சர்வதேச விஞ்ஞானிகள் குழுவொன்று, முன்னைய காலங்களில் பலவகையான புற்றுநோய்களை போக்க பயன்படுத்தப்பட்டFlavopiridol (தொகுக்கப்பட்டFlavonoid), மூளை புற்றுநோயினையும் விரட்ட பயன்படுத்தப்படக் கூடியது என கண்டுபிடித்துள்ளது.
Flavopiridol ஆனது Glioblastomas தொடங்கி பெரும்பாலும் எல்லா வகையான மூளை புற்று நோய்களையும் சமாளிக்கக் கூடியது என தெரிய வருகிறது.
லண்டனில் வெறும் 30 வீதமான Glioblastoma நோயாளர்கள் மட்டுமே, அதன் தாக்கம் அறியப்பட்டதிலிருந்து 2 வருடங்களுக்கு மேலாக வாழ்கின்றனர். 2016 ஆம் ஆண்டளவில் 12,000 நோயாளர்கள் வரையில் அடையாளம் காணப்படலாம் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
லண்டனில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி, Flavopiridol ஆனது Glioblastoma கலங்களை பட்டினிபேட்டு புற்றுநோய் வளர்ச்சியை தடுக்கிறது என தெரியவருகிறது.
இவ் Glioblastoma கலங்கள் உயரளவில் Glucose ஜக் கொண்டுள்ளதால் விரைவாக பரம்பகின்றது. இதனால் இதற்கு மருத்துவர்களால் சிகிச்சையளிப்பது கடினம்.
இவை தமது அநுசேப முறையை தமக்கேற்றால் போல் மாற்றக்கூடியவை. இது அவை விரைவாக, குணப்படுத்த முடியாத அளவுக்க பெருக்கமடைய காரணமாகின்றது.
ஆனால் இப் Flavopiridol ஆனது அக்கலங்களின் சக்தி வழங்கலை நிறுத்தி அவற்றை பெருக விடாமல் தடுக்கிறது.
ஆகையால் இதன் தயாரிப்புகள் வருங்காலத்தில் இது மூளை புற்றுநோய்கெதிராக பயன்பாட்டுக்கு கொண்டுவரக்கூடியது.
முன்னர் இப் Flavopiridol மார்பக, புரோஸ்டேட் புற்றுநோய் போன்ற பல வகையான புற்றுநோய்களுக்கெதிராக பயன்பாட்டிலுள்ளது.