மேஜிக் செய்யும் கூகுள் குரோம்

444
இன்டெர்நெட் பயன்படுத்தும் அனைவருக்கும் கூகுள் குரோம் என்பது முக்கியமானதாக இருக்கிறது.ஜிமெயில், பேஸ்புக் முதல் பல பயனுள்ள இணையத்தளங்களை உபயோகிக்க பலரும் பயன்படுத்துவது கூகுள் குரோம் தான். இன்டெர்நெட் பயன்பாட்டிற்கு மட்டுமல்லாமல் பல தந்திரமான விடயமும் இதில் இருக்கிறது.

பிடிஎஃப்

கூகுள் குரோமில் இன்பில்ட் பிடிஎஃப் ரைட்டர் உள்ளது, இதன் மூலம் Ctrl+P கொடுத்து “Save as PDF” என்ற ஆப்ஷனை தெரிவு செய்தால், நீங்கள் தெரிவு செய்த பக்கம் பிடிஎஃப் ஃபைலாக சேவ் செய்து கொள்ள முடியும்.

குரோம் வேகம்

தொடர்ச்சியான பயன்பாடு குரோம் வேகத்தை குறைக்கலாம், இந்த நிலையில் குரோமை ரீஸ்டார்ட் செய்வது சிறந்தது. இல்லை என்றால் குரோம் டூல்ஸ் – டாஸ்க் மேனேஜர் – சென்று அதிக மெமரியை பயன்படுத்தும் வெப்சைட்களில் இருந்து வெளியேற வேண்டும்.

வெப் ஹிஸ்ட்ரி

கூகுள் குரோமின் வெப் ஹிஸ்ட்ரியை டெலீட் செய்ய உங்களுக்கு தேவையான சில பக்கங்களை மட்டும் தெரிவு செய்து டெலீட் செய்து கொள்ளலாம்.

குரோம் எக்ஸ்டென்ஷன்

புதிய வகை குரோம்களில் எக்ஸ்டென்ஷன்களை இன்ஸ்டால் செய்ய முடியாது, இருந்தும் குரோமின் எக்ஸ்டென்ஷன் பக்கத்தில் டெவலப்பர் மோட் ஆப்ஷனை ஆன் செய்து உங்களுக்கு தேவையான எக்ஸ்டென்ஷன்களை சேர்த்து கொள்ளலாம்.

ஷார்ட்கட்கள்

கூகுள் குரோமில் பல வித கீபோர்டு ஷார்ட்கட்கள் கொடுக்கப்பட்டுள்ளது, உங்களுக்கு ஏற்ற ஷார்கட்களை செட் செய்ய அட்ரஸ் பாரில் chrome://extensions என டைப் செய்து பக்கத்தின் கடைசியில் கீபோர்டு ஷார்கட்களை தெரிவு செய்ய வேண்டும்.

குறிப்பு

கூகுள் குரோமில் குறிப்புகளை எடுக்க புதிய டேப் ஒன்றை ஓபன் செய்து அதில் data:text/html, பேஸ்ட் செய்து டைப் செய்ய தொடங்கலாம்.

பாஸ்வேர்டு

மறைத்து வைக்கப்பட்டிருக்கும் பாஸ்வேர்டுகளை மீட்க டெவலப்பர் டூல்ஸ் சென்று பாஸ்வேர்டு ஃபீல்டை தெரிவு செய்து பாஸ்வேர்டை இன்புட் டைப்பில் இருந்து டெக்ஸ்டாக மாற்ற வேண்டும்.

SHARE