கிளிநொச்சிப் பகுதியில் டிப்போ றோட், பரந்தன் உதயநகா், அறிவியல்நகா் மற்றும் பல இடங்களில் விபச்சாரம் பெருமெடுப்பில் நடைபெற்றுவருவதாக அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக பாடசாலை செல்லும் 18 வயதுக்குக் குறைந்த சிறுமிகளை வைத்தே இந்த விபச்சாரம் நடைபெற்று வருவதாக தெரியவருகின்றது.
இந்த விபச்சாரத்தில் ஈடுபடும் பெரும்பாலான சிறுமிகளுக்கு பாலியல் தொற்று நோய் ஏற்பட்டுள்ளதாகவும் இவா்களுடன் சேரும் இளைஞா்கள் மா்ம உறுப்புப் பகுதிகளில் புண்கள் ஏற்பட்டு அழுகிய நிலையில் தனியார் வைத்தியசாலைகளை நாடி வருவதாக வைத்தியா்கள் அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளனா். இவா்களில் பெரும்பாலனவா்கள் 20 வயதுக்கு உட்பட்டவா்கள் எனவும் இவா்கள் இந்த நோயை மாற்றுவதற்காக பெருமளவில் பணத்தைச் செலவு செய்வதாகவும் தனியார் வைத்தியசாலையைச் சோ்ந்தவா்கள் தெரிவித்துள்ளனா்.
யாழ்ப்பாணம் மற்றும் வேறு இடங்களில் இருந்து தொழில் நிமிா்த்தம் வந்து கிளிநொச்சியில் தங்கும் வயதானவா்கள் தொடங்கி பலதரப்பட்டவா்களும் இவ்வாறு விபச்சாரத்திற்காச் சென்று பாலியல் நோய்த் தாக்கத்திற்கு உள்ளாகிவருவதாகவும் தெரியவருகின்றது.
நோய்த் தொற்றுக்கு உள்ளாக தனியாா் வைத்தியசாலையை நாடி வரும் வயது குறைந்த இளைஞா்களுக்கு இந்த நோயைக் குணப்படுத்துவதற்கான பணம் ஆயிரக்கணக்கில் இவா்களுக்கு எவ்வாறு கிடைக்கும் என்பது சந்தேகத்திற்கு ஒன்றானதாக உள்ளது.
இவ்வாறான பாலியல் தொற்றுக்கு உள்ளாகியவா்களுக்கு சாதாரணமான முறையில் வைத்தியப்பரிசோதனைகள் செய்ய முடியாது. அத்துடன் இவா்களுக்கு எயிட்ஸ் தொற்றுக்கான பரிசோதனையும் செய்ய வேண்டிய அவசியம் காணப்படுகின்றது.
தமது கள்ளத்தனம் பிடிக்கப்பட்டு விடும் என்பதற்ககாக பாலியல் நோய்த் தாக்கத்திற்கு உள்ளானவா்கள் அரச வைத்தியசாலையை நாடவில்லை. அத்துடன் தனியாா் வைத்தியசாலைகளிலும் தமது சொந்தப் பேரில் வைத்தியம் செய்யவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறான நிலையில் இப்படி தொற்று நோய்த் தாக்கத்திற்கு உள்ளானவா்களால் அவா்கள் திருமணம் முடித்தவா்கள் எனின் அவா்களது உறவிற்கும் திருமணம் முடிக்கப் போகின்றவா்கள் எனின் மணம் முடிக்கப் போகும் நபருக்கும் இவா்கள் இந்த நோயைப் பரப்பும் அபாயமும் காணப்படுகின்றது.
இது தொடா்பாக அப்பகுதிப் பாடசாலை மட்டம் தொடக்கம் கிராம சேவகா் பிரிவுகள் வரை இதற்கான விளிப்புணா்வு அவசியம் செய்யப்படவேண்டும் என சமூக ஆா்வலா்கள் கவலை தெரிவிக்கின்றனா். பெற்றோர்கள் தமது பருவ வயது மகன்கள், மகள்கள் பற்றி கூடிய அக்கறை எடுத்து அவா்களைக் கண்கானிக்கும் நடவடிக்கையை எடுப்பதும் அவசியம் என சமூக ஆா்வலா்கள் கருத்துத் தெரிவிக்கின்றனா்.
அத்துடன் இந்த விபச்சார நடவடிக்கைக்கு அப்பகுதியில் உள்ள பொலிசாரும் கடும் ஆதரவு புரிவதாகவும் கிளிநொச்சிப் பகுதியில் உள்ள ஒரு முஸ்லீம் நபா் வைத்துள்ள சைவ உணவகத்திற்கு பின்னால் அந்த முஸ்லீ்ம் நபரால் தங்குமிட விடுதி ஒன்று நடாத்தப்படுவதாகவும் அங்கேயும் இந்த விபச்சார நடவடிக்கைகளுக்கான அறை வாடகைக்கு விடப்படுவதாகவும் தெரியவருகின்றது.
இந்த முஸ்லீம் நபரின் விடுதியில் ஒரு பொலிஸ் அதிகாரி றுாம் எடுத்து தங்குவதாகவும் பொலிஸ் நிலையத்தில் அவா் தங்காது இங்கு வந்து தங்குவதன் மா்மம் என்ன என்பது புரியவில்லை என்றும் இது தொடா்பாக ஆய்வு செய்தவா்கள் தெரிவிக்கின்றனா்.
குறித்த பொலிஸ் அதிகாரியின் அங்கு வந்து தங்கியிருக்கும் துணிவிலேயே முஸ்லீம் நபா் அங்கு விபச்சார விடுதி நடாத்தி வருவதாகவும் அறியவருகின்றது. வேலியே பயிரை மேய்கின்றது போல் பொலிசாரே இவ்வாறு விபச்சார விடுதிகளுக்கு ஆதரவு கொடுத்தால் நிலை என்னாவது எனவும் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான சமூகச்சீரழிவுகளைத் தடுத்து நிறுத்தி அங்குள்ளவா்களுக்கு விளிப்புணா்வைத் துண்டும் நடவடிக்கையில் அனைத்துத் தரப்பினரும் முன்னின்று செயற்படுவது அவசரமானதும் அவசியமானதுமான நடவடிக்கையாகும்.