதுக்கட்டிடங்களும் அமைக்கப்பட்டுச் செறிவான குடியேற்றம் நடத்தப்பட்டுள்ளது. தமிழ் மாணவர்கள் கற்று வந்த றோமன் கத்தோலிக்கத் தமிழ் கலவன் பாடசாலை அயற்கிராமத்திற்கு இடம் பெயர்ந்து இயங்கி வருகின்றது.
குரங்குபாஞ்சான் கிராமமும் அப்பகுதி நிலங்களும் தமிழர்களின் சொத்து. ஆனால், 90 ஆம் ஆண்டுக்குப் பிற்பட்ட காலத்தில் இக்கிராமத்தின் பெரும் பகுதிகளை ஆக்கிரமித்த முஸ்லிம்கள் தற்போது குடியேற்றத்தைச் செய்து வாழ்ந்து வருகின்றனர்.
இறக்கக்கண்டி கிராமத்தின் பெரும் பகுதியும்தற்போது தமிழர்களிடமிருந்து பறிபோயுள்ளது.இங்கிருந்தும் தமிழர்களை விரட்டியடிப்பதில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்தௌபீக் காரணமாக இருந்தார். இவரின் பின்னணியில் முஸ்லிம்கள் மக்களை விரட்டியடித்தனர். இதனால் அங்கும் முஸ்லிம் குடியேற்றம் நடைபெற்றுள்ளது. தமிழர்கள் தற்போது சிறுபான்மையாகவே இக்கிராமத்தில் வாழுகின்றனர்.
மூதூர் திருகோணமலை மாவட்டத்தின் ஒரு உபநகரமாகவே இருந்தது. நீண்ட காலமாகத் தமிழர்கள் அங்கு வாழ்ந்து வந்தனர். சில முஸ்லிம்களும் வாழ்ந்தனர். நகரின் பெரும் வியாபாரநிலையங்கள் அனைத்தும் தமிழர்களுடையதாகவே இருந்தன. ஆனால், இந்த நகரைத் தமது கையில் கொண்டுவர வேண்டுமென முஸ்லிம்கள் திட்டமிட்டனர். இந்த நிலையில் பல தடவைகளில் மூதூர் நகரமும் தமிழர்களின்சொத்துக்களும் எரிக்கப்பட்டன. இந்தக் காலகட்டங்களில் மூதூர் மக்கள் அயற்கிராமங்களுக்குப் பாதுகாப்புத்தேடிச் செல்வது வழக்கம். எனினும், தொடர்ந்து இத்தாக்குதல்களினால் பாதிக்கப்பட்ட மக்கள் தமது இடங்களை முழுமையாக விட்டுவிட வேண்டிய நிலை ஏற்பட்டது.இதனால், தற்போது அங்கு முஸ்லிம்களே அதிகம் வாழுகின்றனர். நகரின் பெரும் வியாபார நிலையங்களின் உரிமையாளர்களாக முஸ்லிம்களே உள்ளனர். தற்போது 40 சதவீதத்திற்கும் குறைவான தமிழர்களே மூதூரில் நிரந்தரமாக வாழுகின்றனர்.
இதுபோன்று இன்னும் பல தமிழ் கிராமங்களின் சோக வரலாறும் கறைபடிந்த சம்பவங்களும் உள்ளன. குறிப்பாகப் பார்க்கப்போனால் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் கிராமங்களே அழிக்கப்பட்டன அத்துமீறிக் குடியேற்றங்கள் திட்டமிட்ட முறையில் செய்யப்பட்டன. இது பெரும்பான்மை சிங்களவர்களாலும் சிறுபான்மை முஸ்லிம்களினாலுமே இடம் பெற்றன.
போர் நடைபெற்ற வேளைகளில் சில சிங்களமுஸ்லிம் கிராமங்கள் பாதிப்புக்கு உள்ளாகினஎன்பது உண்மை. ஆனால், திட்டமிட்ட முறையில் எந்த இனத்தவருடைய கிராமங்களும் தமிழர்களினால் அழிக்கப்படவோ அல்லது ஆக்கிரமிக்கப்படவோ இல்லை. சிங்கள, முஸ்லிம் இனத்தவரின் வழிபாட்டுத் தலங்கள், பாடசாலைகள் என்பன அழிக்கப்படவோ அல்லது மாற்றப்படவோ இல்லை. ஆனால் தமிழர்களின் பல வணக்கத்தலங்கள், பாடசாலைகள் என்பனமுஸ்லிம்களினால் அழிக்கப்பட்டும் பின் தங்களின் இனத்திற்கென மாற்றப்பட்ட சம்பவங்களே வரலாறாக உள்ளன

 

SHARE