இலங்கையில் முஸ்லீம் அடிப்படைத் தீவிரவாதம் தலைதூக்கும் அளவிற்கு ஒரு நெருக்கடியான சூழல்கள் உருவாக்கப்படும் என்பதையே அரசி யல் ஆய்வுகள் கூறி வந்தன. ஏனெனில் உலகில் முஸ்லீம் தீவிரவாதிகளது செயற்பாடுகள் என்பது பரந்து விரிந்துள்ளதை நாம் நேரடியாகப் பார்க்கிறோம். உலகில் முஸ்லீம்கள் தமக்கான தனியான நாடுகளைக் கொண்டிருப்பதுடன், ஏனைய நாடுகளில் பரந்து வாழ்கின்றார்கள். பொருளாதார ரீதியில் வளர்ச்சி பெற்ற இவர்கள் எரிபொருள் வளத்தில் தத்தமது நாட்டை செல்வந்த நாடுக ளாக மாற்றியுள்ளனர். மத ரீதி யாக தம்மை எந்த இடத்திலும் அடையாளப்படுத்தத் தவறவில்லை. இலங்கையிலும் முஸ்லீம் மக்கள் பரந்து வாழ்வதுடன் அவர்கள் பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைந்துள்ளனர். கிழக்கில் தமக்கானதொரு கல்விக் கூடத்தை ஆரம்பித்துள்ளார்கள். இஸ்லா மிய தீவிரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளை உலக வல்லரசுகளாலும் வெற்றி கொள்ள முடியவில்லை. நிலைமை இவ்வாறிருக்கும் போது அமெரிக் காவின் பென்டகன் தாக்கியழிக்கப் பட்டது போல இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் தாக்கியழிக்கப்படலாம். சுற்றுலாத் தளங்கள் பாதிப்பினைச் சந்திக்கலாம். முஸ்லீம்கள் இந்நாட்டில் அடக்கி யொடுக்கப்படுகிறார்கள் என்கிற விடயம் தொடர்ந்தும் தோற்று விக்கப்படுமாகவிருந்தால் இதனை அவதானித்துக் கொண்டிருக்கும் உலக முஸ்லீம் நாடுகள் தமது தீவிரவாத இயக்கங்களை இலங் கைக்குள் உட்புகுத்தத் தயங்க மாட்டார்கள்.
இலங்கையில் நடைபெற்று முடிந்த ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் எமது நாட்டிற்கு ஒரு பாடமாக அமைந்திருக்கும் எனலாம். விடுதலைப்புலிகளின் போராட்டம் என்பது வேறு. அது தமிழின விடுதலைக்காக மேற்கொள்ளப் பட்டது. இலங்கையில் நடைபெற்ற முஸ்லீம் அடிப்படைத் தீவிரவாதத் தாக்குதலானது சர்வதேச ரீதியாக பல்வேறான அச்சுறுத்தல்களைத் தான் தோற்றுவித்துள்ளது. இதனுடன் பார்;க்கும் போது இந்திய அரசா னது ஆட்சிமாற்றத்தின் பின்னர் பயங்கரவாதத்தை ஒழித்தமைக்காக பணம் வழங்கியுள்ளனர். இலங்கையின் புலனாய்வு கட்டமைப்பினை வலுப்படுத்தவும் இந்நிதி பயன்படுத்தப்படும். இராணுவக் கட்டமைப்புக்களை பலப்படுத்துவதற்கான நடவடிக் கைகள் முன்னெடுக்கப்படும். இந்தியா, சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகள் இலங்கையில் கால்தடம் பதித்திருப்பதும், தமது புலனாய்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதும், தமது அதிகாரத்தை மீறி எவரும் இந்நாட்டில் செயற்பட முடியாது என்பதையும் காலகாலமாக தெரியப் படுத்தி வருகிறார்கள்.
ஆனால் அரபு நாடுகளைப் பொறுத்தவரையில் தமது மதத்திற்கு எதிராக போர் தொடுக்கப்படுமாக விருந்தால் சிரியா, ஈராக், மியன்மார், பாகிஸ்தான் இன்னும் பல நாடுக ளில் எவ்வாறெல்லாம் ஐ.எஸ் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதோ அதுபோல இந்நாட்டிலும் மேற்கொள்வார்கள். இதனால் இந்நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மை குலைக்கப்பட்டு மீண்டும் ஒரு இரத்த ஆறு ஓடுகின்ற சூழ்நிலைகள் உருவாக்கப்படும். இதிலிருந்து மீட்சி பெற முஸ்லீம் பிரதிநிதிகளையும் புதிய ஜனாதிபதி கோட்டாபய அவர்கள் ஆதரித்துச் செல்லவேண்டும்.
தற்போதைய அரசியல் கள நிலவரங்களைப் பார்க்கின்றபோது முஸ்லீம் தரப்பை ஓரங்கட்டி தமிழ்த் தரப்பை உள்வாங்கிக்கொண்டு செயற்படும் நடவடிக்கைகளைக் காண முடிகிறது. இந்நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு கொலை அச்சுறுத்தல் மற்றும் சதி முயற்சிகள் தீட்டப்பட்டதாக செய்திகள் வெளிவந்த வண்ணமுள்ளன. இதனது புறக் காரணிகளை ஆராய்ந்து பார்க்கின்றபோது சர்வதேச ரீதியாக முஸ்லீம் அரசி யல் நாடுகள் அல்லது தலைமைகள் இலங்கை அரசியலில் தமது பார்வையை செலுத்தியிருக்கிறார்கள் என்றே கூறவேண்டும்.
முஸ்லீம் தீவிரவாதிகளி னால் ஈரான், ஈராக், சிரியா போன்ற நாடுகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டபோது பிரான்ஸ், அமெரிக்கா, நியூசிலாந்து போன்ற நாடுகளிலும் அவர்களை பலவீனப்படுத்தும் நோக்கில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. இது அந்தந்த நாடுகளின் பொருளா தார மற்றும் சுற்றுலாத்துறையினை பாதிக்கும் அளவில் இடம்பெற்றது. மிக முக்கியமாக அமெரிக்காவின் பென்டகன் தாக்குதல் என்பது அந்நாட்டில் பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்தியது. அதில் இருந்து மீண்டெழ பாரிய சிரமங்களை அந்நாடு எதிர்கொண்டது. இலங்கையிலும் இவ்வாறான தாக்குதல்கள் நடைபெற்றால் அதன் விளைவு பாரிய பொருளா தார வீழ்ச்சியை சந்திக்கநேரிடும். மத வழிபாட்டுத் தலங்கள் உடைக்கப் பட்டபோதும் அவர்கள் மீளவும் கட்டியெழுப்பியுள்ளார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
தற்போது றிசாட் பதியுதீன், ஹக்கீம், ஹிஸ்புல்லா போன்றோர் மீது ஊழல் மற்றும் பயங்கரவாதத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் என்கிற ரீதியில் பல்வேறான வழக்குகளைப் பதிவு செய்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. தென்னிலங்கையில் இவர்கள் மீது இன்றும் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பவர்கள் இல்லாமல் இல்லை. அதுமட்டுமன்றி இலங்கை யில் சிங்களவர் – தமிழர் – முஸ்லீம்களுக்கு என்று தனித்தனி சட்டங்கள் இல்லாமல், இலங்கையில் வாழும் மூவின மக்களுக்கும் ஒன்றான சட்டம் உருவாக்கப்படும். சிலவேளைகளில் அவர்களின் ஆடை கலாச்சாரங்களில் மாற்றங்கள் செய்யப்படவேண்டிய நிலை ஏற்படலாம். திருமண விடயங்களில் கட்டுப்பாடுகள் போன்ற செயற்பாடுகள் ஜனாதிபதி கோட்டாபய அவர்கள் பாராளுமன்றில் பெரும்பான்மைப் பலத்துடன் அரசாங்கத்தை அமைக்கின்றபோது முஸ்லீம் களுக்கு எதிராக மேற்கூறிய விடயங்களை அமுல்படுத்தவும் கூடும். முதலில் நாட்டின் தேசி யப் பாதுகாப்பு என்கிற விடயம் தான் கருத்திற் கொள்ளப்படும். இவ்வாறான நெருக்கடிகளின் போது எந்தவொரு விடயத்தையும் முஸ்லீம் தரப்புகள் மேற்கொள்ள முடியாத சூழ்நிலை உருவாகும்.
சர்வதேச ரீதியாக இருக்கக்கூடிய முஸ்லீம் நாடுகள் இவ் விவகாரத்தில் தலையிடும். அப்போது தான் முஸ்லீம்கள் இலங்கையில் ஒடுக்கப்படுகிறார்கள் என்கிற ரீதி யில் முஸ்லீம் அடிப்படைத் தீவிர வாதிகள் தமது தாக்குதல்களை இந்நாட்டில் முன்னெடுக்கும் அபாய சூழ்நிலைகள் உருவாகும். தமிழ் மக்களுடைய போராட்டம் எந்த அளவிற்கு தூய்மையானது என்பதை அப்போதுதான் இந்த அரச தரப்பு புரிந்துகொள்ளும்.
30 ஆண்டுகள் கொடூர யுத்தத்தினால் தமிழினம் துன்பங்களை அனுபவித்தது. அதன்போது குளிர்காய்ந்த இந்த முஸ்லீம் தரப்பினர் தற்போது அதன் அறுவடைகளைக் கண்டு அச்சமடைந்துள்ளனர். அரசி யல் கால மாற்றத்திற்கு ஏற்ப புதிய ஜனாதிபதி கோட்டாபய அவர்கள் செயற்படவேண்டிய தேவை இருக்கிறது. புதிய காபந்து அரசில் முஸ்லீம் தரப்புக்கு அமைச்சுப் பதவிகள் எதுவும் வழங்கப்படவில்லை என்கிற பாரிய குறைபாடு இருக்கிறது. தற்போதைய முஸ்லீம் தரப்பினர் பாராளுமன்றத் தேர்தல் முடியும் வரை தமக்கு எந்தவித அமைச்சுப் பதவிகளும் தேவையில்லை எனக் கூறியுள்ளனர். இது அவர்களுடைய அரசியல் இராஜதந்திர நடவடிக்கைகளையே எடுத்துக்காட்டுகிறது. ஆசிய நாடுக ளில் வாழும் முஸ்லீம்கள் தாம் வாழும் நாட்டில் ஒட்டுண்ணிகள் தான் என்றே அந்தந்த அரசுகள் எண்ணுகின்றனர். அதனால் இவ் முஸ்லீம் மக்கள் தமக்கான தனியலகு கோரி வெற்றிபெறும் வரை தம்மீதான அடக்குமுறைகள் தொடர்வதாகவே கருதுகிறார்கள். இலங்கையைப் பொறுத்தவரையில் மூவின மக்களும் வாழ்கிறார்கள். மொழி ரீதியாக இரு இன மக்கள். மத ரீதியாகவே இந்த மூவின மக்கள் அடையாளப்படுத்தப் படுகிறார்கள். தமிழ் பேசும் மக்களாகிய முஸ்லீம்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்துதான் இனிவரும் காலங்களில் தமது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டிய நிலை மைகள் தோன்றியுள்ளது. அதற்கிடையில் இவர்கள் இந்த அரசினால் உள்வாங்கப் படுவார்களாக இருந்தால் மிகச் சுலப மாக அவர்கள் தமது இராஜதந்திர ரீதியான வெற்றியினை முஸ்லீம்கள் சுவீகரித்துக் கொண்டதாகவே அமை யும்.
உலகில் செறிந்து வாழக்கூடிய முஸ்லீம்கள் தமது இனத்துக்காக பிரார்த்திப்பதும், தமது இனம் கொல்லப்படும் போது கொதித்தெழுவதும் அல்லது கற்கள் எறிந்து ஆர்ப்பாட்டம் செய்வதும் அவர்களது வழமையான செயற்பாடுகள். இலங்கையில் ஒரு போராட்டம் முடிவடைய மூன்று தசாப்தங்கள் எடுத்துக்கொண்டதுடன் அது தொடர்ந்தும் அரசியல் வடிவமாக மாற்றம் பெற்றுள்ளது. சர்வதேச நாடுகளில் இடம்பெறுவதைப்போல இந்நாட்டிலும் முஸ்லீம் மக்களுக்கான அமைதியின்மை தோற்றுவிக்கப்படுமாக விருந்தால் எமது நாடும் ஒரு நிம்மதியற்ற நாடாக மீண்டும் மாற்றம் பெறும். தமது மதத்திற்கு எதிராக எவர் செயற்படுகிறார்களோ அவர்கள் முஸ்லீம் அடிப்படைத் தீவிர வாதிகளினால் இலக்கு வைக்கப்படுவார்கள். ஜனாதிபதி கோட்டாபய அவர்களைக் கொலை செய்வதற்கான முயற்சி எடுக்கப்பட்டு பலர் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்கிற செய்தி திட்டமிடப்பட்டு செய்யப்பட்டதாக கருதலாம் அல்லது முஸ்லீம் அடிப்படைத் தீவி ரவாதிகளால் தமிழ் மக்களையும் இணைத்துக்கொண்டு இந்தச் சதி தீட்டப்பட்டிருக்கலாம். ஜனாதிபதி கோட்டாபயவின் ஆரம்ப அரசியலையே கேள்விக்குறியாக்குகின்ற ஒரு நிலைமையைத் தான் முஸ்லீம் அமைச்சர்கள் அல்லாத காபந்து அரசாங்கம் உணர்த்தி நிற்கிறது. முதலாவதாக முஸ்லீம்களை பொருளாதார ரீதியாக முடக்க வேண்டும். அடுத்து மத ரீதியாக முடக்கவேண்டும். இதனை செய்யும் போது முஸ்லீம்கள் அடிபணிந்து தாம் கூறுவதைக் கேட்டு செயற்படுவார்கள் என்று அரசாங்கம் எதிர்பார்க்கிறது. ஆனால் உண்மையான நிலை அதுவல்ல. மாறாக இலங்கை அர சின் மீது பாரிய தாக்குதல் ஒன்று, பாரிய பொருளாதார அழிவொன்று இந்நாட்டில் ஏற்படுத்தப்படும் என்கிற ஒரு எதிர்வுகூறலே முஸ்லீம் அரசியல் பிரதிநிதிகளுக்கு எதிரான புதிய அரசின் செயற்பாடுகள் எடுத்துக்காட்டுகிறது.
(சுழியோடி)