அரசியல் அமைப்பு சட்ட மாற்றம் ப
01.ஜனாதிபதி ஆட்சி முறைமையினை ஒ
02.தேர்தல் சீர்திருத்தம்
03.அதிகார பரவலாக்கள்.
இம் மூன்று தலைப்புக்களும் விரி
அந்தவகையிலே ஜனாதிபதி ஆட்சி மு
இரண்டாவதாக தேர்தல்சீர்திருத்
மூன்றாவதாக அதிகாரப்பகிர்வினைபா
சுருக்கமாக கூறுவதாயின் மத்தியி
இந்த ஆபத்தான நிலையில் இருந்து
ஜனாதிபதி ஆட்சி முறைமை ஒழிப்பு
கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு மு
ஜனாதிபதியின் எல்லை கடந்த அதிகா
19வது அரசியல் அமைப்பு திருத்
ஜனாதிபதி தேர்தல் முறைமையில் சி
ஜனதிபதியின் அதிகாரம் நியாயமானச
யுத்த வெற்றியின் அலையினை தவறாக
இதே ஜனாதிபதி ஆட்சி முறை இலங்கை
தனிச்சிங்கள சட்டத்தினை விடவும்
தேசியக் கட்சிகளில் முஸ்லிம் பி
அதனால் தான் மறைந்த தலைவர் மர்ஹூ
ஜனாதிபதி தேர்தல் முறைமை என்று
இந்த பின்னணியில்தான் ஜனாதிபதி
இன்னும் கவனமாக இருப்பார்கள். இ
ஜனாதிபதி தேர்தலுக்கு முன் ஒப்
இலங்கையில் ஆயிரம் வருடங்களு க்கும் மேலாக முஸ்லிம்கள் வாழ்கின்றனர். இவர்கள் ஆரம்ப காலம் முதல் இந்நாட்டு மன்னர்களுடனும். ஆட்சியாளர்களுடனும் நெருக்கமான உறவைப் பேணியவர்களாகவும் ஆட்சி நிர்வாகத்தில் பங்குபற்றியவர்களாகவும் வாழ்ந்து வருகின்றனர். இந்நாடு சுதந்திரமடைந்த பின்னரும் 1980 கள் வரையும் இதே நிலைதான் தொடர்ந்து வந்தது.
என்றாலும், 1970 களின் பிற்பகுதியில் உருவான அரசியல் நிலைமை, 1980 களின் முற்பகுதியில் தமிழ் சமூகத்தின் இளைஞர்கள் மத்தியில் ஆயுதக் குழுக்களின் தோற்றம், அக்குழுக்களின் நகர்வுகள் மற்றும் 1987 ல் கைச்சாத்திடப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் மிக்க இலங்கை – இந்திய ஒப்பந்தத்தில் இந்நாட்டு முஸ் லிம் சமூகம் கருத்தில் கொள்ளப்படாமை உள்ளிட்ட பல காரணிகள் முஸ்லிம்களின் அரசியல் தனித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டியதன் தேவையை வலியுறுத்தி நின்றன.
இவ்வாறான சூழலில் ஸ்ரீ-லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை ஸ்தாபித்து இந்நாட்டு முஸ்லிம் சமூகத்திற்கு தனித்துவ அரசியல் அடையாளத்தைப் பெற்றுக் கொடுத்தவர் தான் மர்ஹ¥ம் எம். எச். எம். அஷ்ரஃப் ஆவார். இதனூடாக இந்நாட்டு வரலாற்றிலும், முஸ்லிம்களின் வரலாற்றிலும் இவர் தனக்கெனத் தனி இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
பிறப்பும் கல்வியும்
இவ்வாறு முக்கியத்துவம் மிக்க இடத்தைப் பெற்றிருக்கும் அஷ்ரஃப் கிழக்கு மாகாணத்திலுள்ள அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறையில் 1948 ஆம் ஆண்டு ஒப்டோபர் மாதம் 23 ஆம் திகதி பிறந்தார். முஹம்மத் மீரா லெப்பை ஹுசைன் விதானை மற்றும் மதீனா உம்மா தம்பதியினருக்கு ஒரே மகனாகப் பிறந்த இவருக்கு மூன்று சகோதரிகள் உள்ளனர்.
மர்ஹும் அஷ்ரஃப் தன் ஆரம்ப கல்வியை கல்முனைக்குடி அல் அஸ்கர் வித்தியாலயத்திலும், இடைநிலைக் கல்வியை கல்முனை பற்றிமா கல்லூரியிலும், கல்முனை வெஸ்லி கல்லூரியிலும் பெற்றார். அதனைத் தொடர்ந்து இலங்கை சட்டக் கல்லூரியில் பிரவேசித்த இவர், 1974 ல் முதற் தரத்தில் சித்திபெற்று சட்டத்தரணியானார். இவர் கல்லூரி காலம் முதலே சிறப்பான வாதத் திறமையைக் கொண்டிருந்தார்.
சட்டத்தரணியாக வெளியான அஷ்ரஃப் கல்முனை, மட்டக்களப்பு நீதிமன்றங்களில் சட்டத்தொழிலை ஆரம்பித்தார். இத்தொழிலின் போது ஏழைகளுக்காகவும் கஷ்டப்பட்ட மக்களுக்காகவும் இவர் இலவசமாக மன்றில் ஆஜரானார்.
இதேகாலப் பகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் அரசியலில் கவரப்பட்டார் அஷ்ரஃப். அதனால் அவர் அக்கட்சியின் தலைவர்களுடனும் முக்கியஸ்தர்களுடனும் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார்.
இவ்வாறான சூழலில் தான் புத்தளம் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம் ஏற்பட்டது. அதாவது 1976 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதி ஏற்பட்ட இக்கலவரத்தில் ஒன்பது முஸ்லிம்கள் கொல்லப்பட்டதுடன் பலர் காயங்களுக்கும் உள்ளாகினர்.
நூற்றுக் கணக்கான வீடுகள் உள்ளிட்ட சொத்துக்களும் எரித்து சேதப்படுத்தப்பட்டன. இக்கலவரத்தின் போது புத்தளம் பெரிய பள்ளிவாசலினுள் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தினால் 07 பேர் கொல்லப்பட்டனர்.
இருந்தும் இச்சம்பவம் குறித்து அச்சமயம் பாராளுமன்றத்தில் அங்கம் வகித்த எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினருமே வாய் திறக்கவில்லை. இந்நிலைமையை இட்டு பெரிதும் கவலையடைந்த அஷ்ரஃப் இலங்கை .தமிழரசுக் கட்சித் தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தை அணுகினார். அவர் ஊடாக புத்தளம் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம் குறித்து பாராளுமன்றத்தில் குரல் எழுப்ப வழி செய்தார்.
இதன் மூலம் புத்தளம் முஸ்லிம்களின் மனதில் தனியான இடத்தைப் பிடித்தார் எஸ்.ஜே.வி.செல்வநாயகம். மர்ஹும் அஷ்ரஃப்பும் கூட. இந்நாட்டு முஸ்லிம்களின் தனித்துவ அரசியலின் அவசியத்தை புத்தளம் சம்பவமே கூர்மைப்படுத்தியது என மர்ஹும் அஷ்ரஃப் பிற்பட்ட காலங்களில் பல சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டுள்ளார். இதனை அவருடன் ஆரம்ப காலம் முதல் நெருங்கி செயற்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஐ. எம். இல்யாசும் உறுதிப்படுத்தினார்.
இந்த சூழலில் 1977 பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது மர்ஹ¥ம் அஷ்ரஃப் ஏனைய முஸ்லிம் முக்கியஸ்தர்களுடன் இணைந்து முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணியை அமைத்தார். இம்முன்னணி தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து இத்தேர்தலில் போட்டியிட்டது. ஆயினும் எவரும் வெற்றிபெறவில்லை.
இதேயாண்டில் தான் அஷ்ரஃப் முன்னாள் அமைச்சரான பேரியல் அஷ்ரஃபுடன் திருமண வாழ்விலும் இணைந்தார்.
இவ்வாறு காலம் நகர்ந்து கொண்டிருந்த சூழலில் மர்ஹும் அஷ்ரஃப் முஸ்லிம் காங்கிரஸ் என்ற சமூக சேவை அமைப்பை 1981 ல் காத்தான்குடியில் அமைத்தார். அதனூடாக பலவித சமூக சேவைகளும் முன்னெடுக்கப்பட்டன.
என்றாலும் இக்காலப் பகுதியில் தமிழ் சமூகத்தின் இளைஞர்கள் மத்தியில் உருவான ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகளும், அவற்றின் நகர்வுகளும் அக்குழுக்களில் முஸ்லிம் இளைஞர்களின் இணைவும் அவற்றால் ஏற்படக்கூடிய பின்விளைவுகளும் குறித்து அஷ்ரஃப் கவனம் செலுத்தத் தொடங்கினார்.
இந்த சந்தர்ப்பத்தில் ஆயுதக் குழுக்களினால் ஏற்பட்ட அச்சுறுத்தல் காரணமாக கல்முனை இருப்பிடத்தையும், வீடு வாசல்களையும் துறந்து 1985ல் அரசியல் அகதியாக கொழும்புக்கு வந்து சேர்ந்தார் அஷ்ரஃப்.
ஸ்ரீல. மு. கா. தோற்றம்
என்றாலும் தமிழ் ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகள் தொடர்பாகவும் முஸ்லிம் சமூகத்தினதும் குறிப்பாக முஸ்லிம் இளைஞர்களினதும் நகர்வு மற்றும் எதிர்காலம் குறித்தும் கவனம் செலுத்துவதை அவர் கைவிடவில்லை. இது தொடர்பாக சமூகநல ஆர்வலர்களோடும். கல்விமான்களோடும் அஷ்ரஃப் அடிக்கடி கலந்துரையாடினார்.
இந்தடிப்படையில், ஏற்கனவே சமூக சேவை அமைப்பாக ஸ்தாபிக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸை முஸ்லிம் சமூகத்தின் மேம்பாட்டையும், முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதக் கலாசாரத்திற்குள் தள்ளப்படுவதைத் தவிர்ப்பதையும் நோக்காகக் கொண்டு 1986 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கொழும்பு பாஷா விலாவில் வைத்து அரசியல் கட்சியாகப் பிரகடனப்படுத்தினார்.
இதனை 1988 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி தேர்தல் ஆணையாளர் அரசியல் கட்சியாகப் பதிவு செய்து அங்கீகாரம் வழங்கினார். இக்கட்சியின் ஸ்தாபக தலைவரும் அஷ்ரஃபே ஆவார்.
இதுவே இலங்கை அரசியல் வரலாற்றிலும் முஸ்லிம்களின் வரலாற்றி லும் முக்கிய அரசியல் கட்சியானது. இக்கட்சி இந்நாட்டு முஸ்லிம்களின் அரசியலில் பாரிய திருப்பு முனைக்கு வித்திட்டது. பல்வேறு விதமான சவால்களுக்கும் முகம் கொடுத்தபடியே அஷ்ரஃப் இக்கட்சியை முன்னெடுத்து வந்தார்.
என்றாலும் இக்கட்சி பதிவு செய்யப்பட்ட இரு மாதங்களில் மாகாண சபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்நாட்டில் மாகாண சபை முறைமை அறிமுகப்படு த்தப்பட்ட பின்னர் நடாத்தப்பட்ட முதலாவது தேர்தலே இது.
வடக்கு கிழக்கு மாகாணங்கள் தவிர்ந்த ஏனைய மாகாணங்களுக்கு நடாத்தப்பட்ட இத் தேர்தலில் மேல், வட மத்தி, வட மேல், ஊவா. மத்தி ஆகிய மாகாணங் களில் இக்கட்சி போட்டியிட்டு 12 ஆசனங்களை வென்றெடுத்தது. அதே யாண்டு நவம்பரில் இணைந்த வடக்கு, கிழக்கு மாகாணத்தின் முதலாவது மாகாண சபைத் தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் ஸ்ரீல. மு. கா. 17 ஆசனங்களை வென்றெடுத்து மாகாணத்தின் பிரதான எதிர்க்கட்சியானது.
தேசிய அரசியலில் மு.காவின் முக்கியத்துவம்
அஷ்ரஃப் அரசியல் சாணக்கியத்துடன் தூரநோக்கோடு முன்னெடுத்த அரசியல் நகர்வுகளின் பயனாக குறுகிய காலத்திலேயே ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ¤க்கு தேசிய அரசியலில் முக்கிய இடம் கிடைக்கப் பெற்றது.
அந்தடிப்படையில் 1988 ல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அன்றைய ஆளும் கட்சியான ஐ. தே. க. சார்பில் போட்டியிட்ட முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாசவும் ஸ்ரீல. சு. க. சார்பில் போட்டியிட்ட முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவும் ஸ்ரீல. மு. கா.வின் ஆதரவைக் கோரினார். அதனால் அஷ்ரஃப் சில கோரிக்கைகளை அவர்களிடம் முன்வைத்தார்.
அவரது கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாச இணங்கினார். அதற்கேற்ப ஸ்ரீல. மு. கா. அவருக்கு ஆதரவு நல்கியது. அவர் ஜனாதிபதியானதும் ஸ்ரீல. மு. கா. முன்வைத்த கோரிக்கைப்படி பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்படுவத ற்கான வெட்டுப்புள்ளியை பன்னிரெண்டரை வீதத்திலிருந்து ஐந்து வீதத்திற்குக் குறைத்தார். இஸ்ரேல் நலன் காப்பு பிரிவும் மூடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 1989 ல் பொதுத் தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் போட்டியிட்ட ஸ்ரீல. மு. கா., திகாமடுல்ல, மட்டக்களப்பு, வன்னி ஆகிய மூன்று மாவட்டங்களிலும் மூன்று உறுப்பினர்களை வென்றெடுத்ததுடன் கட்சிக்கு ஒரு தேசியப் பட்டியல் ஆசனமுமாக நான்கு ஆசனங்களை பெற்றுக் கொண்டது.
இதனைத் தொடர்ந்த காலப் பகுதியில் வடக்கு, கிழக்கு முஸ்லிம்கள் மிக மோசமான நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்தார்கள். அவற்றில் வட மாகாண முஸ்லிம்கள் வெளியேற்றம், காத்தான்குடி, ஏறாவூர் பள்ளிவாசல் படுகொலைகள் உள்ளிட்ட பல நிகழ்வுகள் வரலாற்றில் அழியாத வடுக்களாகப் பதிந்துள்ளன.
இக்காலப் பகுதியில் மர்ஹும் அஷ்ரஃப் முஸ்லிம்களின் பாதுகாப்பு, இருப்பு மற்றும் நலன்கள் குறித்து ஜனநாயக ரீதியில் பல நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வந்தார்.
ஆட்சியின் பங்காளர், அமைச்சர்
இவ்வாறான சூழலில் 1994 ல் பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இத்தேர்தலில் அஷ்ரஃப் தலைமையிலான ஸ்ரீல. மு கா. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணியுடன் கூட்டணி அமைத்தது. அத்தேர்தலின் மூலம் நாட்டின் பேரம் பேசும் சக்தியாகவும் ஆட்சியைத் தீர்மானிக்கும் கட்சியாகவும், ஆட்சியின் பங்காளியாகவும் ஸ்ரீல. மு. கா. மாறியது.
இதன் பயனாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா தலைமையிலான அரசாங்கத்தில் செல்வாக்குமிக்க அமைச்சர்களில் ஒருவரானார் அஷ்ரஃப். அவருக்கு துறைமுகங்கள், கப்பல் துறை, புனர்வாழ்வு, புனரமைப்பு அமைச்சராகப் பதவி வழங்கப்பட்டது. இப்பதிவு மூலம் இன, மத பேதங்கள் பாராது அமைச்சுப் பணிகளை மேற்கொண்டார்.
குறிப்பாக யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்களின் முகாம் வாழ்வு முறையை மாற்றி நலன்புரி, நிலையக் கட்டமைப்பை ஏற்படுத்தினார்.
அத்தோடு இடம்பெயர்ந்த மக்களின் சமூக, பொருளாதார, கல்வி மேம்பாட்டுக்காகப் பல சமூக நலனோம்புதல் திட்டங்களையும் இவர் முன்னெடுத்தார், அவற்றில் மீள்குடியேற்றத் திட்டங்களும் அடங்கும்.
குறிப்பாக புத்தளத்தில் தங்கியிருந்த இடம்பெயர்ந்த மாணவர்களின் கல்வி நலன் கருதி ஐந்து மாத காலப் பகுதிக்குள் 29 பாடசாலைக் கட்டடங்களை நிர்மாணித்து அவற்றை ஒரே நாளில் திறந்து வைத்த பெருமை மர்ஹும் அஷ்ரஃபையே சாரும் என்று இந்நாள் பொது சேவைகள் ஆணைக்குழு உறுப்பினரும் அப்போதைய புனர்வாழ்வு பணிப்பாளர் நாயகமுமான ஏ. எம். நஹியா தெரிவிக்கிறார்.
அதேநேரம் துறைமுக மற்றும் கப்பல் துறை அமைச்சின் ஊடாகவும் பல அபிவிருத்தி வேலைத்திட்டங்களையும் இவர் முன்னெடுத்தார்.
ஒலுவில் துறைமுகத் திட்டமும் அவரது சிந்தனையில் உதித்ததே. மேலும் இந்நாட்டு முஸ்லிம்களின் கல்வி மேம்பாட்டிலும் அதிக அக்கறை கொண்டு செயற்பட்டவர் தான் அஷ்ரஃப். இதன் நிமித்தம் பல வேலைத்த திட்டங்களையும் அவர் முன்னெடுத்தார். தென் கிழக்கு பல்கலைக்கழகமும் இவரது சிந்தனையின வெளிப்பாடு தான்.
அதேநேரம் ஒருபுறம் கட்சி பணிகள் மறுபுறம் அமைச்சு பணிகள். இவற்றுக்கு மத்தியில் நேர காலம் ஒதுக்கி கொழும்பு பல்கலைக்கழகத்தில் குற்றவியல் சட்டத் துறையில் மேற்படிப்பை மேற்கொண்டு அவர் சட்ட முதுமாணி பட்டத்தையும் பெற்றார். அத்தோடு ஜனாதிபதி சட்டத்தரணியாகவும் இவர் நியமனம் பெற்றார்.
இனப்பிரச்சினை தீர்வுக்கான பங்களிப்பு
மேலும் இனப்பிரச்சினைக்குத் தம் வாழ்வு காலத்தில் தீர்வு கண்டிட கடுமையாக உடைத்தவர் தான் அஷ்ரஃப். அந்தடிப்படை யில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட அரசியல் யாப்பை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அந்த யாப்பின் மீது தொடராக மூன்று மணித்தியாலயங்கள் உரையாற்றிய பெருமையும் இவரையே சாரும்.
இவ்வாறு நாட்டினதும், நாட்டு மக்களினதும் மேம்பாட்டுக்காக உழைத்த மர்ஹ¥ம் அஷ்ரஃப் தமிழ், சிங்கள அரசியல் தலைவர்களுடனும் சமயத் தலைவர்களுடனும் மிக நெருக்கமான உறவைப் பேணி வந்தார்.
குறிப்பாக முஸ்லிம் சமூகம் குறித்தும் அஷ்ரஃப் தொடர்பாகவும் சிங்கள மக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வந்த பொய்ப் பிரசாரங்களை சோம தேரருடன் நேரடி தொலைக்காட்சி விவாதத்தில் கலந்துகொண்டு தெளிவுகளை வழங்கி முடிவுக்குக் கொண்டு வந்தார்.
மேலும் முஸ்லிம்களுக்கான அரசியல் கட்சியாக விளங்கும் ஸ்ரீல. மு. காங்கிரஸை இந்நாட்டில் வாழும் எல்லா இன மத மக்களுக்குமான அரசியல் கட்சியாக மாற்ற வேண்டியதன் தேவையை அஷ்ரஃப் தமது இறுதிக் காலப் பகுதியில் உணர்ந்தார். அந்தடிப்படையில் நடவடிக்கைகளை முன்னெடுத்த அஷ்ரஃப் தேசிய ஐக்கிய முன்னணியையும் ஸ்தாபித்தார்.
இதற்கான திட்டங்களையும் அவர் முன்மொழிந்திருந்தார். அவரது மறைவோடு இத்திட்டம் கைகூடவில்லை.
மர்ஹும் அஷ்ரஃப் ஒரு அரசியல்வாதி மாத்திரமல்ல. அவர் ஏக காலத்தில் எழுத்தாளராகவும், கவிஞராகவும், புத்திஜீவியாகவும் விளங்கினார். அவர் எழுதிய கவிதைகளின் தொகுப்பு நூலே ‘நான் எனும் நீ’ ஆகும்.
இவ்வாறு நாட்டின் முன்னேற்றத்திற்கும், சமூக மேம்பாட்டுக்குமென அயரது உழைத்து வந்த அஷ்ரஃப் 2000 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் பிரசார ஏற்பாடுகளின் நிமித்தம் 2000.09.16 அன்று ஹெலிகொப்டரில் அம்பாறைக்குப் பயணமானார்.
அவர் பயணித்த ஹெலிகொப்டர் அரநாயக்கா, ஊரகந்த மலையில் மோதுண்டது. அதில் பயணித்த அஷ்ரஃப் உள்ளிட்ட அனைவருமே உயிரிழந்தனர்.
மர்ஹும் அஷ்ரஃப் உயிரிழந்து இற்றைக்கு பல வருடங்கள் கடந்துள்ள போதிலும் அவரது இழப்பின் தாக்கம் இன்றும் மக்கள் மத்தியில் பிரதிபலிக்கவே செய்கிறது. இது மறைக்கவோ மறுக்கவோ முடியாத உண்மை.