முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் இலங்கையில் நிறுத்தப்பட வேண்டும்: பான் கீ மூன்

618

இலங்கையில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்களை நிறுத்த  நடவடிக்கைகளை எடுக்குமாறு ஐக்கிய நாடுகளின் செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பான் கீ மூனின் இந்தக்கோரிக்கையை அவரது பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் நேற்று வெளியிட்டுள்ளார்.

இலங்கையின் தென்பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்பில் செயலாளர் கரிசனை கொண்டுள்ளதாகவும் டுஜாரிக் குறிப்பிட்டுள்ளார்.

2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட யோசனையின்படி, சிறுபான்மை மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்ததாக பான் கீ மூன் சுட்டிக்காட்டியுள்ளார்

 

SHARE