வடஅமெரிக்கா கண்டத்தில் உள்ள மெக்சிகோ நாட்டில் இன்று கடும் நில நடுக்கம் ஏற்பட்டது. இங்குள்ள வெராக்ருஷ் மாகாணத்தில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின.
இதனால் பீதி அடைந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி ரோடுகளில் தஞ்சம் புகுந்தனர்.
தொடக்கத்தில் இங்கு 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் 5.4 ரிக்டர் என உறுதி செய்யப்பட்டது.
வெராக்ருஷ் மாகாணத்தில் சயுலாடி அலீமன் என்ற இடத்தில் இருந்து தென்கிழக்கே 47 கி.மீட்டர் தூரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது 145 கி.மீட்டர் ஆழத்தில் உருவாகியுள்ளது.
இதனால் ஏற்பட்ட சேத விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை.