கல்கிஸ்ஸை பகுதியில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் எனும் போர்வையில் இயங்கிவந்த விபச்சார விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டதில் பெண் முகாமையாளர் ஒருவரும் மேலும் இரு பெண்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கல்கிஸை ஊழல் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகலுக்கமைய கல்கிஸை நீதிவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணைக்கமைவாக மேற்படி சுற்றிவளைப்பு நடவடிக்கை நேற்றிரவு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அரலகங்வில, ஹிகுரங்கொட , நிகவெரடிய ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 21 , 23 , 36 வயதுகளையுடைய பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸார் சந்தேக நபர்களான பெண்களை கல்கிஸை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன், மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.