மெஸ்ஸியின் Free Kick-ல் அடிபட்டு கதறி அழுத குழந்தை., சமாதானப்படுத்திய தந்தை

117

 

உலகக் கோப்பை ஹீரோ லியோனல் மெஸ்ஸி (Lionel Messi) அடித்த Free Kick-ல் மைதானத்தில் அமர்ந்திருந்த குழந்தையின் மீது பட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்த அக்குழந்தை உடனே கதறி அழுதது. இதன் காணொளி இணையத்தில் வைரலாகிவருகிறது.

HongKong அணிக்கு எதிரான போட்டியில் வெற்றியை தவறவிட்ட இந்த நட்சத்திர கால்பந்து வீரர், ஆர்லாண்டோ சிட்டிக்கு எதிரான போட்டியில் களம் இறங்கினார்.

ஞாயிற்றுக்கிழமை இரவு ஃபோர்ட் லாடர்டேல் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் மெஸ்ஸியின் இண்டர் மியாமி அணி (Inter Miami FC) 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இருப்பினும், இந்த ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் மெஸ்ஸியின் ஃப்ரீ கிக் (Free Kick) ரசிகர்கள் பக்கம் பறந்தது.

பந்து கோல் கம்பத்திற்கு மேல் சென்று நாற்காலியில் அமர்ந்திருந்த குழந்தையின் முகத்தில் மோதியது.

இதனால், அதுவரை உல்லாசமாக இருந்த குழந்தை, திடீரென கதறி அழுதது. அவரது பெற்றோர் குழந்தைக்கு ஆறுதல் கூற முயன்றனர்.

சிறுமியின் தனத்தை அவருக்கு ஆறுதல் சொன்னார். ‘நல்லா இருக்கியா.. ஆனா, மெஸ்ஸி அடித்த பந்து உன்னைத் தாக்கியது. அதில் தவறேதும் இல்லை’ என கூறியுள்ளார். இது மெஸ்ஸி மீதான அவரது அபிமானத்தை பிரதிபலிக்கிறது.

SHARE