முஸ்லிம் அரசியல் தலைமைகளின் அரசியல் அதிகாரங்களின் தொடரான இயலாமை

323

 

இந்நாட்டில் வாழும் முஸ்லிம்களின் இருப்புக்கும், உரிமைகளுக்கும் திரைமறைவிலும், நேரடியாகவும் வரலாற்று நெடுங்கிலும் நெருக்கடிகள் பிரயோகிக்கப்பட்டு வந்திருக்கின்றன. இதன் தொடரில் 2015 ஜனவரி ஆட்சி மாற்றத்திற்கு முன்னரும் ஆட்சி மாற்றத்திற்குப் பின்னருமான காலங்களில் முஸ்லிம்கள் எதிர்கொண்ட அழுத்தங்களும,; தாக்குதல்களும் பல்வேறு பாடங்களைக் கற்றுக் கொடுத்திருக்கிறது.

கற்றுக்கொண்ட பாடங்களை மீள் வாசிப்புக்குட்படுத்தி சமூகத்தின் அரசியல், பொருளாதார, சமூக, கல்வி, சமய, கலாசாரம் உட்பட அனைத்து விடயங்களையும் ஒரு தலைமைத்துவ சபையின் கீழ் ஒன்றிணைக்க வேண்டிய தேவை இருந்தும்; அத்தேவையை நிறைவேற்றுவதற்கு முஸ்லிம் அரசியல் தலைமைகளினாலும், இஸ்லாமிய இயக்கங்களினாலும் 2018லும் இயலாமலிருப்பது மென்மேலும் முஸ்லிம்களை நோக்கி அழுத்தங்களையும், நெருக்கடிகளையும், உரிமை மீறல்களையும் ஏற்படுத்துத்தும் என்றும் சமூகக் கூறுகளையும் பலவீனப்படுத்தும் என்றும் முஸ்லிம் அரசியல் ஆய்வாளர்களினால் கட்டியம் கூறப்படுவதை மறுதலிக்கயியலாது. ஜனநாயகத் தேசமொன்றில் வாழும் ஒரு தனித்துவ இனமென்ற ரீதியில் முஸ்லிம்கள் குறித்த ஏனைய சமூகத்திலுள்ள தவறான சமூகப்பார்வை கழையப்படுதற்கும், தனித்துவ அடையாளத்துடன் வாழ்வதற்கும், வாழ்வுரிமைக்கு எதிரான சவால்கள் வருகின்றபோது அவற்றை ஒன்றிணைந்து முறியடிப்பதற்கும் முறையான பொறிமுறையின் கீழ் முஸ்லிம்கள் ஒன்றிணைக்கப்பட வேண்டிய தேவையுள்ளது என்ற சிந்தனை சமூக சிந்தனையளர்கள் மத்தியில் காலத்திற்குக் காலம் எழுந்தாலும், அச்சிந்தனை எழுச்சி பெறாது தேக்கமடைவதனால் முஸ்லிம் அரசியல் தலைமைகளும், இஸ்லாமிய இயக்கங்களும் சமூகத்தின் எதிர்கால நன்மைக்காக ஓரணியில் இணைவது என்பது இந்த 2018 நடுப்பகுதி வரை இயலாமயாகவே காணப்படுகிறதுஓரணியின் அவசியம்.  முஸ்லிம்கள் ஒன்றிணைக்கப்பட வேண்டுமாயின், முஸ்லிம்கள் குறித்த தவறான வாதப்பிரதிவாதங்களும், போலிப்பிரச்சாரங்களும் கலையப்பட வேண்டுமாயின், முஸ்லிம்களின் நீண்ட கால, சமகால மற்றும் அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டுமாயின்,முஸ்லிம்கள் எதிர்நோக்குகின்ற சவால்கள் இராஜந்திர ரீதியாக முறையான பொறிமுறைகளினூடாக வெற்றி கொள்ளப்பட வேண்டுமாயின், ஒரு சமூகத்தின் எழுச்சிக்கும், வீழ்ச்சிக்கும் அச்சாணியாகக் கருதப்படுகின்ற அரசியல் பலம் சக்திமிக்கதாக்கப்பட வேண்டும்.

ஏனெனில், பல்லின சமூகத்தில் வாழும் ஒரு தனித்துவ இனம் தலைநிமிர்ந்து வாழ்வதற்கு அச்சமூகத்திற்கான அரசியல் பலம் உறுதியாக இருக்க வேண்டும் என்பதோடு ஆன்மீக வழிகாட்டல்கள் இன்றியமையாதது என்பது இந்நாட்டு முஸ்லிம்களின் கடந்த கால வரலாறுகள் கற்றுத்தரும் படிப்பினைகளாகவுள்ளன.  அரசியல், சமூக, சமய, பொருளாதார ரீதியிலான அழுத்தங்களிலிருந்து முஸ்லிம்கள் விடுவிக்கப்பட்டு இந்நாட்டில் நிம்மதியாகவும், சுதந்திரமாகவும் வாழ வேண்டும். வாழ்தலுக்கான உரிமையை உரியவர்களிடமிருந்து அரசியல் அதிகாரங்களினூடாக சமூகத்திற்கு பெற்றுக்கொடுப்பதை இலக்காகக் கொண்டே முஸ்லிம் சமூகம்சார் அரசியல் கட்சிகள் தோற்றுவிக்கப்பட்டன. அவ்வாறுதான் மக்களை இறைவழியில் நல்வழிப்படுத்தி, நல்லவற்றை புரியும்படி ஏவி, வாழ்நாட்களில் இறைவனுக்கு மாறு செய்யாது, மனிதனுக்கு அநீதியிழைக்காது மனிப் புனிதர்களாக வாழ வைப்பதற்காகவே இஸ்லாமிய இயக்கங்கள்; உருவாக்கப்பட்டன.

ஆனால், அரசியல் கட்சிகளினதும், இஸ்லாமிய இயக்கங்களினதும் இவ்விலக்குகள் சுகபோகங்களுக்காக பல்வேறு பெயர்களில் அரசியல் தலைமைகளினாலும் மக்களை நல்வழிப்படுத்தும் இஸ்லாமிய இயக்கங்களினாலும் அடகு வைக்கப்படுகின்ற என்ற விமர்சனங்களை அண்மைக் காலமாக அவதானிக்க முடிகிறது. இலக்குகளை அடைந்துகொள்ளவதற்காக மக்களை ஓரணியில் ஒன்று திரட்டி செயற்பட வேண்டிய முஸ்லிம் அரசியல் கட்சிகளும், இஸ்லாமிய இயக்கங்களும் அவற்றிற்கு மாற்றமாக செயற்பட முற்பட்டதன் விளைவு பல்வேறு அழுத்தங்களுக்கும் மற்றும் கேலிக்கைகளுக்கும் முஸ்லிம் சமூகத்தை முகம்கொடுக்கச் செய்திருப்பது நிஜமானதே.:  இந்நாட்டில் இரண்டாம் நிலைச் சிறுபான்மைச் சமூகமாக முஸ்லிம்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு வாழும் இச்சமூகத்தின் மத்தியிலுள்ள பலருக்கு சமூகம் சார்ந்த விடயங்களில் இறந்த காலம் எதைக் கற்றுத்தந்தது. நிகழ்காலம் எதைக் கற்றுத்தந்து கொண்டிருக்கிறது. எதிர்காலம் எதைக் கற்றுத்தரப்போகிறது, எத்தகைய ஆபத்துக்களை எதிர்நோக்கவுள்ளது.

வாழ்வுரிமை எந்நிலையை அடையப்போகிறது என்ற உணர்வில்லாதவர்களாக, அவை குறித்து சிந்திக்காதவர்களாக சுயதேவைகளை அடைந்துகொள்ளும்; இலக்குகளுடன்; செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். முஸ்லிம் சமூகம்சார் இலக்குகளையும், நோக்கங்களையும் அடைந்துள்கொள்வதற்காக உருவாக்கப்பட்ட அரசியல் கட்சிகளும், இஸ்லாமிய இயக்கங்களும், அவற்றின் இலக்குகளையும், நோக்கங்களையும் மறந்து குடும்பிச் சண்டடையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது வெளிப்படையானது.  நடந்து முடிந்த உள்ளுராட்சி அச்சபைகளுக்கான தலைவர்களை தெரிவு செய்துகொள்வதில் முஸ்லிம் அரசியல் கட்சிகளுக்கிடையே இடம்பெற்ற குத்துவெட்டுக்களும், நம்பிக்கைத் துரோகங்களும், வாக்குறுதி மீறல்களும் அவற்றுடன் கடந்த நோன்புப் பெருநாளை கொண்டாவதற்கான பிறைபார்த்து அறிவிக்கும் விடயத்தில் இஸ்லாமிய இயக்கங்களும், கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகமும், பிறைக்குழுவும் முரண்பட்டுக் கொண்டதையும் இரு தினங்களில் பெருநாளை முஸ்லிம்கள் கொண்டாட நேர்ந்ததையும் இவற்றிற்கு உதராணங்களாகச் சுட்டிக்காட்டலாம்..சமூகம் எதிர்நோக்கியிருக்கின்ற ஆபத்துக்களிலிருந்து இச்சமூகத்தை எப்படிக் காப்பாற்ற முடியும், அதற்காக எத்தகைய நடவடிக்கைகளை ஒன்றுபட்டு முன்னெடுக்க வேண்டும்; என்று சிந்திக்காமல் அதற்காக கால நேரங்களையும், செல்வங்களையும், செல்வாக்குகளையும் பயன்படுத்தாமல் அதற்காக ஒன்றுபடாமல், பதவிகளுக்ளுக்காகவும், தனிநபர்நிகழ்ச்சி நிரல்களுக்காகவும், கட்சி அரசியலுக்காகவும், கொள்கை விருத்திக்காகவும் ஒருவரை ஒருவர் விமர்சித்துக்கொண்டும், காட்டிக்கொடுப்புக்களை மேற்கொண்டும், அசிங்கங்களை அரங்கேற்றிக்கொண்டும், வெற்று அறிக்கைகளை விடுத்துக்கொண்டும் செயற்பட்டுக்கொண்டிருப்பது முஸ்லிம் சமூகத்தை ஆரோக்கியமான வழியில் இட்டுச் செல்லாது. இவை முஸ்லிம்களை ஒரணியில் இணைப்பதில் முஸ்லிம் அரசியல் கட்சிகளினதும், இஸ்லாமிய இயக்கங்களினதும் இயலாமையைப் புடம்போடுகின்றன.

இயலாமைகளின் வெளிப்பாடுகள்பிறர் மீது ஏறிச் சவாரி செய்து தமது இலக்குகளை அடைந்து கொள்ள எத்தகைய வியுகங்களை வகுத்துச் செயற்பட முடியுமோ அவற்றைச் சாணக்கியமாகச் செய்து முடிப்பதில் அரசியல் கட்சிகளும், இஸ்லாமிய இயக்கங்களும,; சமூக அமைப்புக்களும் காட்டும் அக்கறை, சமகால மற்றும் எதிர்கால அரசியல் நகர்வுகள்; எத்தகைய நெருக்கடிகளை முஸ்லிம்களை எதிர்கொள்ளச் செய்யும் அவற்றிற்கு எவ்வகையில் முகம்கொடுக்க முடியும் என்பதை முன்னுரிமைப்படுத்தி செயற்பட முடியாமலாக்கியிருக்கிறது உள்ளுராட்சி, மாகாண சபை தேர்தல் முறைமைத் திருத்தச்சட்டம் முஸ்லிம் சமூகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என பலமுறை அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியிருந்தும், இச்சட்ட மூலத்தை ஆதரித்து வாக்களிக்க வேண்டாமென சமூகத்தின் பல்வேறு தரப்புக்களினாலும் வலியுறுத்தப்பட்டும் கூட அரசியல் தலைமைகளும் பாராளுமன்ற உறுப்பினர்களும் சமூகத்த்தின் குரல்களை பொறுட்டாகக் கொள்ளவில்லை. இத்திருத்தச்சட்டங்களுக்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள்; எல்லோரும் கைகளை உயர்த்தி சட்ட மூலம் நிறைவேறுவதற்கு ஆதரவளித்துவிட்டு பின்னர் ஒருவரை ஒருவர் குற்றமும்சாட்டினர். அவ்வாறு குற்றச்சாட்டி அறிக்கைகளையும், ஊடகங்களினூடாக வாதப் பிரதிவாதங்களையும் முன்வைத்து விட்டு மாகாணசபைத் தேர்தலை நடாத்துவது குறித்துப் பேசப்படும் இத்தருணத்தில் புதிய முறைமையில் தேர்தலை நடாத்துவது முஸ்லிம்களுக்கு பாதகமானது என தற்போது விடாப்பிடியாக நிற்பது எந்தளவில் வெற்றியளிக்கும் என்பது ஒருபுறமிருக்க, இவை முஸ்லிம் அரசியல் தலைமைகளின் சாணக்கியமற்ற முடிவுகளையும,; அரசியல் இயலாமையையும் வெளிப்படுத்துவதை காணக்கூடியதாகவுள்ளதாகக் பேசப்படுவதையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.புதிய அரசியல் நகர்வுகளினால் ஏற்படுகின்ற மாற்றங்கள் எத்தகை சாதக, பாத நிலைகளை சிறுபான்மை சமூகங்களில் ஒன்றான முஸ்லிம்களை எதிர்நோக்கச் செய்யும்? எந்தவகையில் பாதிக்கும்? அரசியலமைப்பு மாற்றம் ஒன்று ஏற்பட்டால் அவற்றினூடாக உருவாக்கப்படும் அதிகாரப் பகிர்வுகள் முஸ்லிம்களுக்கு சாதகமாக அமையுமா? அல்லது பாதகமாக அமையுமா? என்ற பல கேள்விகள் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் எழுகின்றன. இக்கேள்விகளுக்கு விடைகாண்பதற்காக தங்களுக்குள் கூடி ஆரோக்கியமாக ஆராய வேண்டி நேரத்;தில், அவை தொடர்பில் சமூகத்தை விழிப்புணர்வூட்ட வேண்டிய தருணத்தில் அரசியல் கட்சிகளும், இஸ்லாமிய இயக்கங்களும், அவற்றின் செயற்பாட்டாளர்களும், ஆதரவாளர்களும் தினசரி சமூகவலைத்தளங்களில் அறிக்கைச் சமர் புரிந்துகொண்டிருப்பதையும் அவதானிக்க முடிகிறது.  தனிநபர் நிகழ்;ச்சி நிரல்களின் அடிப்படையில் சமூகத்தைக் கூறுபோடுவதற்காக அரசியல் கட்சிகளும் அதன் தலைமைகளும் இஸ்லாமிய இயக்கங்களும் செயற்படுவதும,; அதன் விளைவாக ஏற்படும் கசப்பான சம்பவங்களும்;; சமூகத்தைக் கேவலமானதொரு நிலைக்குத் தள்ளியிருப்பதோடு; இனவாதிகளின் வெறுப்புப் பேச்சுக்களுக்கு ஆதாரவான நிகழ்வுகளாகவும் காட்டிக்கொடுக்கப்பட்டிருக்கிறது. மொத்தத்தில் முஸ்லிம் சமூகம் ஒற்றுமை என்ற கயிற்றை இறுகிப்பிடிப்பதற்குப் பதிலாக அவற்றை அறுத்துக்கொண்டிருக்கிறது.

இவைகள் சமூம் சார் அரசியல் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் இயலாமைகளின் வெளிப்பாடுளாகும் என்பதை மறுக்கயிலாது. இந்நிலையில், முஸ்லிம் அரசியல் கட்சிகளும் அதன் தலைமைகளும் இயக்கங்களும்; சுய விசாரணை செய்ய வேண்டியதும் சமகால மற்றும் எதிர்கால சமூகத்தின் தேவை கருதி ஒன்றுபட வேண்டியதும் அவசியமாகவுள்ளது. கூட்டுத் தலைமைத்துவ சபை  தேர்தல் திணைக்களத்தினால் அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்பட்டுள்ள கட்சிகளில் முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் பிரமுவர்களைத் தலைவர்களாகவும் செயலாளர்களாகவும் கொண்டு பதிவாகியுள்ள கட்சிகள் சிலவற்றில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தேசிய மற்றும் பிராந்திய அளவில் முஸ்லிம் மக்களின் ஆதரவு பெற்ற கட்சிகளாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவற்றுடன் தேசிய ஐக்கிய முன்னணி நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஆகியவையும் அரசியல் கட்சிகளாகப் பதிவாகியுள்ளன. இதனடிப்படையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் ஆகிய மூன்று முஸ்லிம் சமூகம் சார் கட்சிகளோடு புதிதாகப் பதிவு செய்யப்பட்டுள்ள தேசிய ஐக்கிய முன்னணி மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஆகிய இரு கட்சிகளையும்; சேர்த்து ஐந்து அரசியல் கட்சிகளை முஸ்லிம் அரசியல் கொண்டிருக்கிறது.இவற்றுடன் இஸ்லாமிய வழிகாட்டல்களுக்காக உருவாக்கப்பட்ட இஸ்லாமிய பேரியங்களாக விளங்கும் தப்லீக்; ஜமாத், இலங்கை ஜமாதே இஸ்லாமி மற்றும் தௌஹீத் ஜமாத் ஆகிய இஸ்லாமிய இயக்கங்களும் முஸ்லிம்களை கொள்கைகளின் அடிப்படையில் இஸ்லாமிய வழிகாட்டல் செயற்பாடுகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றன.

முஸ்லிம் அரசியலில், முஸ்லிம் சமூகத்தின் அரசியல் அபிலாஷைகள் அடையப்படுவதற்கும், உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கும், சமூக இருப்பின் ஆரோக்கியம் உறுதிப்படுத்தப்படுவதற்கும், எதிர்கால சமூகம் நிம்மதியாக இந்நாட்டில் வாழ்வதற்கும் செயற்பாட்டிலுள்ள முஸ்லிம் அரசியல் கட்சிகள்; ஒன்றிணைந்து பயணிக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. கடந்த கால முஸ்லிம் அரசியலின் சிதைவும், பலவீனமும் முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகளில் பௌத்த பேரினவாதம் மூக்கை நுழைக்கவும் சந்திக்கிழுக்கவும் முயற்சித்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது. முஸ்லிம் சமூதாயத்தின் பலமும் பலவீனமும் சமகால முஸ்லிம் அரசியலின் பலத்திலும், பலவீனத்திலுமே தங்கியிருக்கின்றன என்பதை கடந்த கால அரசியல் வரலாறு நமக்கு புடம்போட்டுக் காட்டுகின்றன.  கடந்த கால மற்றும் நிகழ்காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற சதித்திட்டங்களின் விளைவு பல இழப்புக்களைச் சந்திக்கச் செய்துள்ளது. இவற்றுக்கெதிரான நடவடிக்கைகளை இராஜதந்திரி ரீதியாகவும,; சாத்வீகமாகவும் முன்னெடுக்க வேண்டுமாயின்;; முஸ்லிம் சமூகத்திலுள்ள அரசியல் தலைமைகளும், இஸ்லாமிய இயக்கங்களின் தலைமைகளும்; ஒன்றிணைத்து தலைமைத்துவ சபை அல்லது கூட்டுத் தலைமைத்துவத்தை உருவாக்குவது அவசியமாகும். அதற்கான அழைப்புக்களும்; பல்வேறு தரப்புக்களிலிருந்து விடுக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும,; இக்கூட்டுத் தலைமைத்துவ சபை உருவாக்கப்படுவதற்கு பதிலாக புதிய கட்சிகளை ஸ்தாபிக்கவும் இஸ்லாமிய வழிகாட்டல் இயக்கங்களை உருவாக்கவும் முயற்சிப்பதானது மேலும் சமூகத்தை பலவீனப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கு 30 நாட்களுக்குள் தீர்வு தரப்பட வேண்டுமென்ற கோரிக்கையை 21 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றாக கையொப்பமிட்டு ஜனாதிபதிக்கும், பிரமருக்கும் கடிதம் எழுத்திருந்தனர் ஆனால், அதற்குக் கிடைத்த தீர்வு என்ன என்ற கேள்வி இப்போது எழுகிறது. மக்கள் மத்தியில் எழும் கேள்விகளுக்கு முஸ்லிம் அரசியல் தலைமைகள் சர்வதேசத்திடமும், மக்கள் மத்தியிலும் எடுத்துரைக்கின்ற கூற்றுக்கள்; விடையாக அமைவதையும் காண முடிகிறது. சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டக் கடமைப்பட்டவர்கள் உடனடியாக செயல்பட்டிருந்தால் அம்பாறை – கண்டி இனக்கலவலரங்களை கட்டுப்படுத்தியிருக்க முடியும்.

இனவாத வன்செயல்களுக்கு துணைபோனதாக கூறப்பட்ட பொலிஸ் உயரதிகாரிகளைச் சுட்டிக்காட்டி அவர்களை இடமாற்றம் செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தபோதும் அவ்வாறு நடைபெறவில்லை. அத்துடன் வெறுப்பூட்டக்கூடிய பேச்சுக்களை தடைசெய்வதற்கான சட்டமும் கிடப்பில் போடப்பட்டுள்ளது  என இலங்கை வந்த ஐ.நாவின் இடைக்கால விதிவிடப் பிரதிநிதி ரெரன்ஸ் டி ஜோன்ஸிடம் அமைச்சர் ஹக்கீம் எடுத்துரைத்துள்ளார். அவ்வாறு  ;நல்லாட்சி அரசாங்கத்திற்கு இன்னும் பதினெட்டு மாதங்களே எஞ்சியுள்ளன.

இக்காலப் பிரிவில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். அல்லாதவிடத்து அடுத்த தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறினேசவிற்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் மக்கள் நல்ல பாடம் புகட்டுவர்கள்  என அமைச்சர் ரிஷாட் வரக்காபொலயில் நடைபெற்ற வைபவமொன்றில் மக்கள் மத்தியில் தெரிவித்துள்ளார். இவ்வாறு முஸ்லிம் அரசியல் கட்சித் தலைமைகளினால் எடுத்துரைக்கப்படும் கூற்றுக்கள் தங்களது அரசியல் அதிகாரங்களினால் சமூகம்சார் விடயங்கள் எதையும் சாதிக்க முடியவில்லை என்பதையும் அரசியல் இயலாமையின் தொடர் என்பது இன்னும் தொடர்கின்றது என்பதையும் புடம்போடுவதாகவே அமைகிறது என அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள் இச்சந்தர்ப்பத்தில் முஸ்லிம்களின் தலைவிதியை தீர்மாணிக்க வேண்டியது காலத்தின் அவசரத் தேiவை எனக் கருதி, மார்க்க அறிஞர்கள், பத்திஜீவிகள், சட்டத்தரணிகள், அரசியல் செயற்பாடடாளர்கள், சமூக அமைப்புக்கள், சமூகக் அக்கறையுடையோர், ஊடகவியலாளர்கள் என பல்வேறு துறைசார்ந்தோரையும் உள்ளடக்கியதான கூட்டுத்தலைமைத்துவம் அல்லது தலைமைத்துவ சபை உருவாக்கப்பட வேண்டுமெனவும், அத்தலைமைத்துவத்தினூடாக முஸ்லிம்கள் எதிர்நோக்கும் அரசியல் மற்றும் சமூக சமய பிரச்சினைகளுக்கான தீர்வை பெறவேண்டுமென்பதும் கோரிக்கையாக முன்வைக்கப்பட்டு வருகின்றன.

ஏனெனில், முஸ்லிம் அரசியல் தலைமைகளின் அரசியல் அதிகாரங்களின் தொடரான இயலாமையும,; இஸ்லாமிய இயக்கங்களின் வழிகாட்டலிலும், முடிவுகளிலும் மற்றும் தலைமைத்துவ முன்னெடுப்புக்களிலும் காணப்படும் தொடர்ச்சியான முரண்பாடுகளும்; பிளவுகளும் ஒன்றிணைந்த தலைமைத்துவ சபை உருவாக்கத்தின் அவசியத்தை வலியுறுத்துகிறது. சமூகத்தின் எதிர்கால அரசியல், சமூக, பொருளாதார கலை, கலாசார சமய நலன்களைக்; கருதி இத்தலைமைத்துவ சபை உருவாக்கத்திற்கான முயற்சிகளும் நடவடிக்கைகளும் கடந்த பல வருடங்கலாக முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளபோதிலும், இவை இயலாததொன்றாகவே தொடந்துள்ளது. இத்தொடரானது 2018ன் ஆறு மாதங்கள் கடந்தும் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், இந்நாட்டு முஸ்லிம்களை ஓரணயில் திரட்டி சவால்களை வெற்றிகொள்வதற்கான கூட்டுத் தலைமைத்துவம் அல்லது தலைiமைத்துவ சபை உருவாக்கமானது 2018லும் இயலாமலாகிவிடுமா என்பதே முஸ்லிம் சமூக சிந்தனையளர்களின் சமகால வினாவாகும்

SHARE