மெஸ்சியின் அசைக்க முடியாத சாதனையை தூள் தூளாக நொறுக்கிய ரொனால்டோ!

144

 

போர்த்துக்கல் நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ, 801 வெற்றிகளை பெற்ற முதல் கால்பந்து வீரர் என்ற வரலாற்று சாதனையைப் படைத்தார்.

சவுதி புரோ லீக் தொடரின் அல் அஹ்லி சவுதி அணிக்கு எதிரான போட்டியில் அல் நஸர் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) அடித்த வெற்றி கோல் அவரது 879வது கோல் ஆகும்.

அத்துடன் அல் நஸருக்காக அடித்த 50வது கோல் ஆகும். மேலும் இந்த வெற்றியின் மூலம் மெஸ்சியின் இமாலய சாதனையை ரொனால்டோ முறியடித்தார்.

அதாவது, 800 வெற்றிகளுடன் அதிக வெற்றிகளை பெற்ற வீரர் என மெஸ்சி வலம் வந்தார். ஆனால் ரொனால்டோ 801 வெற்றிகளை பெற்றுள்ளார்.

SHARE