எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறப்போவது மஹிந்தவா அல்லது மைத்திரியா என்கின்ற போட்டிகளுக்கு மத்தியில் இத்தேர்தலானது நடைபெறவிருக்கின்றது. மஹிந்த ராஜபக்ஷ தனது அதிகாரத்தினைப் பயன்படுத்தி மூன்றாவது தடவையா கவும் ஜனாதிபதியாக வருவதற்கு முயற்சிகளை மேற்கொண்டுவரும் அதேநேரம், வன்முறைகளும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த வாரம் கன்டியில் இடம்பெற்ற மைத்திரிபாலவின் பொதுக்கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தரவிற்கமைய வன்முறைகள் நிகழ்த்தப்பட்டதாக பொதுக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியிருந்தது. இவ்வனர்த்தத்தின்போது பலர் காயமுற்றதாகவும் அங்கிருந்து கிடைக்கப்பெறும் செய்திகள் தெரிவித்தன. முஸ்லீம் மக்களைப் பொறுத்தவரையில் தமி ழீழ விடுதலைப்புலிகள் இருந்த காலகட்டத்தில் வடபகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டமையை பாரிய பிரச்சினையாக கருதி னர். தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டத்தினைக் காட்டிக் கொடுத்ததன் காரணமாகவே அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர் என விடுதலைப்புலிகள் தெரிவித்திருந்தனர்.
இதனால் அதிகமான முஸ்லீம் மக்கள் புத்தளத்தில் குடி யேறினர். அதன்பிறகு முஸ்லீம் அரசியல்வாதிகளும், முஸ்லீம் மக்களும் விடுதலைப்புலிகளின் போராட்டத்திற்கு விரோதிகளாகவே மாறினர். இவ்வாறான நிலை தொடர்ந்துகொண்டிருக்க தமி ழீழ விடுதலைப்புலிகளின் போராட்டம் சமாதான நிலையை அடைந்தபொழுது ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லீம் காங்கிரசும், விடுதலைப்புலிகளின் தலை வரான பிரபாகரனும் சந்தித்து முஸ்லீம் மக்களுடைய பிரச்சினைகளை ஆராய்ந்து, 2004ம் ஆண்டு ரவூப் ஹக்கீம் அவர்கள் விடுதலைப்புலிகளுடன் ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டார்.
மீண்டும் மாவிலாறு தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையான யுத்தம் ஆரம்பிக்கப்பட்டதையடுத்து தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டத்தைக் காட்டிக்கொடுக்கும் சக்திகளாக இவர்கள் விளங்கினார்கள். விடுதலைப்புலிகள் இருக்கும் வரை முஸ்லீம் அரசியல்வாதிகளையும், முஸ்லீம் மக்களையும் அரசாங்கம் சாதகமாகப் பயன்படுத்திவிட்டு பின்னர் முஸ்லீம் இனத்தினையும் ஓரங்கட்டும் நடவடிக்கையில் மஹிந்த அரசு களமிறங்கியது. அதன் விளைவாக அநுராதபுரம், தம்புள்ளை, திருகோ ணமலை, மஹியங்கனை போன்ற இடங்களின் பள்ளிவாசல்கள் அரசி னால் திட்டமிட்டு உடைக்கப்பட்டது. அதுமட்டுமல்லாது முஸ்லீம் மக்களுக்கெதிராக 300ற்கு மேற்பட்ட அநீதிகள் இழைக்கப்பட்டுள்ளது. அதே வேளை நீதியமைச்சராக அங்கம் வகிக்கும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கூட இதனைக் கேட்கமுடியவில்லை. இதனால் ஆத்திரமுற்ற முஸ்லீம் மக்கள் வெளியில் மஹிந்தவுடன் பேசிக்கொண்டாலும் உள்ளே பகையை வைத்துக்கொண்டு அரசாங்கத்தில் அங்கத்துவத்தினை வைத்திருந்தனர்.
தட்டிக்கேட்க ஒரு தலை வன் வருவானா? எனக் காத்துக்கொண்டிருந்த முஸ்லீம் சமுதாயத்திற்கு பாலை வார்த்தது போல் ருNP அதற்கு அடிகோலியுள்ளது. தற்பொழுது மஹிந்தவை ஆதரிப்பது போல் ரிசாட் பதியுதீன், ரவுப் ஹக்கீம் ஆகிய இருவரும் ஒப்பந்தங்களைச் செய்துகொண்டாலும், ஏற்கனவே நீங்கள் மஹிந்தவிற்குத்தான் ஆதரவி னைத் தெரிவியுங்கள் என முஸ்லீம் மக்கள் மத்தியில் விதைக்கப்பட்டுவிட்டது. ஆகவே இம்முறை முஸ்லீம் மக்கள் மஹிந்தவிற்கு வாக்களிக்கமாட்டார்கள் என்று புலனாய்வாளர்களின் மூலம் தகவல்கள் திரட்டப்பட்டு மஹிந்தவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
07-09 ஆசனங்களை கொண்டிருக்கக்கூடிய முஸ்லீம் காங்கிரஸ் அரசாங்கத்திற்கு பெரிதளவில் தேவைப்படாதது ஒன்று. ஆனாலும் தமிழ் மக்களையும் இணைத்து அவ்வாசனங்களை அரசு கைப்பற்றுகின்றபொழுது பெரும்பான்மையாக ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளமுடியும். ஆகவே செல்வாக்கினையும் பலப் படுத்திக்கொள்ள முடியும். இதன் காரணமாகவே அரசாங்கங்கள் ஒவ்வொன்றும் சிறுபான்மைக் கட்சிகளை தம்வசம் வைத்துக்கொள்வது வழமை. இதற்கிடையில் முஸ்லீம் மக்களை ஓரங்கட்டும் நோக்கில் மஹிந்த மற்றும் கோத்தபாய இருவரினாலும் களமிறக்கப்பட்டதே பொதுபலசேனா என்ற அமைப்பாகும். இவர்கள் முஸ்லீம் இனத்தவர்களுக்கு இழைத்த அநீதிகள் கொஞ்சம் நஞ்சமல்ல. இவ்வாறான நிலைமை தொடர்பாக முஸ்லீம் காங்கிரஸ், அரச தரப்பில் இருக்கக்கூடிய முஸ்லீம் பிரதிநிதிகள், உலமா சபையி னர் என பலரும் தமது கண்டனங்களைத் தெரிவித்திருந்தபோதிலும் இதுவரை யிலும் அதற்கான தீர்வுகள் முன்வைக்கப்படவில்லை.
இவ்வாறிருக்க முஸ்லீம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் மஹிந்தவை ஆதரிப்பதாக அறிவித்துள்ளார். இதற்கான காரணங்களைக் கூறும் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலை வரும், நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீமினால் முன்வைக்கப்பட்ட அனைத்து கோரிக்கைகளுக்கும் தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்கு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அரசாங்கத்தினால் உறுதியளிக்கப்பட்டது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீமிற்கும், பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரி டையே முக்கிய சந்திப்பொன்று பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது. இதன்போது முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் அனைத்திற்கும் தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்கு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அரசாங்கத்தினால் உறுதியளிக்கப்பட்டது என நீதி அமைச்சரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் காணி, மீன்பிடி மற்றும் வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக அரசாங்க குழுவினருக்கும், ஹக்கீமின் குழுவினருக்கும் இடையில் திங்கட்கிழமை பிற்பகல் பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற முக்கிய பேச்சுவார்த்தையொன்றின் போது, அவற்றிற்கான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்கு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதியளிக்கப்பட்டது. பாதுகாப்பு அமைச்சில், திங்கள் கிழமை பிற்பகல் 3.00 மணியிலிருந்து 5.00 மணி வரை நடைபெற்ற சந்திப்பின் போது, திரு கோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் நிலவும் காணி, மீன்பிடி, மற்றும் பள்ளிவாசல் சம்பந்தமான பிரச்சினைகள் தொடர்பில் நீண்ட நேரம் ஆராயப்பட்டுள்ளது.
இச்சந்திப்பில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர், பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன, பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகர் மிலிந்த மொறகொட, திருகோணமலை பட்டிணமும் சூழலும் பிரதேச சபை உறுப்பினர் பஷீர் உட்பட மேலும் சிலரும் பங்குபற்றினர். திருகோ ணமலை புல்மோட்டைப் பிரதேசத்தில் 500 ஏக்கர்களைக் கொண்ட அரிசிமலை காணி பிரச்சினைக்கு உரிய தீர்வை காண்பதாக தெரிவிக்கப்பட்டதோடு, பொன்மலைக்குடா பிர தேசத்தில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டிருக்கும் காணிகள் மற்றும் சுனாமி வீடுகளை உடனடியாக மீட்டுக் கொடுக்கும்படி கடற்படைத் தளபதிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அத்துடன், புல்மோட்டையில் பொதுமக்களுக்குச் சொந்தமான காணியில் ஆரம்பிக்கப்படவிருந்த படையினருக்கான ரணவிரு கம்மான எனப்படும் இராணுவத்துக்கான கிராம திட்டத்தை உடனடியாக இரத்துச் செய்யுமாறு இராணுவத் தளபதி, கிழக்கு மாகாணத்துக்கான இராணுவ கட்டளைத் தளபதிக்கும் இதன்போது உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. திரு கோணமலை, கரிமலையூற்று பள்ளிவாசலை மக்கள் பாவனைக்கு அனுமதிக்குமாறும், அந்த பிரதேசத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பாஸ் முறையை உடனடியாக நீக்கிவிடுமாறும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மக்களுக்குச் சொந்தமான இரண்டு கரைவலைபாடுகளையும் அவற்றிற்கு உரியவர்களிடத்தில் உடனடியாக ஒப்படைத்து விடுமாறும் கிழக்கு மாகாண இராணுவ கட்டளை தளபதிக்கு உத்தரவிடப்பட்டது.
தோப்பூர், செல்வநகர் காணி சம்பந்தமான பிரச்சினை முஸ்லிம் காங்கிரஸ் குழுவி னரால் முன்வைக்கப்பட்ட பொழுது அதனை உடனடியாக தீர்த்து வைக்குமாறு மாவட்ட செயலாளருக்கு அறிவுறுத்தப்பட்டது. அம்பாறை மாவட்டத்தில் பல வருடங்களுக்கு முன் நிர்மாணிக்கப்பட்டு சுனா மியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கையளிக்கப்படாமல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ள நுரைச்சோலை வீட்டுத் திட்டம், ஆலிம்சேனை காணிப்பிரச்சினை, சம்மாந்துறை, வளத்தாப்பிட்டி விவசாய நிலம் தொடர்பான பிரச்சினை என்பவற்றுக்கும் ஏனைய சில பிரதேசங்களில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் நிர்வாக பிரச்சினைகளுக்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பொது நிர்வாக உள்நாட்டு அமைச்சின் செயலாளர் ஆகியோர் முஸ்லிம் காங்கிரஸ் தலை வர் அமைச்சர் ஹக்கீம் தலைமையிலான குழுவினருடன் நடாத்தவுள்ள கலந்துரையாடலின் போது, உரிய தீர்வு காணப்படும் என தெரிவிக்கப்பட்டது.
வவுனியா மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை இராணுவத்தினரால் ஆண்டியா புளியங்குளத்தில் வேலியடித்து வேறாக்கப்பட்ட காணியை பாடசாலைக்கு வழங்கிவிடுமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது’ என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனாலும் மக்கள் ஹக்கீமினுடைய பேச்சுக்களை இனி ஏற்பதாகவில்லை என்பதனை, அவரின் ஊரான கண்டியில் மக்கள் ஜனாதிபதி வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவுக்கு தமது ஆதர வினை வெளிக்காட்டியிருந்தமையின் மூலம் வெளிப்படுத்தப்பட்டது. இவ்வாறிருக்கின்ற நிலையில் தான் முஸ்லீம் அரசியல்வாதிகள் ஏற்கனவே அரசிடம் பணத்தினைப் பெற்றுக்கொண்டதாகவும் அவர்களது ஊழல்கள் தொடர்பில் மஹிந்தவிடம் கோப்புக்கள் இருப்பதாலேயே அவரிடம் இருந்து விலகிச்செல்வதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர்.
தனிப்பட்ட ரீதியில் முஸ்லீம் அரசியல்வாதிகளிடம் பேசுகின்றபொழுது இவ் வரசாங்கத்தினை ஆதரிப்பதில்லை என்ற தொணியிலேயே உரையாற்றுகின்றார். ஆனா லும் சர்வாதிகாரத்தினை மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தன்வசம் வைத்திருக்கின்றபொழுது தம்மால் எதுவுமே மேற்கொள்ளமுடியாத நிலை தோன்றியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். ஆனாலும் ஒருசில முஸ்லீம் அரசியல்வாதிகள் இன்னமும் அரசாங்கத்திற்கெதிராகவே தமது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் அசாத்சாலி பேசப்படவேண்டியவர். இன்றைய அரசியல் சூழ்நிலையைப் பார்க்கின்றபொழுது மைத்திரி அலை வீசிக்கொண்டிருக்கின்றது எனலாம். மஹிந்த அலை ஓய்ந்திருக்கிறது எனலாம். அத்தனை திட்டங்களையும் தன்வசத்தே வைத்திருந்த மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஒருவேளை தான் தோல்வியினைத் தழுவும் பட்சத்தில் பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்ஷவுடன் இணைந்து இராணுவ ஆட்சியினை கொண்டுவரும் திட்டம் இருப்பதாகவும் ஆய்வாளர்கள் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
இதேநேரம் கிழக்கு மாகாணத்தில் செறிந்துவாழக்கூடிய முஸ்லீம் மக்களும் கூட மஹிந்த ராஜபக்ஷ அவர்களை ஆதரிப்பதில்லை என்ற நிலைப்பாட்டிலேயே இருக்கின்றனர்.
சந்திரிக்கா அம்மையாரின் காலகட்டத்தில் முஸ்லீம் மக்களோடு மிக நெருங்கிய உறவினையே வைத்திருந்தார். தற்பொழுது அவர் சொற்படி கேட்கக்கூடிய பல முஸ்லீம் அரசியல்வாதிகள் இருக்கின்றனர். இவ்வாறிருக்கின்றபொழுதிலும் முஸ்லீம் மக்களை எதிர்பார்த்து மஹிந்த ராஜபக்ஷ தேர்தலில் இறங்குவது மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய கதைக்கு ஒப்பானதாகும். ஏற்கனவே கிழக்குமாகாணத் தேர்தலின் பொழுது தலைவர் ஹக்கீமின் வார்த்தைகளை நம்பி சம்பந்தன ;அவர்கள் மூக்குடைந்த சம்பவம் நினைவுபடுத்துகிறது.
பல்வேறு சந்தர்ப்பங்களிலும் முஸ்லீம் தiமைகள் இவ்வாறான சகுனி வேலைகளைச் செய்ததன் காரணமாக அனதை;து முஸ்லீம் அரசியல்வாதிகளையும் நம்ப முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. தற்பொழுதுள்ள நிலைமைகளின் படி, தமது மதத்திற்கெதிராக இவ்வரசினால் போர்க்கொடிகள் ஏந்தப்படுகின்றபொழுது ஜிகாத் என்னும் புனிதப்போர் ஆரம்பிக்கப்படவேண்டும் அதுவே முஸ்லீம் மக்களினுடைய சட்டம். அதேநேரம் முஸ்லீம்கள் மீதான அடக்குமுறை இவ்வரசினால் தொடருமாகவிருந்தால் இந்தநாட்டில் அல் ஹைதா தீவிரவாதம் உருவாகுவதற்கான நிலைமைகள் தோற்றுவிக்கப்படும் என்பது திட்டவட்டமான உண்மை. இதனைத் தவிர்த்துச்கொள்ளும் அடிப்படையிலும் முஸ்லீம் அரசியல்வாதிகள் மஹிந்த ராஜபக்ஷவினை ஆதரிக்கமாட்டார்கள். இவர்களை நம்பினாலும் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஏமாற்றமடைவார்கள் என்பதுவும் உண்மை. வேறொரு அரசு ஆட்சிபீடமேறினாலும் கூட, முஸ்லீம் மக்களினுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வுகான சிங்கள இனவாதக் கட்சிகள் ஒத்துழைப்புடன் செயற்படமாட்டார்கள் என்பதும் உண்மையான விடயம்.
TPN NEWS