முஸ்லிம் மக்­களின் கருத்­துக்­க­ளுக்கு செவி சாய்க்காது இன­வா­தி­களின் நோக்­கத்தை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நிறை வேற்றியுள்ளார்

323

பாது­காக்­கப்­பட்ட வில்­பத்து வன பிர­க­ட­னத்தில் முஸ்லிம் மக்­களின் கருத்­துக்­க­ளுக்கு செவி சாய்க்காது இன­வா­தி­களின் நோக்­கத்தை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நிறை வேற்றியுள்ளதாக நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­னணி கடு­மை­யாக  குற்றம் சுமத்­தி­யுள்­ளது.

மஹிந்த அர­சாங்கம் ஆரவார­மா­கவும் வெளிப்­ப­டை­யா­கவும் இன­வா­தி­க­ளுக்கு சார்­பாக செயற்­பட்டு அவர்­களின் நோக்­கங்­களை நிறை­வேற்ற துணை போனது. ஆனால் இந்த அர­சாங்கம் மிகவும் அமை­தி­யா­கவும் சூட்­சு­ம­மான முறை­யிலும் இன­வா­தி­க­ளுக்கு உத­வு­கி­றது. ஜனா­தி­ப­தியின் இவா­றா­ன­தொரு பிர­க­டனத்­திற்கு முஸ்லிம் அர­சியல் தலை­மை­களும் துணை போயுள்­ளமை கவ­லை­ய­ளிப்­ப­தா­கவும் நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­னணி சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­ன­ணியின் தவி­சாளர் பொறி­யி­ய­லாளர் எம்.எம். அப்துர் ரஹ்மான்  இது தொடர்பில் மேலும் தெரி­விக்­கையில், ஜனா­தி­ப­தியின் ரஷ்­யா­வுக்­கான விஜ­யத்தின் மத்­தியில் வில்­பத்து சர­ணா­ல­யத்­திற்கு வடக்கே அமைந்­துள்ள நான்கு பிர­தே­சங்­களை உள்­ள­டக்கி அவற்றை பாது­காக்­கப்­பட்ட வன­மாக பிர­க­ட­னப்­ப­டுத்தும் வர்த்தமானியில் கையொப்­ப­மிட்­டுள்ளார்.

வில்­பத்து விவ­கா­ரத்தில் முஸ்லிம் தரப்பின் நியா­யத்­தையும் பிரச்­சி­னை­க­ளையும் காது­தாழ்த்­தாது ஒரு­த­லைப்­பட்­ச­மாக முடி­வெ­டுத்­தி­ருக்­கின்­றமை தெளி­வா­கின்­றது. அண்­மையில் சைட்டம் விவ­காரம் பூதா­க­ர­மாக வெடித்­த­போது அனைத்து தரப்­பு­டனும் பேசி சம­ர­சத்­துக்கு வரலாம் என குறிப்­பிட்ட ஜனா­தி­பதி, ஏன் இவ்­வி­ட­யத்தில் முஸ்­லிம்­களின் கருத்­துக்­களை ஆரா­ய­வில்லை என கேள்வி எழுப்ப வேண்­டி­யி­ருக்­கி­றது.

மறிச்­சிக்­கட்டி, மாவில்லு, வெப்பல், விளாத்­திக்­குளம் மற்றும் பெரிய முறிப்பு உள்­ள­டங்­கிய பகு­திகள் பாது­காப்­பட்ட வன­மாக பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யமை பெரும் தவ­றாகும். இதில் ஜனா­தி­பதி பேரி­ன­வா­தி­களின் கருத்­துக்­க­ளுக்கே முன்­னு­ரி­மை­ய­ளித்து அவர்­களின் நோக்­கத்தை நிறை­வேற்­றி­யி­ருக்­கின்றார்.

மறிச்­சிக்­கட்டி உள்­ளிட்ட பகு­திகள் முஸ்லிம் மக்­களின் பூர்­வீக காணிகள் என அண்­மையில் அங்கு சென்று கள ஆய்வை மேற்­கொண்டு வந்த சூழ­லி­ய­லா­ளர்கள் குறிப்­பிட்டும் ஜனா­தி­பதி இவ்­வாறு வர்த்­த­மானி அறி­வித்­தலில் ஒப்­ப­மிட்­டி­ருப்­பது முஸ்லிம் சமூ­கத்­திற்கு பெரும் ஏமாற்­றத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

இது முஸ்லிம் மக்­களின் உரி­மை­களில் கைவைக்கும் செயற்­பா­டாகும். மக்­களின் சொந்த காணி­களை திட்­ட­மிட்டு அப­க­ரிக்கும் செயற்­பா­டாகும்.

இந்த அர­சாங்கம் மக்­களின் உரி­மை­களை கொடுப்­ப­தற்கு பதி­லாக பறிக்­கி­றது. இவர்­க­ளிடம் எவ்­வாறு சலு­கை­களை பெற்றுக் கொள்ள முடியும் எனும் கேள்வி எழுந்­தி­ருக்­கி­றது.

இதே­வேளை, இவ்­வி­ட­யத்தில் முஸ்லிம் அர­சியல் பிர­தி­நி­திகள் பெரும் தவ­றினை இழைத்­தி­ருக்­கின்­றனர். வில்­பத்து விட­யத்தில் அவர்­களால் வெறும் விளம்­ப­ரத்­திற்­காக ஹோட்­டல்­களில் கலந்­து­ரை­யா­டல்­களை நடத்­தவே முடிந்­தது. ஆனால், முஸ்லிம் எம்.பி.க்கள் ஒன்­றி­ணைந்து ஜனா­தி­ப­தியை நேர­டி­யாக சந்­திக்க முடி­யாது போனது.

இது இரண்­டா­வது வர்த்­த­மானி பிர­க­ட­ன­மாகும். 2012 ஆம் ஆண்டு இதே­ போன்­ற­தொரு வர்த்­த­மானி பிர­க­டனம் வெளியி­டப்­பட்­டது. எனினும் அவ்­வாறு பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்ட பகுதி ஒப்­பீட்­ட­ளவில் தற்­போது பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்ட பகு­தியை விடச் சிறி­ய­தாகும். இந்­நி­லையில் முத­லா­வது பிர­க­டனம் வெளி­யி­டப்­பட்­டமை 2015 ஆம் ஆண்­டு­வரை தனக்குத் தெரி­யாது என அமைச்சர் ரிஷாட் பதி­யுதீன் தெரி­வித்தார். அப்­போதும் அவர் அமைச்­ச­ர­வையில் அங்கம் வகித்தார்.

அச்சமயம் முசலி பிர­தேச சபை அமைச்சர் ரிஷாத் தலை­மை­யி­லான கட்­சியின் ஆட்­சி­யி­லேயே இருந்­தது. அவ்­வா­றி­ருந்தும் அன்று அதனை தடுத்து நிறுத்­து­வ­தற்­கான எந்­த­வித முயற்­சி­யையும் அவர்கள் செய்­ய­வில்லை.  அதன் பிற்­பாடு பல தேர்­தல்கள், சந்­தர்ப்­பங்கள் வாய்த்த போதிலும் 2012 இன் வர்த்­த­மானி பிர­க­ட­னத்தை இரத்துச் செய்­வ­தற்­கான எந்த முயற்­சி­க­ளையும் அமைச்சர் ரிஷாடோ ஏனைய முஸ்லிம் தலை­வர்­களோ மேற்­கொள்­ள­வில்லை.

அதற்­கான எதிர்ப்­பு­களைக் கூட கூட்­டாக வெளி­யி­ட­வில்லை.  இன்றும் அமைச்சர் ரிஷாடும் ஏனை­யோரும் அமைச்­ச­ர­வையில் அங்கம் வகிக்கும் நிலை­யில்தான் மற்­று­மொரு வர்த்­த­மானி அறி­வித்தல் வெளி­யா­கி­யி­ருக்­கி­றது.  இதன் மூலம் 2012 இல் வனப் பகு­தி­யாக பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்ட பகு­தியை விட பெரும் பரப்பு 2017 இல் உள்­வாங்­கப்­பட்­டுள்­ளது.

ஜனா­தி­பதி மிகவும் தந்­தி­ர­மாக செயற்­பட்டே இந்த விட­யத்தை மேற்­கொண்­டுள்ளார். இவ்­வி­ட­யத்தில் பிர­தமர் தொடர்ந்தும் மெள­ன­மா­கவே இருக்­கின்றார். நாட்டின் நிர்­வா­கத்தை முழு­மை­யாக முன்­னெ­டுக்கும் அவர் எதுவும் தெரி­யா­தது போல இருக்­கின்றார். எங்­களை இந்த அர­சாங்கம் தொடர்ந்தும் ஏமாற்­று­கின்­றது. நாம் ஓர் அபா­ய­க­மான நிலைக்கே தள்­ளப்­பட்­டி­ருக்­கிறோம்.

முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் இவ்­வா­றான இக்­கட்­டான சந்­தர்ப்­பங்­களில் ஒன்­று­பட்டு தமது எதிர்ப்பை வெ ளிப்­ப­டுத்த வேண்டும். ஜனா­தி­ப­தியை கூட்­டாகச் சென்று சந்­தித்து இந்த அறி­வித்­தலை இரத்துச் செய்­யு­மாறு கோர வேண்டும். ஆனால் அவ்­வாறு எத­னையும் இவர்கள் செய்­ய­வில்லை. இக்­கட்­டான சம­யங்­களில் முஸ்லிம் எம்.பி.க்கள் இவ்­வாறு கையா­லா­காத்­த­ன­மாக நடந்து கொள்­வது இதுவே முதல்­முறை அல்ல. அளுத்­கம சம்­ப­வத்தின் போதும் முஸ்­லிம்கள் சந்­தித்த ஏனைய கஷ்­ட­மான சூழல்­களின் போதும் சமூக நலன்­க­ருதி இவர்கள் ஒன்­று­பட்டு போரா­ட­வில்லை என்­ப­தையும் இந்த இடத்தில் கவ­லை­யுடன் சுட்­டிக்­காட்ட விரும்­பு­கிறேன்.

நல்­லாட்­சிக்­கான தேசிய முன்னணிதான் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக களமிறங்கிய மைத்திரிபால சிறிசேனவுக்கு முதன் முதலாக ஆதரவளித்த முஸ்லிம் தரப்பாகும். எனினும் ஏனையோர் பணத்தையும் பதவிகளையும் சலுகைகளையும் பெற்றுக் கொண்டே அவருக்கு ஆதரவளித்தார்கள். அதனால்தான் இன்று சமூகத்தின் உரிமைகளுக்காக குரல் கொடுக்க முடியாத கையாலாகாத நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.

எனினும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி இது விடயத்தில் போராடவும் மக்கள் சார்பாக நின்று குரல் கொடுக்கவும் முழு உரிமையையும் கொண்டுள்ளது என்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் எம்.எம். அப்துர் ரஹ்மான்  மேலும் குறிப்பிட்டார்.விடி­வெள்­ளி

SHARE