மூன்று நாட்களில் வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

72

 

சந்தானம் தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான நடிகர். இவர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்துள்ள திரைப்படம் வடக்குப்பட்டி ராமசாமி. கார்த்திக் யோகி இப்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தில் சந்தானத்துடன் இணைந்து மெகா ஆகாஷ் நடித்துள்ளார். மேலும் நிழல்கள் ரவி, மாறன், எஸ்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். சுமாரான வரவேற்பை பெற்றுள்ள வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்று பார்க்கலாம்.

மூன்று நாள் வசூல்
முதல் நாள் முடிவில் ரூ. 1.5 கோடி மற்றும் இரண்டாவது முடிவில் ரூ. 1.5 கோடி என்கின்ற கணக்கில் இரண்டு நாட்கள் முடிவில் மொத்தமாக ரூ. 3 கோடிக்கும் மேல் வசூல் செய்திருந்தது.

இந்நிலையில் தற்போது மூன்று நாட்கள் முடிவில் ரூ. 5.5 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. வார இறுதியில் வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் நல்ல வசூல் கிடைத்துள்ளது.

SHARE